கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பற்றிய சர்ச்சைக்குரிய ஆய்வு.!

|

சர்ச்சைக்குரிய ஆய்வொன்றின் முடிவை தாய்மார்களுக்கான நற்ச்செய்தியென்று கூறுவதா.? அல்லது ஒன்றுமே கூறாமல் மௌனம் மீட்டுவதா என்றே புரியவில்லை.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பற்றிய சர்ச்சைக்குரிய ஆய்வு.!

பொதுவாகவே, அதிகப்படியான மொபைல் பயன்பாடானது உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். அதிலும் கர்ப்பிணி பெண்கள் மொபைல் பயன்படுத்துவதை கண்டால் நம்மில் பலருக்கு பொசுக்கென்று கோபம் வரும். ஏனெனில் மொபைல்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது தாயை மட்டுமின்றி கருவில் உள்ள குழந்தையின் நலத்தை குறிப்பாக மூளையை பாதிக்குமென்ற தெளிவு நம்மில் பெரும்பாலானோர்களுக்கு உண்டு.

நல்லதா.? தீங்கானதா.?

நல்லதா.? தீங்கானதா.?

மொபைல் போன் பயன்பாடு கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதா தீங்கானதா.? என்பது சார்ந்த பல வகையான ஆய்வுகள் "தீங்கானதே" என்ற முடிவுகளை வழங்கியிருக்க - சமீபத்திய ஆய்வொன்று தலைக்கீழான முடிவொன்றை வழங்கி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை

எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை

அதாவது, கர்ப்ப காலத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதினால் தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் எந்தவொரு எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆய்வு விளக்கமளிக்கிறது.

நினைவக செயல்திறன் குறைபாடுகள்

நினைவக செயல்திறன் குறைபாடுகள்

மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்கும் தாய்மார்களோடு ஒப்பிடும் போது மொபைல் போன் பயனர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, 27% லோயர் சென்டன்ஸ் காம்ப்ளெக்ஸ், 14% ரிஸ்க் ஆப் இன் கம்ப்லீட் கிராமர் மற்றும் 31% மூன்று வயதில் வெளிப்படும் மிதமான மொழி பேசுவதில் தாமதம் போன்ற நினைவக செயல்திறன் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியுடன் இணைக்கப்படவில்லை

குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியுடன் இணைக்கப்படவில்லை

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, "கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் மொபைல்போன் பயன்பாட்டுடன் தொடர்புடைய ரேடியோ அதிர்வெண் மின்காந்த புல வெளிப்பாடானது குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியுடன் இணைக்கப்படவில்லை".

பாதகமான விளைவுகள் ஆதரிக்கப்படவில்லை

பாதகமான விளைவுகள் ஆதரிக்கப்படவில்லை

"மொபைல் போன்களால் உந்தப்படும், ரேடியோ அதிர்வெண் மின்காந்த புலங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் சார்ந்த ஆய்வுகளானது, பெரும்பாலும் விலங்குகளின் மீது நிகழ்த்தப்பட்டதின் விளைவாய் உருவான சீரற்ற முடிவுகளாகும். எங்களின் ஆய்வில், கர்ப்ப காலத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதன் காரணமாக குழந்தையின் மொழி, தகவல் தொடர்பு மற்றும் மோட்டார் திறன்கள் மீது ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆதரிக்கப்படவில்லை" என்கிறார் நார்வே நாட்டின் பொது சுகாதார நிறுவனத்தின் ஆய்வாசிரியர் டாக்டர் எலனி பப்பாடோபோலூவ்.

தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவே இந்த ஆய்வு

தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவே இந்த ஆய்வு

சுமார் 45,389 தாய்-குழந்தை ஜோடிகள் மீதான பகுப்பாய்வு மற்றும் கர்ப்பகாலத்தின் போதும், தாயிடமிருந்தும் மற்றும் குழந்தைகளிடமிருந்தும் சேகரிசேகரிக்கப்பட்ட தரவு, அதன் பின்னர் குழந்தைகளின் மூன்று மற்றும் ஐந்து வயது வரையிலான தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவே இந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மறையான (பாசிட்டிவ்) தாக்கம்

நேர்மறையான (பாசிட்டிவ்) தாக்கம்

நார்வே நாட்டின் பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் ஜான் அலெக்ஸாண்டர் கூறுகையில், "தாய்ப்பால் கொடுக்கும் போது நிகழும் மொபைல் போன் பயன்பாடானது, உண்மையில் நேர்மறையான (பாசிட்டிவ்) தாக்கத்தை ஏற்படுத்தலாமென்பதை முதன்முறையாக எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும் குறிப்பாக, கர்ப்ப காலத்தில் போது நிகழ்த்தப்படும் மொபைல் போன் பயன்பாடானது, குழந்தைகளின் மூன்று வயதில் வெளிப்படும் மிதமான மொழி பேசுவதில் ஏற்படும் தாமதம் போன்ற நினைவக செயல்திறன் சிக்கல்களை குறைக்கிறதென்பது மிகவும் சுவாரசியமான முடிவாகும்" என்கிறார்.

நோக்கம் கொண்ட தசைகளின் துல்லியமான இயக்கம்

நோக்கம் கொண்ட தசைகளின் துல்லியமான இயக்கம்

ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் நோக்கம் கொண்ட தசைகளின் துல்லியமான இயக்கத்தையே மோட்டார் செயல்திறன் என்கிறோம். மொபைல் போன்களை பயன்படுத்தாத பயனாளர்களுக்கு பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ​​மொபைல் போன் பயனர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மூன்று வயதில் ஏற்படும் மோட்டார் செயல்திறன் சார்ந்த குறைபாடுகள் 18 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mobile phone during pregnancy may not harm your baby’s brain. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X