விண்வெளியில் முதல் முறையாக சமச்சீரற்ற மூலக்கூறு கண்டுபிடிப்பு.!!

By Meganathan
|

பூமியின் வாழ்வாதாரங்களில் முக்கியமானதாக விளங்கும் மூலக்கருக்களை முதல் முறையாக விண்வெளியில் கண்டறிந்துள்ளனர். முழுவதும் தூசு மற்றும் எரிவாயு நிறைந்த மேகக் கூட்டங்களின் இடையே ப்ராப்பலீன் ஆக்சைடு எனப்படும் மூலக்கூறினை பால்வெளியின் நடுவே கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

01

01

இரத்த சம்பந்தமுடைய மனித கைகளைப் போன்று, பால்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ப்ராப்பலீன் ஆக்சைடு சிராலிட்டி என அழைக்கப்படுகின்றது. சிராலிட்டி என்பதை ஒரு வகை வேதிப்பொருள் ஆகும்.

02

02

மனித மரபணுக்களுக்கு முதுகெலும்பு போல் செயல்படும் ரைபோஸ் வேதிப்பொருள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மூலக்கருவினை மட்டும் உயிரினங்கள் பயன்படுத்துவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் இருந்தது.

03

03

பால்வெளியில் ப்ராப்பலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிராலிட்டி வேதிப்பொருளில் அண்டத் தோற்றம் இருப்பதைக் குறிக்கும் கோட்பாடுகளை வகுக்க வழி செய்துள்ளது.

04

04

விண்வெளியில் ப்ரீபயாடிக் மூலக்கூறு எவ்வாறு உருவாகின்றது, இது உயிரின தோற்றத்தில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு வழி செய்யும் என வேதியியலாளர் ப்ரெட் மெக் கியூரி தெரிவித்துள்ளார்.

05

05

இது போன்ற மூலக்கூறுகள் இதுவரை பூமி மற்றும் நமது சூரிய குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் பால்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

06

06

உயிரனங்களுக்கான அத்தியாவசிய மூலக்கூறுகள் விண்வெளியில் இருக்கும் விண்கற்கள் மற்றும் வால்மீன்களில் இருந்து பூமிக்கு வந்திருக்கலாம் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

07

07

வால்மீன்களில் ப்ரோடீன் செய்ய பயன்படும் அமினோ அமிலத்தினை, மே மாதம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

08

08

புதிய ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூரத்தில் இருக்கும் மூலக்கூறுகளை கண்டுபிடிக்க பயன்படுத்தினர்.

09

09

பால்வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் மூலக்கூறுகள் ரேடியோ அலை போன்று தெரியும்.

10

10

ப்ராப்பலீன் ஆக்சைடு சார்ந்த சிக்னல்கள் குறிப்பிட்ட மூலக்கூறுகள் வலது புறம் அல்லது இடது புறம் சார்ந்தவைகளா என்பதை தீர்மானிக்க முடியவில்லை.

11

11

கைகளின் நிழலை மட்டும் பார்த்து, வலது கை எது இடது கை எது என்பதை எப்படி கூற முடியாதோ அதே போல் தான் தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகளை தீர்மானிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

12

12

இது குறித்த தொடர் ஆய்வுகளில் இந்த மூலக்கூறு குறித்து பல்வேறு இதர தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
molecule, key to life, detected in space for first time Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X