பிரளய பூகம்பம் : நாளைக்கூட ஏற்படலாம், புதைந்து கிடைக்கும் ஆபத்து..!

  நிலநடுக்கம் (பூகம்பம், பூமியதிர்ச்சி) எப்போது நிகழும் என்றெல்லாம் கணிக்க இயலாது, ஆனால் புவிமேலோட்டுன் நடவடிக்கை (tectonic activity) மற்றும் போக்குகளை கொண்டு ஒரு பெரிய நில அதிர்வுகளைத் நிகழலாம் என்று நிலநடுக்க ஆய்வாளர்கள் அவ்வப்போது பரிந்துரைப்பார்கள்..!

  சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 6டி.!

  நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் ஏற்படும் அழுத்தம் அதிகமாகி அதனால் வெளியேற்றப்படும் பூமியின் மேலோடு ஆற்றலின் காரணமாக பூமிக்கு அடியில் உள்ள தளத்தட்டுகள் நகர்வதனால் ஏற்படும் அதிர்வாகும். ரிக்டர் (Richter scale) என்ற அளவுகோளின் கீழ் அளக்கப்படும் நிலநடுக்கங்கள் 3 ரிக்டருக்கு குறைவாக இருந்தால் அவைகளை உணர்வது கூட சற்று கடினமாகும். ஆனால் அவைகளே 7 ரிக்டருக்கும் கூடுதலாக இருந்தால் பலத்த சேதம் உறுதி. அதுவே 8.2 முதல் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கமாக இருப்பின் அதை - பிரளய பூகம்பம் என்றே கூறலாம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மைல் கணக்கில் :

  ஒரு சமீபத்திய ஆய்வொன்றின் அடிப்படையில் ஆற்று வண்டலின் கீழ் மைல் கணக்கில் நீளும் ஒரு பாரிய அளவிலான 'பால்ட் லைன்' (Fault Line) கண்டறியப்பட்டுள்ளது.

  சமதள முறிவு :

  பால்ட் (Fault) என்றால் நிலவியலில் (geology) சமதள முறிவு (planar fracture) அல்லது பாறை தொகுதிகளில் உள்ள தொடர்பின்மையை (discontinuity in a volume of rock) குறிக்கும்.

  கிழக்கு இந்தியா :

  கண்டுபிடிக்கப்பட்டுள்ள பால்ட் ஆனது வங்காள தேசத்தின் கீழே கிழக்கு இந்தியா மற்றும் மியான்மார் பாகங்களை இணைக்கும் பிரதேசத்தில் இருக்கிறது.

  மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதி :

  இந்த சமதள முறிவானது ரிக்டர் அளவில் 8.2 முதல் 9.0 வரையிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர், அதாவது மிக வலிமையான, மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் பேரழிவை நிகழ்த்தக்கூடிய அளவிலான நிலநடுக்கம்.

  ஆழமான ஆய்வுகள் :

  சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 'பால்ட்'டை பற்றி மேலும் புரிந்துகொள்ள அதிக அளவிலான ஆழமான ஆய்வுகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.

  நெருங்கிய கண்காணிப்பு :

  இவ்வளவு காலமாக மறைந்து கிடந்ததால், தசாப்தங்களாக நெருங்கிய கண்காணிப்பில் இருக்கும் பிற 'பால்ட்'களை போல இதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

  பெரிய அளவிலான பூகம்பம் :

  இதுபோன்று கண்டுபிடிக்கப்படாத 'பால்ட்'கள் மூலம் ஏற்படும் பெரிய அளவிலான பூகம்பத்தினால் தான் பாதுகாக்கப்பட வேண்டிய மக்கள் பாதுகாக்கப்பட தவறுகின்றனர்.

  நாளைக்கூட ஏற்ப்படலாம் :

  இதுசார்ந்த விளக்கத்தில் "பிரளய பூகம்பங்கள் நாளைக்கூட ஏற்ப்படலாம் அல்லது 500 ஆண்டுகளுக்கு பின் ஏற்படலாம்" என்று லாமொண்ட்- டோஹெர்டி (Lamont-Doherty)புவி கண்காணிப்பின் புவி இயற்பியலாளர் மைக்கேல் ஸ்டேக்லெர் (கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க்) கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  பூமி தட்டு இயக்க தரவு :

  வங்காள தேசம், இந்தியா மற்றும் மியான்மார் முழுவதும் உள்ள பூமி தட்டு இயக்க தரவு ஆய்வில், ஸ்டேக்லெர் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் ஈடுபடும் போது தான் இந்த 'பால்ட் லைன்' கண்டறியப்பட்டுள்ளது.

  அல்டரா சென்சிடிட்டிவ் ஜிபிஎஸ் :

  2003 மற்றும் 2014-க்கு இடையில் வங்காள தேசம் முழுதும் நிகழ்த்தப்பட்ட அல்டரா சென்சிடிட்டிவ் (ultrasensitive)ஜிபிஎஸ் சாதன ஆய்வு தரவுகள் மூலம் தான் முன்பு அறியப்படாத இந்த 'பால்ட்' வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  60 மைல் தூரம் :

  உடன் 60 மைல் தூரம் நீளும் இந்த 'பால்ட்'டின் சுற்றளவில் சுமார் 140 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்ற தகவலையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

  உள்கட்டுமான சேதம் :

  தாங்க முடியாத கட்டிட நடைமுறைகளால் அந்த பகுதிகளில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு எண்ணற்ற இறப்புகள் மற்றும் பாரிய உள்கட்டுமான சேதம் ஆகியவைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Massive hidden fault could cause a cataclysmic earthquake, scientists warn. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more