140 அசத்தலான கண்டுபிடிப்புகள்! இந்தியாவின் எலன் மஸ்க் இவர்தான்.!

|

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பர். ஆனால் புதுமையானவற்றை கண்டுபிடிக்கும் போது அவற்றை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளால் அது விலையுயர்ந்ததாக மாறிவிடுகிறது.


ஆனால் இந்தியாவைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பாளர் அதை உடைத்தெறிந்து, சில அற்புதமான புதுமை படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவை மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவது மட்டுமின்றி, மலிவான விலையில் கிடைக்கிறது மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு எளிதில் அணுகும் வகையிலும் உள்ளது. மேலும் அவற்றிற்கு எந்த காப்புரிமையும் இல்லை என்பதால், யார்வேண்டுமானாலும் இலவசமாக மறுஉருவாக்கம் செய்துகொள்ளலாம்.

உத்தாப் பரலி

உத்தாப் பரலி

இவரது தனித்துவமான யோசனைகள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து உருவாக்குவதற்கு பெயர்பெற்றவை. இவர் 2019ல் பத்மஶ்ரீ விருது உள்பட் இந்தியா மற்றும் உலகளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர் தான் இந்தியாவின் எலன் மஸ்க், நமது ஜுகாட் கிங் என அழைக்கப்படும் உத்தாப் பரலி.


அசாமில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி பிறந்த இந்த கண்டுபிடிப்பாளர், 140க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவர் ஜோர்காட் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படிக்கும்போது குடும்பத்தின் கடன் மற்றும் நிதி நிலைமை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

 இயந்திரத்தை வடிவமைத்தார்

இயந்திரத்தை வடிவமைத்தார்

கடனை அடைக்க தனது தந்தைக்கு உதவும் பொருட்டு, தேயிலை தொழிலாளர்களுக்கான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் தொழிலை சொந்தமாக தொடங்கினார். அதற்கான இயந்திரத்தின் விலை அப்போதே சுமார் ரூ6லட்சம் என்ற நிலையில், அவ்வளவு செலுத்த விரும்பாமல் வெறும் ரூ67,000 செலவில் தானே அந்த இயந்திரத்தை வடிவமைத்தார்.

மக்களின் வாழ்க்கையை மேலும் எளிமையாக்க அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை மலிவான விலையில் உருவாக்க இது அவருக்கு தூண்டுகோலாக இருந்தது.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!

சில சிறப்பான படைப்புகள்

சில சிறப்பான படைப்புகள்

விளைநிலங்களில் பணியாற்றும் விவசாயிகளுக்காக, இரும்பு குழாய் வடிவிலான நாற்று நடும் கருவியை அவர் உருவாக்கினார். இதை மேலும் மெருகூட்டி விதை விதைக்கும் இயந்திரமாகவும், ஒரேநேரத்தில் அதிகளவு நாற்றுநடும் இயந்திரமாகவும் மாற்றினார். எலன் மஸ்க்-ன் டெஸ்லா படைப்புகள் போலவே, இவரின் இந்த கண்டுபிடிப்பிற்கும் காப்புரிமை வாங்கவில்லை.

இவர் உருவாக்கிய வெறும் ரூ600 மதிப்புள்ள திறனான விறகு அடுப்பு மூலம் அதிக விறகு இல்லாமல் சமைக்க முடியும். பாக்கு கொட்டைகளை பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள் அவர்களது விரல்களை வெட்டிக்கொள்வதை பார்த்த உத்தாப், ஒரு நிமிடத்தில் 100 பாக்குகொட்டைகளை பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கினார்.

 மாதுளை பிரித்தெடுக்கும் கருவி

மாதுளை பிரித்தெடுக்கும் கருவி

இவரது முக்கியமான சில படைப்புகள் மாற்றுத்திறனாளிகளை தனித்து இயங்க உதவியது. கை, கால் இல்லாதவர்கள் உணவு உண்ண, கோப்பைகளை பிடிக்க, எழுத, எளிதான மூட்டு அட்டையை வைத்து மலிவான நவீன தீர்வுகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் ஒரு கையில் கையாளும் வகையிலான செங்கல் தயாரிக்கும் கருவியையும் இவர் உருவாக்கியுள்ளார். இவரது மற்றொரு பிரபலமான படைப்பான மாதுளை பிரித்தெடுக்கும் கருவி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் விற்பனையாகிறது.

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்

பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்

இவரது புதுமையான படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ள நிலையில், 2012ல் மாதுளை பிரித்தெடுக்கும் கருவி மற்றும் 2013ல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தடுப்பு நாற்காலிக்காக இரு நாசா விருதுகளையும் பெற்றுள்ளார்.


மற்றவர்களுக்கு உதவுவது அடிப்படை உரிமை என எண்ணுகிறார் உத்தாப். தனது வருமானத்தின் மூலம் , வருமானமில்லா விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட் 21குடும்பங்களுக்கு உதவுகிறார். வருங்காலத்தில் ஒவ்வொரு இடத்திலும் முதியோர் இல்லங்களை தொடங்க விரும்புகிறார். நிதியுதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் திறந்த நிதிமூலத்தையும் துவங்கியுள்ள இவர், பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

English summary
Meet 'Elon Musk Of India'! The Man Behind 140 Exceptional Inventions : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X