Home
Scitech

செவ்வாயில் ஆக்ஸிஜன் கண்டுபிடித்து சாதித்த நாசா.!

விண் வெளி ஆராய்ச்சியில் தற்போது பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவும் நாசாவுக்கு உதவும் வகையில் விண்வெளியிலும் அறிய கண்டுபிடிப்புகளையும் செய்து வருக

விண் வெளி ஆராய்ச்சியில் தற்போது பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவும் நாசாவுக்கு உதவும் வகையில் விண்வெளியிலும் அறிய கண்டுபிடிப்புகளையும் செய்து வருகின்றது.

செவ்வாயில் ஆக்ஸிஜன் கண்டுபிடித்து சாதித்த நாசா.!

இந்நிலையில் அமெரிகாக்காவின் நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

அது தற்போது செவ்வாயில் மனிதன் வாழ தேவையான ஆக்ஸிஜன் இருக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளது. மேலும் இது உலக சாதனையாகவும் கருதப்படுகின்றது. இந்த ஆராய்ச்சியானது கடந்த 5 ஆண்டாக நடக்கின்றது.

செவ்வாய் கிரகம் :

செவ்வாய் கிரகம் :

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது.

கியூரியாசிட்டி ரோவர்:

கியூரியாசிட்டி ரோவர்:

இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டாக ஆராய்ச்சி:

5 ஆண்டாக ஆராய்ச்சி:

மிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.

ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு:

ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு:

கியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் தொடங்கியது. இது அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சாதனை படைத்தது:

சாதனை படைத்தது:

இன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டு உள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Mars might just have enough molecular oxygen to support : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X