Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 20 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 20 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 21 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தங்கத்தை தேடி சென்றவருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொருள்: அப்படியென்ன அதிசய பொருள்!
விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தங்கத்தைத் தேடி பயணத்தை மேற்கொண்டதில், அவருக்குத் தங்கம் கிடைக்கவில்லை அதற்குப் பதிலாக விலைமதிப்பற்ற பொருள் கிடைத்துள்ளது.

2015-ம் ஆண்டு முதல்..
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் ஹோலே. இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தங்கத்தைத் தேடி பயணத்தை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பயணத்தில் அவருக்குத் தங்கம் கிடைக்கவில்லை, அதற்குப் பதிலாக விலைமதிப்பற்ற பொருள் கிடைத்துள்ளது.

ஏதோ இருக்கிறது?
அதாவது தங்கம் கிடைக்கும் என நம்பிய டேவிட் ஹோலே கண்டறிந்ததோ மிகவும் அரிய வகை விண்கல். இவர் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்த கல்லைத் தூக்கியபோது அதன் எடை அசாதாரணமாக இருந்துள்ளது. அதன்பின்பு இதனுள் வேறு ஏதோ இருக்கிறது என்று நினைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

அரிதானது மற்றும் மதிப்புமிக்கது
மேலும் அந்த பாறைக்கல்லை ஆய்வுக்குப் பயன்படுத்தியபோது அது நமது சூரியக் குடும்பம் உருவான காலத்திலிருந்தே விலைமதிப்பற்ற மழைத்துளிகள் ஒன்றுதிரண்டு உருவானது எனக் கண்டறியப்பட்டது. குறிப்பாக ஹோலே எடுத்த அந்த கல் தங்கத்தை விட அரிதானது மற்றும் மதிப்புமிக்கது என்றும் கூறியது சயின்ஸ் அலர்ட்.

உடைக்க முயற்சி செய்துள்ளார்
டேவிட் ஹோலா கண்டுபிடித்த அந்த பாறைக்கல் குறித்து சயின்ஸ் இதழ் மேலும் விளக்கியுள்ளது. அதாவது அவர் கொண்டுவந்த பாறைமீது ரம்மை ஊற்றி, அதனைத் துளையிட முயற்சித்து, உடைக்க முயன்றுள்ளார். அதன்பின்பு மிகப்பெரிய சம்மட்டியை கொண்டுகூட அதனை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பாறையில் சிறிய விரிசலைக்கூட உருவாக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அந்த பாறைக்குள் தங்கம் இருக்கும் என்று நினைத்துதான் உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பல வருடங்களுக்கு பிறகே அவர் கண்டுபிடித்தது விலை மதிப்பற்ற விண்கல் என்று தெரிந்துகொண்டார்.
மேலும் அந்த பாறைக்கல் செதுக்கப்பட்ட பள்ளமான தோற்றத்தைக் கொண்டிருந்தது என்கிறார் மெல்போர்ன் அருங்காட்சியக புவியியலாளர் ஹேர்னி. குறிப்பாக இதுபோன்ற பாறைகளானது வளிமண்டலத்தின் வழியே வரும்போது உருவாகிறது எனவும்,இவை வெளியில் உருகுகின்றன, அவற்றை வளிமண்டலம் செதுக்குகிறது என்று கூறியுள்ளார் ஹென்ரி.

இரும்பு மற்றும் நிக்கல்
குறிப்பாக டேவிட் ஹோலே எடுத்த இந்த பாறையானது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த விண்கல் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பாறைக்கல் பூமியில் இருக்கும் பாறைகள் போல் இல்லாமல் மிகவும் கனமாக இருக்க காரணம், அவற்றில் உள்ள அடர்த்தியான இரும்பு மற்றும் நிக்கல் தான் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல் டேவிட் ஹோலே எடுத்த வந்த இந்த பாறை மேரிபரோ விண்கல் என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் கூர்மையான வைரக்கற்களைக் கொண்டு இந்த பாறையின் ஓரத்தை உடைத்துப் பார்த்தபோது அதில் சிறிய வெள்ளைநிற மழைத்துளிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார் ஹென்ரி.குறிப்பாக ஒரு காலகட்டத்தில் சிலிகேட் கனிமங்களாக இருந்தன, இவை சூரிய மண்டலத்தை உருவாக்கிய சூடான வாயு நிறைந்த மேகங்களால் படிகமாக்கப்பட்டன, இதன்மூலம் சூரிய மண்டலம் எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார் ஹென்ரி. குறிப்பாக இது ஒரு அதிசய பொருள் என்றே கூறலாம்.
photo courtesy: indiatimes.com, wionews.com,hindustantimes, nasa
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470