உலகம் முடிவுக்கு வருமா? ராட்சஸ 'அப்போபிஸ்' சிறுகோள் 2068 இல் பூமியைத் தாக்குமா? உண்மை என்ன?

|

சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாக 'அப்போபிஸ்' என்ற இந்த ராட்சஸ சிறுகோள் பற்றி தான் பேச்சு, இந்த ராட்சஸ சிறுகோள் பூமியை தாக்க கூடும் என்றும், இதனால் உலகம் 2068 ஆம் ஆண்டில் முடிவிற்கு வரும் என்றும், மனித இனம் அழிய வாய்ப்புள்ளது என்றும் பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோளினால் உண்மையில் பூமிக்குப் பாதிப்பு உள்ளதா என்பதை தெளிவாகப் பார்க்கலாம்.

2020 மோசமானதா? அல்லது வரப்போகும் 2068 மோசமானதா?

2020 மோசமானதா? அல்லது வரப்போகும் 2068 மோசமானதா?

2020 மோசமானது என்று நீங்கள் நினைத்திருந்தால், வரப்போகும் 2068 ஆம் ஆண்டை என்னவென்று கூறுவீர்கள். எகிப்திய கடவுள் 'கேயாஸ் மற்றும் ஈவில்' என்ற அர்த்தம் கொண்ட 'அப்போபிஸ்' (apophis) என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய சிறுகோள் மனிதக்குலம் அனைத்தையும் அழிக்கக்கூடும்! என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் படு வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தியின் பின்னணியில் உள்ள உண்மையை இந்த பதிவில் ஆராய்ந்துள்ளோம்.

யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky effect) என்றால் என்ன?

யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky effect) என்றால் என்ன?

யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky effect) எனப்படும் ஒரு நிகழ்வு காரணமாக 'அப்போபிஸ்' என்ற சிறுகோள், பூமிக்கு மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வேளை யர்கோவ்ஸ்கி விளைவு சற்று அதிகமானால், இந்த ராட்சஸ சிறுகோள் 2068 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கக்கூடும் என்று வானியல் அறிஞர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வங்கியில் சம்பள கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 1 முதல் புதிய திட்டம்..

சிறுகோள் மீது புதிய வேகவளர்ச்சி

சிறுகோள் மீது புதிய வேகவளர்ச்சி

இதன் பெயருக்கு ஏற்றார் போல், இந்த சிறுகோள் ஏதும் நாச வேலையைச் செய்யக்கூடுமா என்று அனைவரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஹவாய் பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சியாளர்கள் (IfA) பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் அபோபிஸில் யர்கோவ்ஸ்கி விளைவினால் புதிய வேகவளர்ச்சி உருவாகி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சீரான வெப்ப கதிர்வீச்சு காரணமாக ஒரு பொருளின் மீது மிகவும் பலவீனமான சக்தியிலிருந்து இந்த வேகவளர்ச்சி எழுகிறது.

பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதா?

பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதா?

இதன் காரணமாக, பூமியை கடந்து செல்ல வேண்டிய சிறுகோள் இப்பொழுது பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, சிறுகோள் அபோபிஸ் என்பது 1,120 அடி அகலம் கொண்ட சிறுகோள் ஆகும், இதன் அகலம் சுமார் 340 மீட்டர் ஆகும். இது மூன்றரை கால்பந்து மைதானங்களின் அளவுக்கு நிகரானது என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!

வானியலாளர்களின் தற்போதைய சந்தேகம்

வானியலாளர்களின் தற்போதைய சந்தேகம்

முன்னதாக, இந்த சிறுகோள் பூமிக்கு அருகாமையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைதியாய் அதன் தடத்திலிருந்து மாறாமல் கடந்து செல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் வானியலாளர்களின் தற்போதைய கணிப்புப் படி, இந்த சிறுகோள் முன்பு நம்பப்பட்டது போல் பூமியைக் கடந்து செல்லாதோ என்ற பதட்டம் உருவாகியுள்ளது. அதிகரிக்கும் வேகவளர்ச்சி காரணமாக இந்த சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது.

2068 ஆன் ஆண்டில் சிறுகோள் பூமியைத் தாக்கும் சூழ்நிலை உண்மை தானா?

2068 ஆன் ஆண்டில் சிறுகோள் பூமியைத் தாக்கும் சூழ்நிலை உண்மை தானா?

இருப்பினும் தற்போதைய கணிப்பு முற்றிலுமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், தற்பொழுது வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அப்போபிஸில் செயல்படும் யர்கோவ்ஸ்கி விளைவைக் வைத்து, இந்த சிறுகோள் 2068 ஆன் ஆண்டில் பூமியைத் தாக்கும் சூழ்நிலை மிகவும் குறைந்த அளவு சாத்தியமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!

பூமியை மிக நெருக்கமாக கடக்கும் அப்போபிஸ்

பூமியை மிக நெருக்கமாக கடக்கும் அப்போபிஸ்

2068 ஆம் ஆண்டிற்கு முன்பாக, இந்த சிறுகோள் வரும் ஏப்ரல் 13, 2029 அன்று பூமிக்கு மிக நெருக்கமாக அணுகும் என்றும், இதன் காரணமாக மனிதர்கள் அப்போபிஸ் சிறுகோள் கடந்து செல்வதை எளிதாக கவனிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போபிஸ் எவ்வளவு நெருக்கமாக பூமியை கடக்கவிருக்கிறது

300 மீட்டர் அளவிலான அப்போபிஸ் சிறுகோள் பூமியைச் சுற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் பெல்ட்டுக்குள் செல்லும்போது அதை நாம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் பெல்ட் என்ற சுற்றுவட்ட பாதை என்பது பூமிக்கு மிக மிக நெருக்கமான அருகாமையில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்போபிஸ் எவ்வளவு நெருக்கமாக பூமியை கடக்கவிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

எலோன் மஸ்க் இதுபற்றி முன்பே எச்சரித்தார்

எலோன் மஸ்க் இதுபற்றி முன்பே எச்சரித்தார்

முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், பெரிய சிறுகோளான அபோபிஸ் மனிதக்குலத்தைத் தாக்கும் என்றும், அதிலிருந்து தப்பிக்க மாற்று வழி இருக்காது என்றும், நம்மிடம் தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும், அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்து என்றால் மனிதக்குலத்திற்குத் தெரியப்படுத்தப்படும்

ஆபத்து என்றால் மனிதக்குலத்திற்குத் தெரியப்படுத்தப்படும்

இந்த பெரிய சிறுகோளின் நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள், ஆபத்து நிச்சயம் வரும் என்ற சூழ்நிலை உருவாகினால் மனிதக்குலத்திற்குத் தெரியப்படுத்தப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Massive Asteroid Apophis May Pass Extremely Close Or May Hit The Earth In 2068 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X