தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே பாடம் கற்பித்த ஏழாம் வகுப்பு மாணவர்கள்.!

  பள்ளிக்கூடமென்று சொல்லும்போதே மர பெஞ்சுகளில் உட்காந்து கொண்டு, வாத்தியார் சொல்லுவதையெல்லாம் ஒருபக்கம் கேட்டுக்கொண்டே மறுபக்கம் விளையாடியதும், ஏதாவது கிறுக்குவதும், வேடிக்கை பார்த்ததும், எப்போது 'பெல்' அடிக்கும், எப்போது 'பிஇடி பீரியட்' வரும் என்று காத்துக்கிடப்பதும் தானே நமக்கெல்லாம் நினைவிற்குள் குதிக்கிறது.

  நாசிக்கில் உள்ள எஸ்பாலியர் பள்ளி மாணவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதை கூறினால், "பள்ளிக்காலம் என்றால் என்ன" என்பது பற்றிய நமது எண்ணம் முற்றிலுமாக மாறிவிடும். அபப்டி என்ன செய்தார்கள்.?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மிதக்கும் சைக்கிள் என்றவொரு திட்டம்.!

  பள்ளியில் நடைபெற்ற ஆண்டு அறிவியல் தினத்தில், மிதக்கும் சைக்கிள் என்றவொரு திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் பள்ளி மாணவர்கள், தங்கள் அறிவியல் ஆசிரியரான திருமதி கல்யாணி ஜோஷி வழிகாட்டுதலின் கீழ் பணிபுரிந்தனர்.

  ஆர்க்கிமிடஸின் கொள்கைகள்.!

  இந்த திட்டத்தின் முதல் அமர்வில், ஆர்க்கிமிடஸின் கொள்கைகள் மற்றும் அடர்த்தி மற்றும் மிதப்பு கருத்து (Archimedes' Principle and the concept of density and buoyancy) ஆகிய அறிவியல் கோட்பாடுகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.

  ப்ரெயின்ஸ்டராமிங்.!

  இரண்டாம் அமர்வின்போது, ப்ரெயின்ஸ்டராமிங் (மூளையைத் தூண்டும் ஒரு படைப்பாற்றல் நுட்பமாகும். இந்த நுட்பம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கண்டுபிடிக்க உதவுமாறு வழிமுறையாகும்) மற்றும் மிதக்கும் சைக்கிளின் கட்டமைப்பி ஆகியவைகள் விளக்கப்பட்டுள்ளன.

  தலைச்சுற்றவைக்குமொரு பாடம்.!

  ஆர்க்கிமிடீசின் கொள்கைகள் அல்லது மிதப்பு கருத்தியல் ஆகிய கோட்பாடுகள் (அ) பாடங்கள் முதிர்ந்த மாணவர்களுக்கே, அவ்வளவு நம்மையே கூட தலைச்சுற்றவைக்குமொரு பாடமாகும்/ விளக்கமாகும். ஆனால் இந்த பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்படியில்லை போலும்.

  வெல்டிங் தொடங்கி காலியான வாட்டர் கேன்.!

  இவைகளெல்லாம் வெறும் கற்பனைக்குரிய கருத்துகள் அல்ல, இவைகளை உண்மையான வாழ்க்கையில் நாம் அனுதினமும் பயன்படுத்ததும் கொள்கைகள் என்பதை புரிந்துகொண்டு மிதக்கும் சைக்கிளை உருவாக்க தொடங்கியுள்ளனர். பாதுகாப்பான முறையின் கீழ் வெல்டிங் தொடங்கி காலியான வாட்டர் கேன்களை மிதப்பிற்காக கட்டமைப்பது வரை அனைத்தையுமே மாணவர்களே செய்தனர்.

  ஒரு குறிப்பிடத்தக்க பயன்பாடு.!

