பூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா

|

பூமியின் வடிவம் தட்டைதளம் எனும் கருத்து தட்டையான புவி கோட்பாடு என அழைக்கப்படுகிறது. பண்டைய இந்தியா மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனா போன்ற பல நாகரீகங்களிலும் நமது பூமி தட்டையானது என்றே நம்பப்பட்டு வந்தது.

பூமி தட்டையானது மேலே கவிழக்கபட்ட வானம்

பூமி தட்டையானது மேலே கவிழக்கபட்ட வானம்

அதேபோல் பூமி தட்டையானது என்றும் அதன் மேலே கவிழக்கபட்ட வானம் கிண்ணம் போன்றது என்றும் அமேரிக்கத்தின் கண்டுபிடிப்பு வரையிலான புதிய உலகம் நாகரீகங்கள் கருதி வந்தன.

இதே கோட்பாட்டுடன் வாழும் மனிதர்கள்

இதே கோட்பாட்டுடன் வாழும் மனிதர்கள்

இதே கோட்பாட்டுடன் தற்போதைய நவீன அறிவியில் உலகிலும் பல்வேறு நபர்கள் வாழந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதை நிரூபிக்கும் முயற்சியும் நடக்கிறது. பூமி தட்டையானது என்ற ஆதாரங்களை தீவிரமாக முன்வைத்து வாதாடியும் வருகின்றனர்.

ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா? வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா? வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

இதே எண்ணம் கொண்ட மேட் மைக்

இதே எண்ணம் கொண்ட மேட் மைக்

'மேட் மைக்' என்ற பெயரில் அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ் என்பவரும் அத்தகைய எண்ணம் உடையவர். மேட் மைக் என்றால் "Mad" Mike. 64 வயதான மேட் மைக், டிஸ்கவரி சேனல் குழுமத்தின் சயின்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்துள்ளார்.

 பூமி கோளவடிவமானது அல்ல

பூமி கோளவடிவமானது அல்ல

இவர், பூமி கோளவடிவமானது அல்ல, வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என கூறினார். இதற்காக நாசாவின் உதவியெல்லாம் கிடைக்காது என்பதையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

தானே ஒரு ராக்கெட்டை தயாரித்த மேட் மைக்

தானே ஒரு ராக்கெட்டை தயாரித்த மேட் மைக்

இதையடுத்து மேட் மைக் தானே ஒரு ராக்கெட்டை தயாரித்தார். அந்த ராக்கெட்டின் மூலம் பூமி தட்டை என்ற கூற்றை நிரூபிக்கவும் தயாரானார். ஆனால் அதற்கான ராக்கெட் தயாரிக்க பல நிறுவனங்களிடம் பொருள் உதவி கேட்டார். சில நிறுவனங்களின் பொருள் உதவியால் அந்த ராக்கெட்டையும் மேட் மைக் உருவாக்கினார்.

1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்

1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்

அதன்பின் அந்த ராக்கெட்டை பல்வேறு முயற்சிகளில் சோதித்து வந்தார். இதன் முதல்கட்டமாக மேட் மைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் கண்டுபிடித்த ராக்கெட் மூலம் தரையில் இருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கி உள்ளார்.

தட்டையானது என நிரூபிக்க விண்ணுக்கு பறந்த மைக்

தட்டையானது என நிரூபிக்க விண்ணுக்கு பறந்த மைக்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தனது நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க மேட் மைக் முயற்சித்துள்ளார். திட்டமிட்டபடி லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருந்து 180 கி.மீ., தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் ராக்கெட்டில் பறக்க மைக்கேல் தயாரானார். சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயற்சித்து ராக்கெட்டை செலுத்தினர்.

பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் கீழே விழுந்து மைக் மரணம்

பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் கீழே விழுந்து மைக் மரணம்

ஆனால் ராக்கெட் சென்ற வேகத்தில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பாராசூட் தனியே கிழிந்து கீழே விழுந்தது. இதனால் மேட் மைக் ராக்கெட் பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மைக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

மேட் மைக் இறந்ததற்கு இரங்கல்

தற்போதும் கூட பூமி தட்டையானது என நிரூபிக்க பலர் ஆராய்ச்சியும் ஆதாரங்களும் வாதங்களும் முன்வைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. மேட் மைக் இறந்ததற்கு அந்த சேனல் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

source: washingtonpost.com

Best Mobiles in India

English summary
Mad mike dies, who wanted to proove the flat earth theory

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X