Home
Scitech

Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் குறித்த பல தகவல்கள் இந்த ரோவர் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. ஆண்டுக்கணக்கில் உலா வந்துக் கொண்டிருக்கும் ரோவர், தற்போது தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பி இருக்கிறது.

Mars கிரகம் உயிர் வாழ தகுதியான நகரமா?

2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் பல புகைப்படங்களை பதிவு செய்து அதை பூமிக்கு அனுப்பி வருகிறது. அதோடு செவ்வாய் கிரகத்தில் இருந்து பல மாதிரிகளும் ரோவர் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மார்ஸ் கிரகம் உயிர் வாழ தகுதியான நகரமா, அங்குள்ள காலநிலை என்ன என்பது போன்ற பல உண்மைகள் இதன்மூலம் கண்டறியப்படும் என நம்பப்படுகிறது.

Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா

ரோவரில் உள்ள ஜெஸேரோ க்ரேட்டர்

ரோவர் செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை தனக்குள் இருக்கும் குழாய்களில் சேமித்து வருகிறது. அதன்படி ரோவரில் மாதிரிகளை சேமிக்கும் ஒரு பகுதி தான் ஜெஸேரோ க்ரேட்டர். இந்த பகுதியில் உள்ள டிப்போவில் தான் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன் மிஷன்

டிப்போ(Depot) என்பது எதிர்கால மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன் மிஷனுக்கான திட்டத்தின் மூலப்பொருள் ஆகும். இங்கே சேகரிக்கப்படும் மாதிரிகள் 2030 இல் பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே நாசாவின் நோக்கமாகும். இந்த டிப்போ ஆனது தனித்தனியாக 10 டைட்டானியம் குழாய்கள் உடன் குறிப்பிட்ட வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது டிப்போவின் 10 குழாய்கள் உடன் தான் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செல்பி எடுத்து அனுப்பி இருக்கிறது.

பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்த செல்பி புகைப்படம்

பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்த செல்பி அப்படியே பூமிக்கு வந்துவிடவில்லை. 56 தனிப்பட்ட புகைப்படங்களாகவே அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த 56 தனிப்பட்ட புகைப்படங்களையும் ஒருங்கிணைத்து தான் பெர்சவரன்ஸ் ரோவரின் செல்பி புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் ஆனது ரோவரின் ரோபோ கையின் முனையில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இது வைட் ஆங்கிள் டோபோகிராஃபிக் சென்சார் ஃபார் ஆபரேஷன்ஸ் மற்றும் இன்ஜினியரிங் கேமரா ஆகும்.

Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர்

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தனது 682-வது நாளை எட்டி இருக்கிறது. இதை நினைவு கூறும் விதமாகவும் இந்த செல்பி புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரோவர் தனது ரோபோக் கையில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறது. புகைப்படம் தற்போது தெளிவாக வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த செல்பி படத்தை முழுமையாக்குவதற்கு பொறியாளர்கள் டஜன் கணக்கான தனிப்பட்ட படங்களை பதிவு செய்ய ரோவருக்கு கட்டளையிட்டிருக்கின்றனர்.

மார்ஸ் இல் செல்பி புகைப்படம் எடுக்கப்பட்டது எப்படி?

மொத்த படங்களும் பூமிக்கு வந்த உடன் ஒரு Puzzle கேம் போல் பொறியாளர்கள் இதை இணைத்திருக்கின்றனர். அதன் பின்னரே இந்த செல்பி புகைப்படம் சாதாரண கேமரா புகைப்படமாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 17 மாதிரிகளை சேகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நாசா ட்விட்டர் பக்கம் மூலம் மக்களுக்கு விடுத்த கேள்வி?

நாசா ட்விட்டரில் இந்த செல்பி புகைப்படத்துடன் ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறது. அது., நீங்கள் தொடர்ந்து பின்தொடர்ந்திருந்தால், கடந்த சில வாரங்களாக நான் பிஸியாக இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனை லைட்சாப்... அதாவது எனது சமீபத்திய செல்பியில் எத்தனை மாதிரி குழாய்கள் உள்ளது என கண்டறிய முடியுமா? என ரோவர் கேட்பது போல் கேள்வியை நாசா இந்த பதிவில் கேட்டிருக்கிறது. சிலர் 3 என்றும் சிலர் 7 என்றும் பதில்களை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு எத்தனை குழாய்கள் தெரிகிறது என்பதை நீங்களே பார்த்து கூறுங்கள்.

Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா?

நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் உயரினங்கள் வாழ்வதற்கான ஆதாரத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அங்கு உயிரினங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பல ஆண்டுகளாக மார்ஸ் கிரகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தாலும் அது மிகப்பெரியது என்பதால் முழுமையாக ஆய்வு செய்ய டைம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு எப்போது செல்வார்கள்?

இதெல்லாம் ஒருபுறம் இருக்க செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் காலடி பதிப்பதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் நன்கு அறிந்தவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இன் கனவுத் திட்டம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது ஆகும். நாசா உள்ளிட்ட விண்வெளி ஏஜென்சிகள் இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mars Selfie: NASA Perseverance Rover Took Selfie in Mars! NASA Challenge to People Through this Pic
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X