  வெறுமனே மிதக்கும் சைக்கிளை உருவாக்குவதில் என்ன இருக்கிறது.? அறிவியல் எப்போதும் சமுதாயத்தில் ஒரு நேர்மறையான பங்களிப்பை தான் வழங்கும். இதன் விளைவாக உருவான மிதக்கும் சைக்கிளில் ஒரு குறிப்பிடத்தக்க பயன்பாடு இடம்பெற வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது.

  எளிதான, மலிவான, மிகவும் வசதியான வழிகளில் ஒன்று.1

  அதன் பின்னர் நீர் நிலைகளில் இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் இணைப்பொன்று, மிதக்கும் சைக்கிளுடன் இணைக்கப்பட்டது. இறுதியாக அது குளங்கள் மற்றும் நதிகளை சுத்தப்படுத்துவதற்கான எளிதான, மலிவான, மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக உருவெடுத்தது.

  நீந்தவோ அல்லது ஈரமாகவோ இருக்காது.!

  இந்த மிதக்கும் மிதிவண்டியானது, நீர் சுத்திகரிப்பு முயற்சிகளை எளிமையாக்குகிறது, இதனால் ஒருநபர் குளங்களை அல்லது ஆறுகளை சுத்தம் செய்வதற்காக நீந்தவோ அல்லது ஈரமாகவோ கூட வேண்டிய அவசியம் இருக்காது.

  மிகசிறந்த எடுத்துக்காட்டு.!

  மாணவர்கள் எழுச்சியுற்றால் சமுதாயத்தை மேம்படுத்துவதில் தங்கள் அறிவை பெரிதளவில் பயன்படுத்துவார்கள் என்பதற்கான மிகசிறந்த எடுத்துக்காட்டு இதுவாகும். இதுபோன்ற சாதனைப்படைப்புகளை அல்லது படைப்பாளிகளை பற்றிய விவரங்களை எங்களுடன் பகிர, கமெண்ட் செக்ஷனை பயன்படுத்தவும்.

  திருவனந்தபுரத்து கில்லாடிகள்.!

  இதற்கு முன்னதாக கழிவுநீர் தொட்டிகளுக்குள் மூச்சைப்பிடித்து இறங்கும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி இறக்கும் கொடுமையான சிக்கலை தீர்த்துக்கட்ட திருவனந்தபுரத்து கில்லாடிகள் ஒரு மீட்டர் உயர ரோபோவை வடிவமைத்து சாதனை படைத்தளம் இங்கு குறிப்பிடத்தக்கது.

  இந்த ரோபோட் எப்படி வேலை செய்யும்.?

  அது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஒரு ரோபோட் ஆகும். 'பென்டிக்யூட்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் ஆனது மொத்தம் நான்கு கால்களை கொண்டுள்ளது மற்றும் வைஃபை மற்றும் பிற கட்டுப்பாட்டு பேனல்களுடன் இணைக்கப்பெற்றுள்ளது.

  மேல்புறத்தில் இருந்தபடியே

  ஆழமான கழிவுநீர் தொட்டியின் மேல்புறத்தில் இருந்தபடியே அதன் கால்களை உள்ளேவிட்டு, கழிவுகளை வெளியே துப்பரவு செய்கிறது. பின்னர் கழிவுகளை ஒரு வாளிக்குள் போடப்படுகிறது.

  காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது.!

  இந்த 'பென்டிக்யூட்' ரோபோட் ஆனது காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது. அதாவது வாயு அல்லது அழுத்தம் நிறைந்த காற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இயக்கப்படுகிறது.

  வெடிப்பு.?

  இந்த செயல்பாட்டில் கனரக மின்னணு உபகரணங்கள் பயன்படுத்த கூடாது. ஏனெனில் அவையள் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து வெளிப்படும் வாயுக்களின் விளைவாக வெடிப்புகளை நிகழ்த்தும் ஆபத்துகள் ஏற்படலாம்.

  Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
  இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

  இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

  கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியின்கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,670 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர்.இந்த இறப்பு விகிதத்தை 'பென்டிக்யூட்' போன்ற பல படைப்புகள் குறைக்கும், கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Made By Nashik School Students, This Floating Cycle Can Clean Ponds. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more