ஏதோவொரு கிறுக்கன் இந்த ஐந்து விடயத்தில் ஒன்றை செய்யத்தான் போகிறான்.!
கற்பனை கூட செய்து பார்க்காத பல 'முட்டாள் தனமான' வழிகளில் - நாம் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே - நிகழ வாய்ப்புள்ளது.
உலகம் அமைதியானது, உலக நாடுகள் நட்புக்குரியது, நாடுகளுக்கு இடையே சிறுசிறு போர்கள் சாத்தியமே தவிர மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுத போரெல்லாம் நிகழாது - என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை, ஏனெனில் யாருமே இங்கே அணு ஆயுத போரை விரும்பவில்லை.
இருப்பினும், இன்று வரையிலாக ஒரு அணு ஆயுதப்போர் நிகழ சாத்தியமான பல வாய்ப்புகள் இருக்கிறது, அவைகள் நாம் கற்பனை கூட செய்து பார்க்காத பல 'முட்டாள் தனமான' வழிகளில் - நாம் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே - நிகழ வாய்ப்புள்ளது.

ரஷ்யா அல்லது சீனா நிற்கும்
அணு ஆயுதப்போர் ஒன்று ஏற்பட்டால் முதலில் தலை தூக்குவது சூப்பர் பவர் நாடான அமெரிக்காவாகத் தான் இருக்கும். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒருபக்கம் நிற்க எதிராக ரஷ்யா அல்லது சீனா நிற்கும், இந்த பட்டியலில் வடகொரியா தன்னை சமீபத்தில் திணித்துக்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்
அதற்கு அடுத்தபடியாக சாத்தியமான வருங்கால அணு ஆயுதப்போரில் ஈடுபடும் நாடுகளாக ஈரான் மற்றும் இஸ்ரேல் கணிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பல ஆண்டு காலமாக பகை நாடுகளாக திகழும் உலக நாடுகளில் முதன்மையான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவைகள் அணு ஆயுத மோதலில் ஈடுபடலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

நிகழ வாய்ப்பில்லை எனினும்
99% சாத்தியமே இல்லாத உலக நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப் போர் ஆனது நிகழ வாய்ப்பில்லை எனினும் மீதமுள்ள ஒரு சதவீகிதத்தில் அணு ஆயுதப்போர் சாத்தியம் தான். அப்படியான அணு ஆயுதப்போர் என்ற ஒரு பயங்கரமான கனவை இன்றுகூட நிஜமாக்கும் 5 வழிகள் உள்ளன.

05. மெக்கானிக்கல் விபத்து
டூம்ஸ்டே மெஷின் எனப்படும் அணு ஆயுதம் ஆனது சிறிய இயக்கமுறை கோளாறுகள் மூலம் ட்ரிக்கர் (Trigger) செய்யப்படலாம்.

04. மனித பிழை
இயந்திரமே பிழை செய்யும் போது, அதனை உருவாக்கிய மனிதன் பிழை செய்யமாட்டானா.? அப்படியாக அணு ஆயுத ஏவுதல் ஆனது தவறான முறையில் கையாளப்பட்டு, மனித பிழையால் ஏற்படலாம்.

03. செயல் விளக்கம்
தற்செயலான வெடிப்பு மற்றும் அபாயங்கள் பற்றி தெளிவான முறையில் புத்தகங்களும், கையேடுகளும் இருப்பினும் கூட, பிற ஆயுதங்களைப் போல அணு ஆயுதத்தையும் சாதரணமாக நினைத்து செயல் விளக்கம் நிகழ்த்தப்படும் போது அணு ஆயுத ஏவுதல் நேரலாம்.

02. வேறு யாரோ ஒருவரின் மூலம் தூண்டப்படுவதால்..
மேற்கூறப்பட்ட காரணங்களாலோ அல்லது உள்நோக்கம் கொண்டே மறுபக்கத்தில் இருந்து அணு ஆயுதம் ஏவப்பட்டால் வேறு வழியே இன்றி நம் பக்கத்தில் இருந்தும் அணு ஆயுதம் ஏவப்படும் 'கட்டாயமான' அபாயமும் நடக்கலாம்.

01. மனித முட்டாள்தனம்
குரங்கு கையில் கிளி கிடைத்தது போல, கொஞ்சம் கூட அறிவே இல்லாத 'பைத்தியக்காரத்தனமான' மனிதனிடம் விபரீதமான அணு ஆயுதம் சிக்கும்போது கண்டிப்பாக அழிவு ஏற்பட்டே ஆகும்.


Click it and Unblock the Notifications