இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன.! மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன?

|

உலகில் இருக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கும் மற்றும் நாடுகளுக்கும் உதவியாக இருக்கின்றன என்றே கூறலாம். அதுவும் இப்போது வந்துள்ள ரோபோக்கள் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ரோபோக்கள்

ரோபோக்கள்

இந்நிலையில் ரோபோக்கள் இப்போது இந்திய ராணுவத்திலும் நுழைந்திருக்கின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது,அதாவது காஷ்மீரில் கூடிய விரைவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைக் கட்டுக்குள் வைக்க(Counter Insurgency Operation) உதவப்போகின்றனரோபோக்கள்.

25வருடம்

இதற்காக நமது பாதுகாப்புத்துறை 550ரோபோக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது, இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பத்துவிட்டன, அதிலும் வாங்கவிருக்கும் ரோபோ மாடல்கள் குறைந்தது 25வருடம் உழைக்கக்கூடியாதாக இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.! அதிபர் புடின் அறிவிப்பு.!2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.! அதிபர் புடின் அறிவிப்பு.!

 ரோபோக்கள் படிகள்

இந்த ரோபோக்கள் படிகள் ஏறக்கூடியதாகவும் வழியில் இருக்கும் தடங்கல்களை கண்டறிந்து தவிர்க்ககூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தீவிரவாத பகுதிகளில் கிரனேட் வகை குண்டுகளை எரியக்கூடிய திறனும் இவற்றில் இருக்கும் என க்கூறப்படுகிறது.

அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதிஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி

உயிரிழப்பு குறையும்

மேலும் இதுபோன்ற ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு குறையும் என்றுநம்பப்படுகிறது. பின்பு இதுகுறித்து வரும் நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் இருக்கும் ரோபோ தயாரிப்பாளர்கள்
பலரையும் அழைத்துள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

 வளர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பில் தங்களது ரோபோவின் செயல்பாடுகள்குறித்து விளக்க வாய்ப்பு வழங்கப்படும். பின்பு இந்த முயற்சி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை குறைப்பதாகும்இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலைகளை வளர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

 மாறக்கூடியதாக இருக்க வேண்டும்

குறிப்பாக ரோபோக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் உதவியாக இருப்பது அவசியம். இவற்றின் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. பின்பு ரோபோக்கள் அதிக எடை இல்லமால், எளிதில்இடம் மாறக்கூடியதாக இருக்க வேண்டும்.

150 முதல் 200மீட்டர் வரை

மேலும் குண்டுகளை தடுக்கக்கூடியதாகவும், அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் இவை அமைய வேண்டும் எனவும்,பின்பு படங்கள் மற்றும் வீடியோக்களை 150 முதல் 200மீட்டர் வரை அனுப்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Ministry of Defence to buy Robots for Indian Army in Kashmir : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X