செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு சிக்கல் உள்ளதா?

|

சூரியனிலிருந்து நான்காவது கோளாக இருக்கும் கிரகம் தான் செவ்வாய் கிரகம், இது சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். குறிப்பாக சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2-வது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க, ரஷ்யா

அமெரிக்க, ரஷ்யா

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு காரணமாகவே இக்கோள் செந்நிறமாக காட்சியளிக்கிறது. எனினும் செவ்வாய் கிரகத்திற்கு எப்படியாவது மனிதனை அனுப்பிவிட வேண்டும் என்ற தவீர முயற்சியில் அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

நாசா அமைப்பு

நாசா அமைப்பு

அதிலும் நாசா அமைப்பு வரும் 2035-ம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த கிரகத்தில் மனித காலனியை நிறுவ தேவையான அனைத்து வளங்களும் இருப்பதாக நம்புகின்றனர்.

தேர்வில் தேர்வில் "0" மதிப்பெண் எடுத்த பெண்: சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்- என்ன சொன்னார் தெரியுமா?

டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய்

டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய்

பின்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள நீர் உட்பட, ஒரு காலத்தில் அந்த கிரகத்தில் உயிரனங்கள் இருந்தன என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளதாகவும் விஞ்ஞானம் தெரிவிக்கிறது.

இருந்தபோதிலும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய்க்கு ஆளாக கூடும் என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

செவ்வாய் கிரகத்திற்கு போட்டிபோட்டு பயனம் மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் பெயர்களை வரலாற்றில் செதுக்குவார்கள். ஆனால் இதற்குமுன்பு யாரும் எதிர்கொள்ளாத சுகாதர அபாயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்னறனர் விஞ்ஞானிகள்.

கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்

கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்

இதில் முக்கியமானது என்னவென்றால் உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனித தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு. இதை பார்க்கவோ அல்லது உணரவோ முடியாது. இந்த அபாயகராமன விண்வெளி கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

 நினைவாற்றல் பிரச்சனைகள்

நினைவாற்றல் பிரச்சனைகள்

குறிப்பாக மனித உடலின் எந்தப் பகுதியும் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கூடும் எனவும்,புற்றுநோய் தவிர இருதய பிரச்சனைகள் நினைவாற்றல் பிரச்சனைகள் உள்ளிட்ட எண்ணற்ற உடல்நல பாதிப்புகள் சரளமாக வரக்கூடும் என்று எச்சரிக்கினறனர் நிபுனர்கள்.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

ஆனாலும் கதிர்வீச்சுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கான வழிகளில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதைப்தடுப்பதற்கான புதிய பொருட்கள்,புதுமையான மருந்து அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

source: rt.com

Best Mobiles in India

English summary
Ready to risk getting cancer or dementia to set foot on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X