Mars இல் வேலையை தொடங்கிய நாசா! பள்ளம் தோண்டி பூஜை ஆரம்பம்.. மனிதர்கள் வாழ முடியுமா?
நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் Mars இல் முதல் மாதிரிகளை சேகரித்து சேமித்து வைத்துள்ளது. ரோவர் மண் மாதிரிகளை சேகரித்ததன் ஆதாரமாக அங்கு தரையில் இரண்டு துளைகளை விட்டு சென்றுள்ளது. இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்திருக்கிறது. இதன்மூலம் பல உண்மைகள் கட்டவிழ்த்துவிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

NASA Rover சேகரித்த மாதிரிகள்
ஏஜென்சியின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) இன் கூற்றுப்படி, நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் இரண்டு மாதிரிகளை டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதிகளில் சேகரித்துள்ளது. இந்த மாதிரிகள் ஆனது முந்தைய மாதிரிகள் போல் இல்லாமல், பாறை மையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சவால்கள்
புராதன நுண்ணியர் வாழ்வின் அறிகுறிகளை கண்டறிய சக்திவாய்ந்த விஞ்ஞான உபகரணங்கள் உடன் செவ்வாய் கிரக மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை பூமியில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலான பகுதிகள் பாறைகளாக இருக்கும் என கூறப்படுகிறது.
சேகரிக்கப்படும் மாதிரிகள் ஆனது விண்வெளி வீரர்களை நாம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் போது எதிர்கொள்ள இருக்கும் சவால்களை அறிந்து கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது.

மாதிரிகளை சேகரிக்கும் நாசா
1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா கண்டறிந்து வருகிறது. அதன்படி நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ரோவர் ஆனது வெற்றிகரமாக அங்கு செயல்பட்டு மாதிரிகளை சேகரித்து வருகிறது.

பெர்சவரன்ஸ் ரோவர்
நாசா செவ்வாய் கிரிகத்துக்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் துல்லியமாகவும் துடிப்பாகவும் செயல்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் செயல்பட்டு வரும் பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் மார்ஸ் இல் இருக்கும் பல ரகசியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி செவ்வாய் கிரகத்தின் பல பகுதிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டும் வருகிறது.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும், செவ்வாய் கிரகம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபாயத் தடுப்பு கேமராக்கள்
அதேபோல் நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உலா வந்து அங்கிருந்து பல்வேறு புகைப்படத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பி வருகிறது. சிவப்பு கிரகமான மார்ஸ் இன் ஏணைய இடத்தை காட்சியாக பதிவு செய்து ரோவர் அனுப்பி வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவரின் முன்பக்கத்தில் அபாயத் தடுப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ரோவர் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

செவ்வாய் கிரக புகைப்படங்கள்
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தில் கிடந்த நூடுல்ஸ் போன்ற பொருள் புகைப்படமாக பதிவு செய்யப்பட்டது. இந்த படத்தை பகிர்ந்துள்ள நாசா, இந்த பொருளின் தன்மையை விஞ்ஞானிகளால் சரியாக கண்டறிய முடியவில்லை என தெரிவித்தது. முன்பு செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட பொருட்களை போலவே இதுவும் ஏதாவது குப்பைத் துண்டுகளாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.

பூமிக்கு கொண்டு வர திட்டம்
நாசா தனது மார்ஸ் சாம்சங் ரிட்டர்ன் புரோகிராம் இன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் ரோவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட பாறைகள் மற்றும் தூசுகளை பூமிக்கு கொண்டு வர ஹெலிகாப்டர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி நாசா ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து செவ்வாய் கிரக பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும்
நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செவ்வாய் கிரக பயண திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி அங்கு சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரும்பட்சத்தில் மார்ஸ் குறித்த பல உண்மைகள் கட்டவிழ்த்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதற்கான தரவுகளும் இதன்மூலம் கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications