Home
Scitech

பூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார்? 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா?

ஆமாம், மோதல் நிகழ்த்தும் என்று நீங்கள் படித்தது சரிதான், ஆனால் அந்த மோதல் நாளையோ அல்லது அடுத்த மாதமோ நிகழாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு எலான் மஸ்க்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கோன் ஹெவி (உலகின் மிகப்பெரிய ராக்கெட்) மூலம், ஒரு சிவப்பு நிற டெஸ்லா கார் விண்ணில் செலுத்தப்பட்டதே அது நினைவில் இருக்கிறதா? இருந்தால் நல்லது. இல்லாதோர்களுக்கு நினைவு படுத்தி விடுகிறேன்.

பூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார்? 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா?

எலான் மஸ்க்கின் கனவு காரான டெஸ்லா ஆனது எந்த விதமான ஆய்வு நோக்கமும் இன்றி,வெறுமனே விண்ணில் செலுத்தப்பட வேண்டும் மற்றும் கணக்கிடப்பட்ட சுற்றுப்பாதையில் செல்லும் பட்சத்தில் அது செவ்வாய் கிரகத்தை அடையும் என்பதற்காகவும் தான் விண்ணுக்குள் அனுப்பப்பட்டது. விண்ணிற்குள் செலுத்தபட்ட அந்த டெஸ்லா காறில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று அதன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் 'டம்மி' (பொம்மை) விண்வெளி வீரர், மற்றொன்று கார் இதன் சேர்த்து அனுப்பட்ட ஒரு டிஜிட்டல் புத்தகம்.

சீரியஸான மேட்டருக்குள் வருவோமா?

சீரியஸான மேட்டருக்குள் வருவோமா?

அந்த டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர். இந்த பெயரானது டேவிட் போவியின் பாடல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும் என்பதும், டிஜிட்டல் புத்தகம் ஆனது, காரின் க்ளோவ் கம்பார்ட்மெண்டில் ஒரு சிறிய ஆப்டிகல் டிஸ்க் வடிவத்தில் வைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த டிஸ்க்குகள் ஐசக் அசிமோவின் 'ஃபவுண்டேஷன்' தொடரின் முழுமையான பகுதியும் என்கோட்ட் செய்யப்பட்டுள்ளதாம். சரி விண்ணில் மிதக்கும் சிவப்பு நிற டெஸ்லா காரின் சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசிவிட்டோம். இப்போது சீரியஸான மேட்டருக்குள் வருவோமா?

சூரிய பாதையை பகுப்பாய்வு செய்த பின்னர்!

சூரிய பாதையை பகுப்பாய்வு செய்த பின்னர்!

விண்ணில் உலாவவும் டெஸ்லா ஸ்டார்மேனின் சுற்றுப்பாதையை கண்காணித்து வரும் இயக்கவியல் வல்லுநர்களின் குழுவானத்து, அந்த கார் ஆனது வீனஸ் அல்லது பூமி கிரகத்தின் மீதான ஒரு சாத்தியமான மோதலை நிகழ்த்தலாம் என்று எச்சரித்துள்ளது. ஹனோ ரேன், டானியல் தமாயோ மற்றும் டேவிட் வோக்ரஹ்லிக் ஆகியோர்களை உள்ளாடக்கிய அந்த ஆய்வாளர்களின் குழுவானது, டெஸ்லா காரின் சூரிய பாதையை பகுப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்து உள்ளது.

மெர்குரி மற்றும் செவ்வாயை தாக்கும் வாய்ப்புகள்!

மெர்குரி மற்றும் செவ்வாயை தாக்கும் வாய்ப்புகள்!

இந்த மோதலை சந்திக்கப்போகும் பட்டியலில் பூமியும், வீனஸ் கிரகமும் மட்டுமின்றி சூரியனும் இடம் பெற்று உள்ளது. இந்த மூன்று விண்வெளி உடல்களுடன் டெஸ்லா ஸ்டார்மேனின் சாத்தியமான மோதல் நிகழலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கட்டுரை ஆனது 'ஆராய்ச்சிக் காரணிகள் மற்றும் கிரகங்களுடனான மோதல் சாத்தியக்கூறுகள்' என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆய்வின் படி, டெஸ்லா ஸ்டார்மேன் ஆனது மெர்குரி மற்றும் செவ்வாயை (மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரகம்) தாக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

ஆறு சதவீதம் உள்ளதாம்!

ஆறு சதவீதம் உள்ளதாம்!

ஆமாம், மோதல் நிகழ்த்தும் என்று நீங்கள் படித்தது சரிதான், ஆனால் அந்த மோதல் நாளையோ அல்லது அடுத்த மாதமோ நிகழாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தெளிவாக கூற வேண்டும் என்றால், நாம் பேசும் இந்த சாத்தியமான மோதல் ஆனது பெரும்பாலும் குறைந்தது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு தான் நடக்கும். நிபுணர்களின் கருத்துப்படி, அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுகளில் இது பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் ஆறு சதவீதம் உள்ளதாம். மறுகையில் உள்ள வீனஸை பொறுத்தமட்டில், அதனுடன் மோதல் நிகழ்த்த 2.5 சதவிகித வாய்ப்பு உள்ளதாம்.

நியர் எர்த் ஆப்ஜெக்ட்!

நியர் எர்த் ஆப்ஜெக்ட்!

1 மில்லியன் ஆண்டுகளா? என்று கடுப்பாகி விட வேண்டாம். அடுத்த 100 ஆண்டுகளுக்குள் டெஸ்லாவின் ஸ்டார்மன் ஆனது, தனது பூமிக்கு நெருக்கமான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்றும் வெளியான ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நெருக்கம் சாத்தியமாகும் பட்சத்தில், ஸ்டார்மேன் சந்திரனையும் நெருக்கமாக சந்திக்கும், அது நடந்தால், எலோன் மஸ்க்கின் இந்த "சிந்தனை"யானது ஒரு நியர் எர்த் ஆப்ஜெக்ட் ஆக (NEO) கருதப்படும்.

தப்பி பிழைக்க வாய்ப்புகள் இல்லை!

தப்பி பிழைக்க வாய்ப்புகள் இல்லை!

இந்த டெஸ்லா கார் துல்லியமாக எந்தக் கிரகத்தில் அதன் முடிவை சந்திக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றாலும் கூட, அது சில பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அது விண்வெளியில் தப்பி பிழைக்க வாய்ப்புகள் இல்லை" என்கிறார் பேராசிரியர் ஹனோ ரேன்.

நமது கொள்ளு பேர பிள்ளைகள் பார்ப்பார்கள்!

நமது கொள்ளு பேர பிள்ளைகள் பார்ப்பார்கள்!

மேலும், அடுத்த 100 ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வரும் என்பதிலும் எந்த உறுதியும் இல்லையாம், வரலாம் என்கிற வாய்ப்புகள் தான் உள்ளனவாம். மறுபக்கம், விண்வெளியில் உள்ள கடுமையான சூழலை அந்த டெஸ்லா கார் சந்திக்கும் போது அது துண்டு துண்டாக உடைந்து விடும் என்றும் சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். அது சாத்தியமாகும் பட்சத்தில் பூமி கிரக வாசிகளுக்கு எந்த விதமான ஆபத்தும் இருக்காது. எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்காவிட்டாலும், நமது கொள்ளு பேர பிள்ளைகள் பார்ப்பார்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Man made catastrophe awaits? Elon Musk's Tesla Starman could collide with earth : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X