டைம் மெஷின் இப்படியும் செய்யலாம், உண்மையை விளக்கிய ஆண்ட்ரூ டி பசாகியோ..!!
பெயரைப் படித்ததும், யார் இவர் என்ற கேள்வி தான் பெரும்பாலானோருக்கும் எழும். ஆண்ட்ரூ டி பசாகியோ அமெரிக்காவில் வெற்றிகரமான செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர் ஆவார். தான் ஒரு காலப்பயணி என்றும் எதிர்காலத்தில் 2045 ஆம் ஆண்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்தார். டெலிபோர்டேஷன் அதாவது கற்பனை பொருட்பெயர்வு முறையைப் பயன்படுத்திப் பூமி கிரகத்தின் தூதராகச் செவ்வாய் கிரகம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
டைம் டிராவல் அதாவது காலப்பயணம் மேற்கொள்ள உதவும் எட்டு வழிமுறைகளை ஆண்ட்ரூ டி பசாகியோ தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆண்ட்ரூ தெரிவித்த எட்டு வழிமுறைகள் ஸ்லைடர்களில்.!

ரிமோட் வியூவிங்
அமெரிக்க ராணுவத்தால் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரிமோட் வியூவிங் தொழில்நுட்பம் மனிதர்களின் மனதை நிழல் நேரத்தில் வெகு தூரம் பயணிக்க வழி செய்யும். வெகு தூரம் என்பது விண்வெளியைக் கடந்தும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமானுடம்
இது பண்டைய காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த அமானுட வழக்கம் ஆகும். இந்த வழிமுறை நமது ஊர்களில் கூடு விட்டுக் கூடு செல்வது என்றும் கூறுவர். ஆனால் இங்கு ஆழ்ந்த உறக்கத்தில் தெளிவான கனவில் இருக்கும் போது ஆஸ்ட்ரல் உலகிற்குச் செல்ல முடியும்.

மான்டௌக் நாற்காலி
மான்டௌக் நாற்காலி வேற்றுக்கிரகப் பறக்கும் தட்டில் இருந்து தப்பிக்கப் பின்னோக்குப் பொறியியல் முறை இயங்கும். இதைப் பயன்படுத்தி விமானிகள் ஆபத்துக் காலங்களில் காந்த கடத்துகை முறையில் மனித உணர்வுகளை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்.

டெலிபோர்டர்
நிகோலா டெஸ்லா கண்டறிந்த டெலிபோர்டர் கருவியானது வோர்டல் டனல் மூலம் வெளிநேர வேகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சில நொடிகளில் பயணிக்க முடியும்.

க்ரோனோவிஸர்
இதனை வேடிகனை சேர்ந்த பெலெக்ரினோ எர்நெட்டி மற்றும் ஆகஸ்டினோ கிமெல்லி ஆகியோர் கண்டறிந்தனர். இது தெரியாத்தனமாகக் கண்டறியப்பட்ட வழிமுறை ஆகும். இந்தக் கருவி ஹாலோகிராம் பயன்படுத்திக் காலப்பயணி கேட்கும் சத்தங்களைக் கேட்க வழி செய்தது. மேம்படுத்தப்பட்ட க்ரோனோவிஸர் கருவி பார்க்க தொலைக்காட்சி போன்று இருந்ததோடு அமெரிக்காவின் டார்பா மூலம் பல்வேறு நிறங்களில் பார்க்கும் படி வடிவமைக்கப்பட்டது.

ஸ்டார்கேட்
இது டெஸ்லா டெலிபோர்டர் ஆகும். இதைப் பயன்படுத்தி வோர்டல் சுரங்கத்தினுள் பயணிக்கும் போது சுரங்கத்தின் சுவர்களை டெலிபோர்டிங் செய்பவரால் பார்க்க முடியும். அதிகப்படியான நேரத்தைச் சுரங்கத்தில் கழிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பிளாஸ்மா கன்ஃபைன்மென்ட் சேம்பர்
ஸ்டிர்லிங் கோல்கேட் கண்டறிந்த இந்தக் கருவி ரேடியோஆக்டிவ் பிளாஸ்மா பயன்படுத்திக் காலப்பயணியை வொர்ம்ஹோலினுள் பயணிக்க வழி செய்யும். இதைப் பயன்படுத்திப் பசியாகோ 1972 ஆண்டில் இருந்து 1863 ஆம் ஆண்டிற்குக் காலப்பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்ப் ரூம்
ஏரோநாடிக்கல் ரீபொசிஷனிங் சேம்பர் கருவியானது வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்த பறக்கும் தட்டு இயந்திர முறையைத் தழுவி பின்னோக்குப் பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்டதாகும்.


Click it and Unblock the Notifications