Home
Scitech

இந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து! இதுதான் காரணம்.!

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்தியா செயற்கைகோள் அழிப்பு ஆயுதத்தை சோதனை செய்தது. மிஷன் சக்தி என அழைக்கப்படும் இந்த திட்டத்தில், சுற்றுவட்டப்பாதையில் உள்ள உளவு செயற்கைகோள்கள் அல்லது மற்ற பொருட்களை அழிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது.

இந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து! இதுதான் காரணம்.!

அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தாலும், துரதிஷ்டவசமாக அது மற்றொரு தீவிரமான பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

 மிஷன் எளிதாகவே இருந்தது

மிஷன் எளிதாகவே இருந்தது

கடந்த மார்ச் 27 அன்று நிலத்திலிருந்து ஏவுகணையை நாம் ஏவியபோது அந்த மிஷன் எளிதாகவே இருந்தது. கீழ் சுற்றுவட்டப்பாதையில் இருந்த சோதனை செயற்கைகோளை அழிக்க வேண்டும். அதையும் வெற்றிகரமாக நாம் செய்தோம். அதை அழித்தது மட்டுமின்றி நமது கிரகத்தை சுற்றியுள்ள சுற்றுவட்டப்பாதையில் ஏகப்பட்ட கூர்மையான குப்பைகளை வீசியுள்ளோம்.

குறைந்தபட்சம் 100 துண்டுகள்

குறைந்தபட்சம் 100 துண்டுகள்

அப்போதிருந்து அந்த குப்பைகளை கண்காணித்துவரும் அமெரிக்க விமானப்படை, அவை பூமியைச்சுற்றி மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் நகர்வதாக கூறியுள்ளது. அவற்றை நம்மால் நிறுத்தமுடியாது என்பதால், கண்காணிக்க மட்டுமே முடியும். ஆனால் இவை மற்றொரு செயற்கைகோளுடன் மோதினால், அது சேதமடையலாம் அல்லது முற்றிலும் பயனற்றதாக கூட மாறலாம்.

ஏற்கனவே 22,000 குப்பை துண்டுகள் நிரம்பியுள்ளன

ஏற்கனவே 22,000 குப்பை துண்டுகள் நிரம்பியுள்ளன

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் கணக்குபடி, விண்வெளியில் ஏற்கனவே 22,000 குப்பை துண்டுகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொன்றும் கிரிக்கெட் பந்தின் அளவே இருந்தாலும், அவை பயணிக்கும் வேகத்தை கருத்தில் கொண்டால் பிரம்மிக்கத்தக்க சேதத்தை விளைவிக்கும். இவையனைத்தும் அமெரிக்க விமானப்படையின் 18வது விண்வெளி கட்டுப்பாட்டுப் படை கண்காணித்து வந்தாலும், அதிலும் ஒரு தடை உள்ளது. நாம் ஏசாட் பரிசோதனைகள் செய்யும்போது, வெடிக்கும் செயற்கைகோள்கள் உருவாக்கும் குப்பைகள் இன்னும் சிறிதான இருந்தால், அவற்றை கண்காணிப்பு கடினம் மற்றும் அவை ஆபத்தானதும் கூட.

 சிக்கல்கள் என்னென்ன?

சிக்கல்கள் என்னென்ன?

இலக்கை தாக்கும்போது வெளியாகும் குப்பைகளை குறைக்க, கீழ் சுற்றுவட்டப்பாதையிலேயே வெறும் 300 கிமீ உயரத்தில் தாக்குமாறு பரிசோதிக்கப்பட்டது. இதில் நல்ல விசயம் என்னவெனில் அதன் பெரும்பாலான குப்பைகள் கீழே இழுக்கப்பட்டு வானிலேயே எரிந்துசாம்பலாகின. இந்த முறையில் அனைத்து குப்பைகளையும் 45நாட்களில் நீக்கலாம் என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறியுள்ளார்.

அமெரிக்க விமானப்படை

அமெரிக்க விமானப்படை

பெரும்பாலான குப்பைகள் இல்லாமல் போயுள்ளன என்கிறது அமெரிக்க விமானப்படை. "இந்த நிகழ்வின்போது நாங்கள் கண்காணித்த 400க்கும் மேற்பட்ட பொருட்களில் 300 பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததை உறுதிப்படுத்தமுடியும்" என்கிறார் அதன் செய்திதொடர்பாளர்.

 கீழ்நோக்கி நகர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்

கீழ்நோக்கி நகர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்

எனினும் ஏசாட் சோதனையின்போது உயர் சுற்றுவட்டப்பாதையில் தூக்கியெறியப்பட்ட விண்வெளி குப்பைகள், வளிமண்டலத்தில் கீழ்நோக்கி நகர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதையே இதுகுறிக்கிறது. எனவே இவை சர்வதேச விண்வெளி மையத்திற்கும் ,அதை தாண்டியுள்ள செயற்கைகோள்களுக்கும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Mission Shakti's Space Debris Poses Danger To ISS After Months : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X