"நீங்கள் பார்ப்பதற்கு உரிமை இல்லை" எனக்கூறி அழிக்கப்பட்ட புகைப்படங்களில் என்ன இருக்கிறது.?

கிழியும் நாசாவின் முகமூடி.!

By Gizbot Bureau
|

பூரணமாக நிரூபிக்கப்படாத ஒரு விடயம் 'மறுபடியும் மறுபடியும்' உண்மைதான் தான் வாதாடப்படுகிறது என்றால், அது மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது என்றால் அது பொய்யாக இருக்கவும் சிறு வாய்ப்பு உள்ளது என்பது நிதர்சனம்.

அப்படியாக உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குறிய ஒரு நிகழ்வுதான் - 'அமெரிக்காவின் முதல் நிலவு பயணம்'. அந்த ஒட்டுமொத்த நிகழ்வே ஒரு நாடகம் என்று வாதாடும் கூட்டம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் ஏகப்பட்ட மர்மங்கள் மறைக்கப்படுகின்றது என்று ஒரு கூட்டம் வாதாடுகிறது.

பின்னர் தான் கிளம்பின ஆயிரக்கணக்காக கேள்விகள்.!

பின்னர் தான் கிளம்பின ஆயிரக்கணக்காக கேள்விகள்.!

நிலவு பயணம் குறித்த சதியாலோசனை கோட்பாடுகளின் தொல்லை தாங்க முடியாமல் நாசா அவ்வப்போது அதன் மூன் லேன்டிங் சார்ந்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வெளியிடும். அதற்கு பின்னர் தான் கிளம்பின ஆயிரக்கணக்காக கேள்விகளும் சந்தேகங்களும்.!

"வேறு யாரோ இருக்கிறார்கள்"

நிலவு பயணம் சார்ந்த மர்மங்கள் மறைக்கப்படவில்லை, 'அழிக்கப்பட்டு விட்டது' என்று புதிய சர்ச்சையை கிளப்பினார் நாசாவின் விசில்ப்ளோயர் ஆன ஜார்ஜ் லியோனார்ட் (George Leonard). ஜார்ஜ் லியோனார்ட் தானாக முன்வந்து நிலவில் "வேறு யாரோ இருக்கிறார்கள்" என்ற சர்ச்சைக் கூறிய கருத்தை கூறினார், அதாவது நிலவில் வேற்றுகிரகவாச நடமாட்டம் இருக்கிறது என்கிறார்.

புகைப்பட ஆய்வாளர்

புகைப்பட ஆய்வாளர்

மேலும் இது சார்ந்த உண்மையான தகவல்களை பல ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மறைக்கிறது அல்லது அழித்து விட்டது என்றும் ஜார்ஜ் லியோனார்ட் கூறினார். ஜார்ஜ் லியோனார்ட் - நாசாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி என்பதும் ஒரு புகைப்பட ஆய்வாளர் (Photo analyst) என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சம்படி இஸ் இன் தி மூன்"

ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்ட பல புகைப்படங்களை அவர் தனது "சம்படி இஸ் இன் தி மூன்" (Somebody else in the Moon) என்ற புத்தகத்தில் பிரசுரமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வுகளுக்கு பின்னர் "நாசாவினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அளவில் மிகவும் சிறியதாகவும், தற்காலத்திற்கு ஏற்ற ரெசெல்யூசன் தரத்தில் இல்லை என்றாலும் கூட, அதன் ஒரிஜினல் புகைப்படங்கள் தான் கொண்டுள்ள விவரங்களை வெளிப்படுத்த தவறவில்லை" என்று பொடிவைத்து பேசுகிறார் ஜார்ஜ் லியோனார்ட்.!

