வியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.!

|

பிரபஞ்சத்தில் நடக்கும் பல அரிய இயற்கை நிகழ்வுகள் சில நொடி பொழுதில் நடந்து முடிந்து விடுகின்றது. எனவே அதனை காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் அந்நிகழ்வுகளை சேகரித்து வைப்பது மட்டுமின்றி அனைவருக்கும் பகிரவும் முடிகிறது.

ஏதன் மற்றும் ஜார்ஜ் சாப்பெல் பதிவு செய்த வீடியோ

ஏதன் மற்றும் ஜார்ஜ் சாப்பெல் பதிவு செய்த வீடியோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடக்கநிலை வானியல் நிபுணர்களாக பணிபுரிந்து வரும் ஏதன் மற்றும் ஜார்ஜ் சாப்பெல் என்பவர்கள் வியாழன் கிரகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வை பதிவு செய்துள்ளனர்.

விண்கல் தாக்கம்

விண்கல் தாக்கம்

ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் வியாழன் கிரகத்தின் தென் பூமத்திய ரேகை பகுதியில் ஒரு திடீர் வெளிச்சம் நொடி பொழுதில் வந்து மறைந்ததை ஏதன் மற்றும் சாப்பெல் பதிவு செய்தனர். இந்த வெளிச்சம் வியாழன் கிரகத்தின் மேல் ஏதேனும் மீட்டீயார் (meteor) என்று சொல்லப்படக்கூடிய விண்கற்கள் மோதியதால் வந்த தாக்கமாக கூட இருக்கலாம்.

<strong>வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!</strong>வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

ஹப்பில் ஸ்பேஸ் தொலைநோக்கி

ஹப்பில் ஸ்பேஸ் தொலைநோக்கி

இந்த பதிவினை சாப்பெல் தனது ட்விட்டர் பக்கமான "சாப்பெல் ஆஸ்ட்ரோ" வில் பதிவேற்றம் செய்துள்ளார். நாசாவின் "ஹப்பில் ஸ்பேஸ் தொலைநோக்கி" (Hubble Space Telescope) மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் புகைப்படத்திலும் விண்கல் மோதியதற்கான சுவடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 அதிக ஈர்ப்பு விசை

அதிக ஈர்ப்பு விசை

இந்த நிகழ்வை பற்றி ஏதன் மற்றும் சாப்பெல் கூறுகையில், விடியோவை பதிவு செய்து முடித்த பிறகே அவர்கள் இந்த நிகழ்வை கவனித்ததாக தெரிவித்தனர். இத்தகைய நிகழ்வு விண்வெளியில் நடப்பது சாதாரணம் தான் ஆனால் அதை சரியான நேரத்தில் பதிவு செய்வது அரிது. வியாழன் கிரகத்திற்கு அதிக ஈர்ப்பு விசை இருப்பதினால் அதன் அருகில் இருக்கும் பொருட்களை சுலபமாக ஈர்க்கவல்லது.

<strong>நீங்கள் அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!</strong>நீங்கள் அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

மிகுந்த உற்சாகம்

இதனால் ஏதேனும் விண்கல் ஈர்க்கப்பட்டு அதன் தாக்குதலினால் இந்த திடீர் வெளிச்சம் நிகழ்ந்திருக்க கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிகழ்வுகளை கண்டறிவதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட "டிடெக்ட்" (detect) என்னும் மென்பொருள் உதவி கொண்டுதான் இந்த பதிவை அவர்கள் செய்துள்ளனர். தங்களது ஆராய்ச்சியின் ஆரம்பக்காலத்திலேயே இத்தகைய அரிய நிகழ்வை பதிவு செய்ததில் அவர்கள் இருவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Meteor Slammed Into Jupiter So Hard We Saw It From Earth :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X