Home
Scitech

நாசா செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்- விண்வெளி அறிவு தமிழனுக்கு உரியது.!

விண்வெளி குறித்த பல்வேறு போட்டிகளை இஸ்ரோ சார்பில் தமிழக அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், சந்திராயன்-1 திட்ட இயக்குனரும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணா துரையும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைகோள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

நாசாசெல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்-விண்வெளி அறிவு தமிழனுக்கு உரியது!

மேலும், அப்துல்கலாமும் ஏற்கனவே அடுத்தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களே, மாணவர்களே கனவு காணுங்கள் என்றும், பயிற்சி முயற்சியும் இருந்தால் சாதாரண மனிதரும் சாதனையாளாராக மாறலாம் என்றும் ஊக்குப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாசா விண்வெளி மையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று, நாசா விண்வெளி மையத்திற்கு செல்கின்றார். இந்த மாணவி மதுரையை சேர்ந்த டீக்கடைகாரர் மகள் என்பதுதான் சிறப்பு.

விண்வெளியில் தமிழர்கள்

விண்வெளியில் தமிழர்கள்

விண்வெளியில் தமிழர்கள் முன்பே நவகிரங்களையும் மெய்ஞானத்தால் கணித்துள்ளனர். மேலும், நாம் ஆன்மீகத்தை அறிவியல் பூர்வமாகத்தான் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், நிலவிலும் பாட்டி வடை சுடுவதாகவும் கதை கூறியிருக்கின்றார்கள். 27 நட்சத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ஏற்பே திருமணங்கள் முதல் குழந்தைகளுக்கும் பெயர் சூட்டுவது, தொழில் துவக்கம், நல்ல அல்ல நேரங்களையும் கணித்து வருகின்றனர்.

நாசா சார்பில் போட்டி  :

நாசா சார்பில் போட்டி :

விண்வெளி மற்றும் அறிவியல் சமந்தமாக நாசா விண்வெளி மையம் உலகமுமுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,போட்டிகளையும் நடத்தி வருகின்றது. இந்நிலையில், www.go4guru.com என்ற வலைதளம் நடத்திய போட்டியில்,
சர்வதேச விண்வெளி அறிவியல் மாணவர்கள் கலந்து கொண்டார்.
இதில், போட்டியில், சிறப்பாக பங்கேற்ற தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேர் வெற்றி பெற்றனர். ஆந்திராவைச் சேர்ந்த மாணவி சாய்புஜிதா, மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெற்றனர்.

நாசா செல்லும் 3 மாணவர்கள்

நாசா செல்லும் 3 மாணவர்கள்

தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள். நாசா விண்வெளி மையத்தை சுற்றிபார்த்தும், விஞ்ஞானிகளுடக் கலந்துடையாடுகின்றனர்.

இவர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான்தாமஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாசா செல்லும் தமிழக மாணவி

நாசா செல்லும் தமிழக மாணவி

நாசா செல்லும் வாய்ப்பை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவி மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த தான்யா தஷ்னம் வெற்றுள்ளார்.
எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் என்றால் மிகவும் விருப்பம். 5-வது படிக்கும்போதே விஞ்ஞானியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு 10-வது படிக்கும் இந்த நேரத்தில் கிடைத்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

அப்துல் கலாம் உத்வேகம்

அப்துல் கலாம் உத்வேகம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் எனது உத்வேகம். அவரை போல விஞ்ஞானியாகி இந்த நாட்டுக்கு சேவையாற்றுவது தான் எனது லட்சியம். அதற்கு நாசா பயணம் எனக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன் என்று மாணவி தான்யா தஷ்னம் தெரிவித்துள்ளார்.

டீக்கடைகாரர் மகள்:

டீக்கடைகாரர் மகள்:

மதுரை மாவட்டம் கள்ளந்திரியைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். அந்தப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் (வயது 15). மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம்

அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம்

இந்த மாணவிக்கு சிறுவயது முதல் ஆறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான பல்வேறு கட்டுகரைகளையும் மாணவி தான்யா எழுத்தியுள்ளார். பல்வேறு அறிவியல் போட்டிகளிலும் சிறப்பு பரிசுகளையும் வென்றுள்ளார்.
தற்போது, இந்த மாணவிக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Madurai Tea Shoppers Daughter Going to NASA : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X