சுமார் 40 ரோல் புகைப்படங்கள்

சுமார் 40 ரோல் புகைப்படங்கள்

மறுபக்கம் மிகவும் மோசமான ரெசெல்யூசன் கொண்ட புகைப்படங்கள் கணிப்புகளை மேன்மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது என்று ஜார்ஜ் லியோனார்ட் கருத்துகளுக்கு மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது. வெளியிடப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாய் கொண்டு ஒருபக்கம் வாங்கள் நிகழ, மறுபக்கம் சர்ச்சைக்குறிய பெரும்பாலான புகைப்படங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அதாவது சுமார் 40 ரோல் புகைப்படங்கள், அழிக்கப்பட்டு விட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

"நீங்கள் பார்க்க உரிமை இல்லாத"

"அமெரிக்காவின் அப்போலோ மிஷன் சார்ந்த, சுமார் 40 ரோல் புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிட்டது" என்று ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ கமெண்ட் சர்ஜெண்ட் மேஜர் ஆன பாப் டீன் (Bob Dean) வெளிப்படையாக கூறிய கருத்து தான் அதற்கு ஆதாரம். "அவைகள் எல்லாம் நீங்கள் பார்க்க உரிமை இல்லாத, அரசியலால் ஏற்றுக் கொள்ளப்படாத, சமூகத்தின் அடிப்படையால் ஏற்றுக் கொள்ள முடியாத, சீர்குலைக்கும் 'ரோல்'கள்" என்று பாப் டீன் அம்பலப்படுத்தினார்.

400 கிலோ கிராம் எடையுள்ள நிலவு பாறைகள்

400 கிலோ கிராம் எடையுள்ள நிலவு பாறைகள்

பாப் டீன் கருத்து மட்டுமின்றி, 'நிலவு பயணம் குறித்து' அமெரிக்காவின் மீது சர்வதேச விசாரணை நடத்துமாறு ரஷ்யா கோரியதும் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தேகமாகும். அதாவது 1969-ஆம் ஆண்டு நிலவில் அமெரிக்கர்கள் இறங்கிய போது பதிவாக்கப்பட்ட காட்சிகள் பல மறைக்கப்பட்டு விட்டது என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டுகிறது. அது மட்டுமின்றி 1969 முதல் 1972 வரையிலாக அமெரிக்கா மேற்கொண்ட நிலவு பயணத்தின் போது சுமார் (தோராயமாக) 400 கிலோ கிராம் எடையுள்ள நிலவு பாறைகள் அமெரிக்காவால் பெறப்பட்டுள்ளது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

"நாம் தனியாக இல்லை என்பது உறுதி"

புகைப்படம் மற்றும் பதிவான காட்சிகளோடு சேர்த்து நிலவில் வேற்றுகிரக வாசம் சார்ந்த உண்மைகளும் மறைக்கப்படுகிறது என்பதை ஜார்ஜ் லியோனார்ட் மட்டுமின்றி, நிலவில் காலடி பதித்த ஆறாவது மனிதரான டாக்டர் எட்கர் மிச்சலும் நம்புகிறார். அவர் ஒருமுறை "மனித இனம் மிகவும் தனிமையானதாக இருப்பது எப்படி என்று இத்தனை நாள் அதிசயித்துக் கிடந்தேன். ஆனால், நம் காலத்திலேயே நாம் தனியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது" - என்று கூறியது வேற்றுகிரக வாசிகளின் இருப்பை அப்பட்டமாக உறுதி செய்கிறது.

"செயற்கையாக உருவாக்கப்பட்டவைகள்"

நிலவில் பல மர்மங்கள் உள்ளது என்பதை பிளாஸ்மா விஞ்ஞானியான டாக்டர். ஜான் பிரான்டன்பர்க் (John Brandenburg) அவர்களும் நம்புகிறார். டாக்டர். ஜான் பிரான்டன்பர்க், நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சம் கூட பிழையின்றி செயற்கையாக உருவாக்கப்பட்டவைகள் என்று நம்புவர்களில் ஒருவர் ஆவார்.

எல்லா உண்மைகளும் ஒரு நாள்.!

எல்லா உண்மைகளும் ஒரு நாள்.!

இப்படி பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் அமெரிக்காவின் நிலவு பயணம் சார்ந்த்த பல லட்ச சந்தேகங்களை தன்னுள் கொண்டுள்ளனர். சூரியனை பார்த்து நாய் குறைப்பதால் சூரியனுக்கு என்ன நட்டம் என்ற போக்கில் நாசா பதில் கூறி விளக்கம் அளித்து வெறுத்துப்போய் விட்டதா.? அல்லது நிஜமாகவே எதோ ஒன்றை மறைக்கிறதா.? எல்லா உண்மைகளும் ஒரு நாள் வெளிப்படும், அதுவரை காத்திருப்போம்.!

Best Mobiles in India

English summary
May Moon Landing is true but not those photographs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X