செவ்வாயின் அரியப் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ.! பெரிய ஏரிமலை கண்டுபிடிப்பு.!
செவ்வாயில் நடந்த நான்கு ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்தது மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டிருக்கிறது.
செவ்வாயில் நடந்த நான்கு ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்தது மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் முதல் செயற்கை விண்வெளி திட்டம் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM-Mars Orbiter Mission) நவம்பர் 2013 இல் துவங்கி நான்கு ஆண்டுகளாகச் சிவப்பு கிரகத்தைச் சுற்றி வருகின்றது. அண்மையில் இந்தச் சுற்றுப்பாதை பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

முதல் நாடு இந்தியா
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில், ஒரே முயற்சியில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு இந்த மங்கள்யான் திட்டத்தின் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டு
நான்கு ஆண்டு நிறைவடைந்த சந்தோஷத்தை சிறப்பிக்கும் வகையில் மங்கள்யான் விண்கலம் செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

செவ்வாயின் சுற்றுப்பதியில்
2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) இந்த மங்கள்யான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயின் சுற்றுப்பதியில் தந்து பயணத்தை துவங்கியது மங்கள்யான் விண்கலம்.

மங்கள்யான் திட்டம்
மங்கள்யான் திட்டத்தின் விண்கலத்தின் வாழ்க்கை பணி வெறும் ஆறு மாத காலம் தான் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு காலமாக செவ்வாய் கிரகத்தில் இருந்து விஞ்ஞான தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னாட்சி இணக்கம்
எந்தவித தடையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு தன்னை தானே கவனித்துக் கொள்ள முடியும் முழு தன்னாட்சி இணக்கத்துடன் மங்கள்யான் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

பிளாக் அவுட்
இந்த காலப் பகுதியில் ஒருதடவை செயற்கைக்கோள் "பிளாக் அவுட்(blackout)" ஆனது, அதாவது செயல் இழந்தது. ஆனால் தானாகவே தன்னைச் சரி செய்துகொண்டு மீண்டும் தன பணியைத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

980 க்கும் மேற்பட்ட படங்கள்
மார்ஸ் கலர் கேமரா இதுவரை 980 க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்களை வைத்து விஞ்ஞானிகள் செவ்வாயின் உலகளாவிய அட்லஸ் வரைபடத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க முடிந்தது.

இரண்டு சந்திரன்
செவ்வாயின் இரண்டு சந்திரன்கள் - ஃபோபோஸ் மற்றும் டேமிமோஸ் ஆகிய நிலவுகளை மார்ஸ் கலர் கேமிராவால் படம்பிடித்து அனுப்பியது மங்கள்யான்.

மிக பெரிய எரிமலை
செவ்வாயின் மிக பெரிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் முழு அளவு மற்றும் விபர புகைப்படத்தை மங்கள்யான் பூமிக்கு அனுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications