செவ்வாயில் நிலநடுக்கம்! முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..

"நாங்கள் எங்கள் முதல் செவ்வாய் நிலநடுக்கத்திற்காக மாதக்கணக்கில் காத்திருந்தோம்

|

அண்டை கிரகமாக செவ்வாயில் விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆனால் உறுதிபடுத்தப்படாத நிகழ்வான ஒன்றை, ஏப்ரல் 6 ம் தேதி அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் அதன் முதல் உறுதிபடுத்தப்பட்ட செவ்வாய் நில அதிர்வை உணர்ந்துள்ளது. இன்சைட் லேண்டரின் முக்கிய நோக்கங்களின் ஒன்று செவ்வாயின் நிலநடுக்கங்களை அளவிடுவது மற்றும் கிரகத்தின் உட்புறத்தில் பயணிக்கும் அதிர்வு அலைகள் கணக்கிடுவது ஆகும்.

செவ்வாயில் நிலநடுக்கம்! முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..

"நாங்கள் எங்கள் முதல் செவ்வாய் நிலநடுக்கத்திற்காக மாதக்கணக்கில் காத்திருந்தோம். இறுதியில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு உள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்தது மிகவும் உற்சாகம் அளிக்கிறது" என்கிறார் சீஸ்மோமீட்டர் கருவியின் பிரதான ஆய்வாளரான பிலிப் லோகன். தேசிய ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இக்கருவிகளை இயக்கும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


பூமியில் நிகழ்வதை போல செவ்வாயில் நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படும் என விஞ்ஞானிகள் நினைக்கவில்லை. ஏனெனில் பூமியில் உள்ள டெக்டானிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதன் காரணமாகவே நில நடுக்கங்கள் ஏற்படுவதால், டெக்டானிக் தட்டுகள் இல்லாத செவ்வாய் கிரகத்தில் அது சாத்தியமில்லை என எண்ணினர். ஆனால் செவ்வாய் பரப்பை மெதுவான குளிர்விப்பால் ஏற்படும் அழுத்தம் ஆற்றலை கிரகத்தின் உள்புறம் மூலம் ஊடுருவுவதால், அது நிலநடுக்கத்தை தூண்டுகிறது என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

செவ்வாயில் நிலநடுக்கம்! முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..

இப்போது அவர்களிடம் இந்த நிகழ்விற்கான முதல் ஆதாரம் உள்ளது. ஏப்ரல் 6 அன்று, லேண்டருடன் பொருத்தப்பட்டுள்ள அதீத உணர்வுதிறன் வாய்ந்த நிலஅதிர்ச்சி கண்டறியும் கருவி, கிரகத்தின் உட்பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய அசைவை கண்டறிந்தது. மார்ச் 14, ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 11 அன்று அளவிடப்பட்ட அதே நிலநடுக்கத்தை போன்றது இந்த தற்காலிகமாக உறுதிப்படுத்தப்பட்ட சமிக்ஞை என எண்ணிய விஞ்ஞானிகள், ஏதனால் இந்த நிகழ்வுகள் ஏற்பட்டன என்றும், இதனால்உட்புறத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக என உறுதிபடுத்த முடியவில்லை.

Best Mobiles in India

English summary
Marsquake NASAs InSight Lander Feels Its 1st Red Planet Tremor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X