தைபொங்கலை சிறப்பாக கொண்டாடிய செவ்வாய் கிரகம்.!

  தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள். தை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பொங்கல் தான்.

  தைபொங்கலை சிறப்பாக கொண்டாடிய செவ்வாய் கிரகம்.!

  தை பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. நாம் அறுவடை செய்தவற்றையும், அறுவடை செய்ய உதவிய கால்நடைகளுக்காகவும் நன்றி கூறுவதே இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.

  பொங்கலை வைக்கும் போது, மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து தான் நாம் கொண்டாடுவோம் ஆனால் செவ்வாய் கிரகம் கரும்பு, மஞ்சள் இல்லாமல் தற்போது, தை பொங்கலை கொண்டாடியுள்ளது. மேலும், தமிழர்களும் செவ்வாய் கிரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போல் காணப்படுகின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  தமிழர்களின் திருநாள்:

  தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

  உயிரினங்களுக்கு நன்றி கூறுதல்:

  ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

  பொங்கலுக்கு விளக்கம்:

  புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல்.

  மூன்று மதத்தினர் கொண்டாடுகின்றனர்:

  பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.

  போகி:

  போகி பண்டிகை என்பது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
  பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.

  தைப்பொங்கல்:

  தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

  மாட்டுப் பொங்கல்:

  உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!

  பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

  மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ண சாயம் பூச்சி, மாலை அணிவிக்கவும் படும்.

  காணும் பொங்கல்:

  இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும் .இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.

  ஜல்லிக்கட்டு: ஏறு தழுவல்

  ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

  தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்ளில் கொண்டாடப்படும்.

  ரேக்ளா:

  ரேக்களா என்பது கொங்கு மண்டலத்தில் உள்ள வேளாளர்களால் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, உடுமலை, பழனி, ஈரோடு, போன்ற இடங்களில் நடத்தப்படும்.
  பெரும்பாலும் பொள்ளாச்சி பகுதியில், ரேக்ளா என்பது மிகச் சிறப்பாகவும் நடத்தப்படும்.

  பொள்ளாச்சி-உடுமலை அருகே பெதம்பட்டி ஒட்டியுள்ள ஆட்கொண்ட மால் கோயிலில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் பொங்கல் திருவிழா கால்நடைகளுக்காக சிறப்பாக கொண்டாப்படும். இந்த விழாவில் பல்வேறு நகரங்களை சேர்ந்தவர்களுக்கும் கலந்து கொள்வார்கள்.

  பொங்கலை கொண்டிய செவ்வாய்:

  இந்நிலையில், தான் தமிழர்களுக்கு நெருங்கிய உறவினர் என்பது போல் தை பொங்கலை கொண்டாடி அசத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

  ஐரோப்பிய விண்வெளிய மையம்:

  செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

  பொங்கல் பானை:

  இந்த படத்தை பார்க்கும் போது, செந்நிற மண்பாணையில் உலைவைத்து பொங்கல் வழியும் காட்சியை போன்று தோன்றுகின்றது. செவ்வாய் கிரகத்தின் பனிப் பள்ளமாக இருந்தாலும் இது பார்ப்பதற்கு பொங்கல் போன்று காணப்படுகின்றது.

  புகைப்படங்கள் வெளியாகின:

  ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  mars snowfall photos and pongal : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more