செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களை தேடும் மிஷன்! கண்டுபிடித்தது என்ன?
2010 விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸோமார்ஸ் ரோவர் விண்கலம் மார்ச்2021க்கு பிறகு செவ்வாயில் தரையிறங்கி, ஏதேனும் உயிரினம் அங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதா என்பதை ,செவ்வாய் பரப்பை துளையிட்டு ஆராயவுள்ளது
செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டறியும் பொருட்டு செயல்படுத்தப்படும் ரோபோட் மிஷனின் தரையிறங்கும் தளத்தை விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். 2010 விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸோமார்ஸ் ரோவர் விண்கலம் மார்ச்2021க்கு பிறகு செவ்வாயில் தரையிறங்கி, ஏதேனும் உயிரினம் அங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதா என்பதை ,செவ்வாய் பரப்பை துளையிட்டு ஆராயவுள்ளது.

ஐரோப்பிய -ரஷ்ய கூட்டுத்திட்டமான இதில் பணியாற்றும் வல்லுநர்கள், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலைகள் இருந்திருக்கலாம் என கருதும் 'ஆக்ஸியா ப்ளானம்' எனும் பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தென்புற ஹைலேண்ட்
தென்புற ஹைலேண்ட் மற்றும் வடபுற லோலேண்ட் இடையே ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தால் உருவான கால்வாய் 'மாவ்ரத் வேலீஸ்' வல்லுநர்களின் மற்றொரு முக்கிய தேர்வாக உள்ளது.
குரோமிலின் க்ரேடர்-க்கு வடபுறம், அரேபியா டெர்ரா ஹைலேண்ட் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள அரம் டோர்சம் என்ற இடமும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தலைமையால் இந்த முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு இது அதிகாரப்பூர்வமாக இறுதிசெய்யப்படும்.

போராசிரியர் ஜான் பிரிட்ஜ்ஸ்
இதுதொடர்பாக இக்குழுவின் உறுப்பினரான லீசெஸ்டர் பல்கலைகழக போராசிரியர் ஜான் பிரிட்ஜ்ஸ் கூறுகையில், 4 வருட கவனமான ஆய்வுக்கு பின்னர் தரையிறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நல்ல வண்டல் இடம் ரோவர் துளையிடுவதற்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார்.

நீர்பிடிப்பு பகுதி
" உயிரினங்கள் வாழ்ந்திருக்கும் பகுதிகள் உள்ளிட்ட, மிகப்பெரிய பல்வேறு நிலப்பரப்பிலிருந்தும் நீண்ட காலமாக, இந்த நீர்பிடிப்பு பகுதிகளுக்கு ஏராளமான சேர்மங்கள் வந்துசேர்ந்து பிடிந்திருக்கும். எனவே மிகப்பெரிய விஞ்ஞானிகள் குழு இந்த திட்டத்தில் பரிந்துரைத்தல், வகைபிரித்தல் மற்றும் இடங்களை தேர்வுசெய்தல் போன்றவற்றில் பணியாற்றியுள்ளது அந்த அனைத்து இடங்களிலும் கவர்நதிழுக்கக்கூடிய அம்சங்கள் இருந்தாலும், அறிவியல் மற்றும் பொறியியல் அம்சங்களின் அடிப்படையில் தெளிவான வெற்றியை பெற்றுள்ளது ஆக்ஸியா ப்ளானம் " என்கிறார் ஜான்.

களிமண்
களிமண் அடுக்குகளும், தாதுக்களும் இந்த பகுதியில் கிடைப்பதால், ஒரு காலத்தில் இது மிகப்பெரிய ஏரியாக இருந்திருக்க வேண்டும். எனவே ரோவர் செவ்வாயின் தரைப்பரப்பில் இருந்து 2மீட்டர் துளையிட்டு, 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தண்ணீர் இருந்த போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் எக்ஸோமார்ஸ் திட்ட விஞ்ஞானியான ஜோர்க் வாகோ கூறுகையில், எக்ஸோமார்ஸ் உதவியுடன் உயிரி அடையாளங்களை நாங்கள் தேடுகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களும் பழங்கால தண்ணீர் நிறைந்த இடங்களை ஆராய்வதற்கான அறிவியல் வாய்ப்புகளை அளித்த போதிலும், ஆக்ஸியா ப்ளானம் பெரும்பாலான வாக்குகளை பெற்று தேர்வாகியுள்ளது" என்றார்.

செவ்வாய்
கடந்தகாலத்தில் செவ்வாயில் ரோவரை தரையிருக்குவது என்பது மிக கடினமான ஒன்றாக இருந்த காரணத்தால், எந்த இடத்தில் தரையிறங்க சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்பதை பொறுத்து இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன.
ரோபோட் செவ்வாய் பரப்பில் தரையிறங்கும் போது வேகத்தை குறைக்கும் வகையில் பாராசூட்டிற்கு அதிக நேரத்தை ஆக்ஸியா ப்ளானம் பகுதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் சூ ஹார்னே
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்வெளி ஆராய்தல் பிரிவு தலைவர் சூ ஹார்னே கூறுகையில், "எங்களது முடிவான நோக்கம் தெளிவானது மற்றும் அது மிகுந்த உற்சாகமாளிக்கக்கூடியது"என்கிறார்.


Click it and Unblock the Notifications