இஸ்ரோ வரை சாதித்த கொங்கு மகன்: மயில்சாமி அண்ணாதுரையின் மற்றொரு முகம்?

1982ம் ஆண்டு இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தில் சாதாரண ஆய்வராக பணியில் சேர்ந்தார். பிறகு அவரின் அற்புத செயல்பட்டாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வின் முக்கிய வ

|

இன்று உலகமே இஸ்ரோவை (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) வியந்து பார்ப்பதற்கு காரணம் நம் பொள்ளாச்சியை சேர்ந்த விஞ்ஞானி அண்ணாதுரை மயில்சாமியால் தான் சாத்தியம் ஆயிற்று.

இஸ்ரோ வரை சாதித்த கொங்கு மகன்: மயில்சாமி அண்ணாதுரையின் மற்றொரு முகம்?

இவர் தலைமையில் அனுப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் தான் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டுபிடித்து உலகறிய செய்தது. இதனால் இந்திய விண்வெளி துறை மீது அனைத்து நாடுகளின் பார்வையும் திரும்பியது. இவர் குறித்த வாழ்கையை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

பொள்ளாச்சியில் பிறந்தவர்:

பொள்ளாச்சியில் பிறந்தவர்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோதவாடி கிராமத்தில், ஆசிரியர் மயில்சாமி- பாலசரசுவதி ஆகியோர் 1958ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிறந்தார். 11ம் வகுப்பு வரை தாய் மொழியில் படித்தார். பிறகு பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், இளநிலை பொறியியல் படிப்படை அரசு தொழில் நுட்பக்கல்லூரியிலும், முதுநிலை பொறியியல் படிப்பை பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியி மற்றும் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் படித்து படித்தார்.

இஸ்ரோவில் வேலை:

இஸ்ரோவில் வேலை:

1982ம் ஆண்டு இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தில் சாதாரண ஆய்வராக பணியில் சேர்ந்தார். பிறகு அவரின் அற்புத செயல்பட்டாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வின் முக்கிய விஞ்ஞானியாக உருவெடுத்தார்.

திட்ட இயக்குனர்:

திட்ட இயக்குனர்:

மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் சந்திராயன்-1, சந்திராயன்-2, மங்கள்யான்-2 உள்ளிட்ட 9 கோள்களுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற இவருக்கு கடந்த வாரம் பெங்களூரில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சந்திராயன்-1:

சந்திராயன்-1:

சந்திராயன்-1 என்ற விண்கலம் கடந்த 2008 ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட இந்திய விண்வெளி தளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் ஏவப்பட்டது. இதற்கு திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். சந்திராயன் விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் உலகமே திரும்பி பார்த்தது. இதைத்தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மீது உலகத்தின் பார்வை திரும்பியது. இதைத்தொடர்ந்து சந்திராயன்-2 ஏவப்பட இருக்கிறது.

மங்கள்யான்:

மங்கள்யான்:

கடந்த 2003ம் ஆண்டு நம்பவம் 5ம் தேதி மங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக சேர்ந்தது. முதன் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக செயற்கைகோளை அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா.

இளைய காலம்:

இளைய காலம்:

மயில்சாமி அண்ணாதுரை ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுவது. அவர்களை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அப்துல்கலாம் போலே மாணவர்களுடன் நேரத்தை செலவிடுவதால் இவரை இளைய காலம் என்று அழைக்கப்படுகிறார்.

கையருகே நிலா:

கையருகே நிலா:

தற்போது இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் கையருகே நிலா என்னும் தலைப்பில் அவரின் தொடங்க நாட்கள், சந்திராயன் பணி உள்ளிட்டவைகள் குறித்து நூலை எழுதியுள்ளார்.

தமிழ் ஆர்வலர்:

தமிழ் ஆர்வலர்:

இவர் தமிழ் மீது ஆவர் கொண்டதால், தமிழிலும் கட்டுரை எழுதல், சிறந்த பேச்சாளர், கவிஞராகவும் இருக்கிறார். இவர் பல்வேறு தமிழ்சங்களிலும், சிங்கப்பூர், மலேசியா பல்வேறு வெளிநாடுகளிலும் தமிழ் குறித்து உரையாற்றி வருகிறார்.

50க்கும் மேற்பட்ட விருதுகள்:

50க்கும் மேற்பட்ட விருதுகள்:

கர்மவீரர் காமராஜர் நினைவு விருது, 4 இந்திய விண்வெளி ஆய்வு, சந்திராயன் 1 திட்டத்திற்கான மூன்று விருதுகள், ஆஸ்திரேலியா-இந்தியா நினைவு அறிவியல் விருது, கொங்கு சாதனையாளர் விருது உட்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Best Mobiles in India

English summary
mayilsamy annadurai isro director achievements : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X