நாசாவின் ஏலியன் வேட்டை: செவ்வாய் கிரகத்தில் 10 கிமீ ஆழம் துளை? ஏன்? எதற்கு? எப்படி?
செய்யும் காரியத்திற்கு தகுந்தாற் போல - செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நிகழவுள்ள இந்த ஆய்விற்கு - மார்ஸ் டீப் ட்ரில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அன்னிய வாழ்க்கையை கண்டறிய ஒரு தைரியமான முயற்சியை எடுத்ததாகவும், அந்த முயற்சியின் கீழ் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் (சுமார் 6.2 மைல்) ஆழம் துளை இடப்பட்டதாகவும், ஒரு மூத்த ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தின் (JPL) பொறியாளர் அம்பலப்படுத்தி உள்ளார்.

இது சாத்தியமா என்று கேட்டால், ஆம் நிச்சயமாக, அதற்கு உதவியாக நாசாவின் கட்டிங்-எட்ஜ் ட்ரில் டெக்னாலஜி கைகொடுக்கும். செய்யும் காரியத்திற்கு தகுந்தாற் போல - செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நிகழவுள்ள இந்த ஆய்விற்கு - மார்ஸ் டீப் ட்ரில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கூறியது, நாசாவின் விண்வெளி ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப மேலாளர் மற்றும் ஜேபிஎல் உறுப்பினர் ஆன பிரையன் வில்கோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஏலியன் வாழ்க்கை கண்டறியப்படும் என்றும் அவர் நம்புகிறார்.

மார்ஸ் நீராக உருமாறும் பனிகட்டிகளை கொண்டு இருக்கலாம்!
திரு வில்காக்ஸ் கூறினார்: "வானியல் அறிவியலில் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், ஒரு கிரகத்தின் உட்பகுதியை ஆராய்வதாகும். செவ்வாயின் மேற்பரப்பில் நீர் போன்ற எந்த திரவமும் இல்லை, அங்கு கதிர்வீச்சு மிகவும் குறைவாக இருக்கிறது, மரபணு பொருள் மிகவும் விரைவாக உடைந்து விடும் என்பதால் நீங்கள் கற்பனை செய்யக்கூடிய எந்த உயிரினத்தையும் அது கொல்லும். ஆனால் செவ்வாயின் உட்பகுதி ஒரு கவர்ச்சிகரமான வாழ்விட சூழலை கொண்டுள்ளது. அங்கு ஒரு வெப்ப சாய்வு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் யுரேனியம் போன்ற இயற்கையான கதிரியக்க ஐசோடோப்புகள் அவற்றின் சிதைவைக் காட்டிலும் வெப்பத்தை வெளியிடுகின்றன. அவைகள் சில ஆழத்தின் கீழ் நீராக உருமாறும் பனிகட்டிகளை கொண்டு இருக்கலாம்.

ஒரு கிலோமீட்டராக கூட இருக்கலாம்
பெரும்பாலான உயிர் வாழ்க்கைக்கான மிகவும் தேவையானது திரவ நீர் தான் என்று கருதப்படுகிறது. அது செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் நீர்மம் நீராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த ஆழமானது அதிகபட்சம் 10 கி.மீ, குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டராக கூட இருக்கலாம்.

ஒருகாலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில்!
எல்லாவற்றிக்கும் மேலாக,"செவ்வாய் கிரகத்தின் நிலத்தை நாங்கள் ஆழம் பார்க்கும் பட்சத்தில், சில உயிர் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன், நீர் ஆதாரங்கள் இருந்துள்ளதை நாங்கள் காண்கிறோம்." என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆய்வாளர் வில்காக்ஸ், கடந்த 35 ஆண்டுகளாக நாசாவிற்காக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சாத்தியமா? நிச்சயமாக!
எல்லா உயிரணுவிற்கும், சூரிய ஒளி என்பது மிக அவசியமான அல்லது தேவையான ஒன்றாக இருப்பதில்லை. சூரிய ஒளியின் புற ஊதா கதிர்கள் மூலக்கூறுகள் உடைக்கிறது, அதன் விளைவாக மிகவும் எளிமையான ஜீவராசிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக எப்போதுமே சூடாக மற்றும் ஈரமாக இருக்கும் அடிப்பகுதிகளில். இம்மாதிரியான சூழ்நிலையில் தான் உயிர்கள் மிகவும் செழித்து வாழும் என்றும் நம்பப்படுகிறது.

எதனால் துளையிட போகிறார்கள்?
இந்த ஆய்வில் க்வார்ட்ஸ் ஃப்யூஸ்டு சிலிக்கா வயர் லைன்டு ட்ரில் (Quartz-fused silica wire-lined drill) பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது 100 கிலோக்கு குறைவான எடையைக் கொண்டிருக்கும் படி உருவாக்கம் பெற வேண்டும். ஏனெனில் விண்வெளி பயணங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் மீது கடுமையான எடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் விளைவாக போடப்படும் துளையின் விட்டம் இரண்டு முதல் மூன்று செ.மீ. அளவில் மட்டும் ஆகும். வெட்டப்படும் மண் துண்டுகள் ஆனது ஒரு ரோபாட்டிக் பெய்லிங் பாக்கெட் மூலம் சேகரிக்கப்பட்டு, பின் அது பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்படும்.

எம்மாதிரியான உயிர் ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
இந்த கேள்விக்கான பதிலை அளித்த ஜேபிஎல் பொறியாளர் கூறியதாவது: "நாம் ஒளிச்சேர்க்கையின் விளைவாக உருவாகும் வாழ்க்கையை எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அவைகள் இரசாயன சமநிலையில் வாழ்கின்ற வாழ்க்கை வடிவங்களாகும். மாறாக, நடுத்தர கடற்பகுதிகளின் நீரோட்டத் துளைகளை சுற்றி காணப்படும் உயிர் ஆதாரங்களை எதிர்பாக்கிறோம். அவைகள் இணைப்பதன் மூலமாகவும், ரசாயனங்களிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுப்பதன் மூலமாகவும் உயிர் வாழலாம். இது சாத்தியம் என்று நாங்கள் நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications