குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ!

|

சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் விண்கற்களும், உலோக பாறைகளும் மிதந்து கொண்டிருக்கும். அப்படி விண்வெளியில் மிதந்துக் கொண்டிருக்கும் விண்கற்கள் அவ்வப்போது பூமியின் புவிவட்டப் பாதைக்குள் வந்துவிடும். அதேபோல் சில விண்கற்களின் சிறு பாகங்கள் பூமியில் வந்து விழுவதும் அவ்வப்போது நிகழும். புவிவட்டப்பாதைக்குள் வரும் விண்கற்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகத் துள்ளியமாக கவனித்து அதுகுறித்த தகவலை சேகரித்து வருவார்கள்.

குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ!

அப்படி சமீபத்தில் புவிவட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கல் பூமியை தாக்க வாய்ப்பிருப்பதாக நாசா கணித்து கூறியது. இந்த விண்கல்லானது பூமியில் இருந்து 30 லட்சம் மைல் தூரத்தில் இருப்பதால் பூமிக்கு பாதிப்பு இல்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துக் கூறுகின்றனர். 13,500 அடி சுற்றளவு கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்க நேர்ந்தால் அந்த தினத்தை நாசா கணித்து கூறியது. அது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியாகும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் லூயிஸ் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் எரியும் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கேமரா மற்றும் அந்த பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

வோடபோன் சேவை நிறுத்தமா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவோடபோன் சேவை நிறுத்தமா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

courtesy: CNN

Best Mobiles in India

English summary
meteorite that fell into the St. Louis residential area

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X