செப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்? வாய்ப்பு விகிதம் என்ன?

|

ஒரு விண்கல்லோ அல்லது உடுகோளோ பூமியை நோக்கி வருகிறது என்கிற தகவலை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறிவிட்டால் போதும், அது பூமியோடு மோதப்போகிறது என்பது தொடங்கி உலகம் அழியப்போவது வரையிலாக பல கட்டுக்கதைகள் மற்றும் பீதிகள் கிளம்பும்.

செப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்? வாய்ப்பு விகிதம் என்ன?

ஆனால் உண்மையான நிலவரமோ மிகவும் பாதுகாப்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆக இதுமாதிரியான தகவல்கள் வரும்போது, வாய்ப்பு விகிதம் என்னவென்று பார்க்க வேண்டும்?

வாய்ப்பு விகிதம் என்றால் என்ன?

வாய்ப்பு விகிதம் என்றால் என்ன?

குறிப்பிட்ட விண்கல் அல்லது உடுகோள் ஆனது பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்துவதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது எனும் நிகழ்தகவு தான் வாய்ப்பு விகிதம் ஆகும். இந்த இடத்தில், நாம் ஒன்றும் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை, மிகவும் முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலைப்பாட்டில், பூமியை நோக்கி எது வந்தாலும், அது நமக்கு முன்பே தெரிந்து விடும். குறிப்பாக அது பூமியோடு மோதுமா அல்லது கடந்து செல்லுமா? அப்படி கடந்து சென்றால், பூமிக்கும் அதுக்கும் இடையிலேயான தூரம் என்னவாக இருக்கும் என்பதை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!

சரி, செப்டம்பர் மாதம் வரப்போகும் விண்கல்லின் வாய்ப்பு விகிதம் என்ன?

சரி, செப்டம்பர் மாதம் வரப்போகும் விண்கல்லின் வாய்ப்பு விகிதம் என்ன?

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சமீபத்திய விண்கல் தான் 2006க்யூவி89. (இந்த கட்டுரை முழுக்க இதை க்யூவி என்று சுருக்கமாக அழைத்தால் நமக்கு வசதியாக இருக்கும்). பார்க்க படு பயங்கரமாக காட்சி அளிக்கும் இந்த விண்கல் ஆனது 40 மீட்டர் என்கிற அளவிலான விட்டத்தை கொண்டுள்ளது. அதாவது 48.5 மீட்டர் அகலம் மற்றும் 109 மீட்டர் நீளம் கொண்டு உள்ளது.

அச்சுறுத்தும் தகவல் என்னவென்றால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது இந்த க்யூவி விண்கல்லை தனது ஆபத்துப் பட்டியலில் (ரிஸ்க் லிஸ்ட்) வைத்துள்ளது. நிம்மதியான தகவல் என்னவென்றால் க்யூவி விண்கல்லின் வாய்ப்பு விகிதம் தான்.

வாய்ப்பு விகிதம் குறைவென்றால் ஏன் ரிஸ்க் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது?

வாய்ப்பு விகிதம் குறைவென்றால் ஏன் ரிஸ்க் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது?

முற்றிலுமாக பூமியோடு மோத வாய்ப்பே இல்லாத விண்கல் தான் கூறப்படும் ரிஸ்க் பட்டியலில் இடம்பெறாது, துளி அளவு வாய்ப்பு இருந்தால் கூட அது ரிஸ்க் பட்டியலில் இடம் பெற்று விடும். உடனே அந்த வாய்ப்பானது மிகவும் அதிகமாக உள்ளதென்று நினைக்க வேண்டாம். பட்டியலில் இணையும் விண்கல் ஆனது தொடர்ச்சியான முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்பதனாலேயே ரிஸ்க் பட்டியலில் இணைக்கப்படுகின்றன.

சரி க்யூவி விண்கல்லின் நிலைப்பாடு என்ன?

சரி க்யூவி விண்கல்லின் நிலைப்பாடு என்ன?

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, க்யூவி ஆனது பூமியோடு மோதப்பி 7,299-ல் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதாவது 100-ல் ஒரு பங்கு கூட இல்லை என்றும், செப்டம்பர் மாத வக்கீல் பூமி கிரகத்தை கடக்கும் இந்த குறிப்பிட்ட விண்கல்லை பற்றி கவலையே பட வேண்டாம் என்றும் அர்த்தம்.

அமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்!அமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்!

மிகவும் அற்பமான ஒன்றாகும், ஏன்?

மிகவும் அற்பமான ஒன்றாகும், ஏன்?

இன்னும் சொல்லப்போனால், இந்த சிறுகோள் ஆனது மிகவும் அற்பமான ஒன்றாகும். ஏனெனில் கூறப்படும் ரிஸ்க் பட்டியலில் 850 க்கும் மேற்பட்ட மற்ற விண்கற்கள் உள்ளன, அவற்றில் சில விண்கல்லின் விட்டம் ஆனது ஒரு கிலோமீட்டர் வரை நீள்கின்றன.

ஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு!ஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு!

க்யூவி தற்போது எந்த அளவிலான தூரத்தில் உள்ளது?

க்யூவி தற்போது எந்த அளவிலான தூரத்தில் உள்ளது?

க்யூவி விண்கல் ஆனது பூமியில் இருந்து சுமார் 6.7 மில்லியன் கிமீ (4.2 மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது மற்றும் செப்டம்பர் வரை அதன் நெருக்கமான அணுகுமுறை இருக்கவே முடியாது. கேட்க இது தீவிரமானதாக இருந்தாலும் கூட, இது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதே உண்மை. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற விண்வெளி கழகங்கள் மற்றும் கூடங்கள் என அனைத்துமே எப்போதுமே விண்ணில் ஒரு கண் வைத்திருப்பதோடு சேர்த்து, பூமிக்கு மிகவும் நெருக்கமான நியர் எர்த் ஆப்ஜெக்ஸ்களை (பூமிக்கு நெருக்கமாக இருக்கும் விண்வெளி பொருட்களை) பட்டியலிட்டு கண்காணித்து வருகின்றனர்.

செவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்!செவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
massive-asteroid-has-1-in-7000-chances-to-impact-earth-in-september: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X