1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?

|

ஏப்ரல் 9, 1940 ஆம் ஆண்டில், ஜேர்மன் போர்க்கப்பல் 'கார்ல்ஸ்ரூ' நோர்பேயின் தெற்கு கடற்கரையில் ஒரு டார்பிடோ தாக்குதலில் சேதத்தைத் தொடர்ந்து மூழ்கியது. இந்த போர்க்கப்பல் மூழ்கிய இடம் 80 ஆண்டுகளில் யாருக்கும் தெரியாமல் மர்மமாகவே இருந்து வந்தது. பல ஆண்டுகளாகப் பலர் தேடியும் இந்த கப்பல் யாரின் கண்களுக்கும் சிக்கவில்லை. ஆனால், தற்பொழுது காணாமல் போன போர்க்கப்பலை அடையாளம் கண்டுள்ளனர்.

80 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன போர்க்கப்பல்

80 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன போர்க்கப்பல்

ஜேர்மன் கப்பல் நோர்வே பீரங்கியால் தீக்குளிக்கப்பட்டது, அடுத்து ஒரு பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ செய்யப்பட்டது. டார்பிடோ என்பது நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் ஒரு ஏவுகணையாகும். 80 ஆண்டுகளுக்கு முன்பு நோர்வே மீதான படையெடுப்பின் போது இந்த போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இப்போது வரை இந்த விபத்தில் மூழ்கப்பட்ட போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை.

கார்ல்ஸ்ரூவின் தலைவிதி

கார்ல்ஸ்ரூவின் தலைவிதி

வரலாற்றுப் புத்தகங்களில் கார்ல்ஸ்ரூவின் தலைவிதியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம், ஆனால் கப்பல் எங்கு மூழ்கியது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. மேலும், நோர்வே மீதான தாக்குதலின் போது நிலையை இழந்த ஒரே பெரிய ஜெர்மன் போர்க்கப்பல் இதுவாகும். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இந்த முக்கியமான போர்க்கப்பலின் கல்லறை எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!

கடலுக்கு அடியில் மின் இணைப்பு செய்யும் போது சிக்கிய கப்பல்

கடலுக்கு அடியில் மின் இணைப்பு செய்யும் போது சிக்கிய கப்பல்

நோர்வே கடல்சார் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், துணை ஆராய்ச்சியாளருமான ஃப்ரோட் குவாலே இதை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுப் பணிகளின் போது தான் டென்மார்க்குக்கும் நோர்வேவுக்கும் இடையிலான ஸ்டாட்நெட்டின் மின் இணைப்பார்களுக்கு அருகில் ஒரு சிதைந்த கப்பலை சோனார்கள் கண்டுபிடித்துள்ளது.

ஒலிம்பிக் டாரஸ்

ஒலிம்பிக் டாரஸ்

இந்த கோடையில், ஸ்டாட்நெட்டின் மூத்த திட்ட பொறியாளர் ஓலே பெட்டர் ஹாபர்ஸ்டாட் தெற்கு நோர்வேயில் உள்ள கிறிஸ்டியன்ஸாண்டிலிருந்து 13 கடல் மைல் தொலைவில் காணப்பட்ட மூழ்கிய கப்பலைப் பற்றி மேலும் அறிய முயன்றிருக்கிறார். "ஒலிம்பிக் டாரஸ் (Olympic Taurus)" என்ற கடல் கப்பலில் இருந்து, மர்மமான சிதைவை ஆராய ROV - ரிமோட்டில் இயக்கப்படும் நீர்முழ்கி வாகனம் மற்றும் மல்டி பீம் எதிரொலி சவுண்டர்கள் மூலம் கப்பலை ஆராய்ந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

பீரங்கிகளை காட்டிய ROV கேமரா

பீரங்கிகளை காட்டிய ROV கேமரா

ROV முடிவுகள் டார்பிடோ செய்யப்பட்ட ஒரு கப்பலைக் காட்டியபோது, ​​அது போரிலிருந்து வந்தது என்பதை நாங்கள் உணர்ந்தோம். ROV கேமராக்கள் பீரங்கிகளை காட்டியதும், முல்லக்கப்பட்டிருப்பது அது ஒரு பெரிய போர்க்கப்பல் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். சிதைவு மிகவும் பெரியது என்பது வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது என்று ஆராய்ச்சியாளரான ஹோபர்ஸ்டாட் கூறியுள்ளார்.

 571 அடி நீளம் கொண்ட கார்ல்ஸ்ரூ போர்க்கப்பல்

571 அடி நீளம் கொண்ட கார்ல்ஸ்ரூ போர்க்கப்பல்

174 மீட்டர், அதாவது 571 அடி நீளம் கொண்ட இந்த கார்ல்ஸ்ரூ போர்க்கப்பலில் பெரிய நீராவி விசையாழிகள் மற்றும் ஒன்பது பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தது, கார்ல்ஸ்ரூ கப்பல் ஏப்ரல் 9ம் தேதி, 1940 வருடத்தில் ஆபரேஷன் வெசெரபூங்கின்(Weserübung) போது கிறிஸ்டியன்ஸான்ட் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு இந்த போர்க்கப்பல் தலைமை தாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலான ட்ரூயண்ட், டார்பிடோவால் கார்ல்ஸ்ரூவைத் தாக்கி நீரில் மூழ்கடித்துள்ளது.

சோனார் வழியாக கண்டுபிடிப்பு

சோனார் வழியாக கண்டுபிடிப்பு

2017 ஆம் ஆண்டில் சோனார் வழியாக ஒரு வழக்கமான கணக்கெடுப்பை மேற்கொண்டபோது இதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஜூன் மாத இறுதி வரை கப்பலின் அடையாளம் ஒரு மர்மமாகவே இருந்துள்ளது, ROV கைப்பற்றிய புகைப்படங்கள் அதன் ஹல், துப்பாக்கி கோபுரங்கள் மூலம் கார்ல்ஸ்ரூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்பொழுது இது சுமார் 1,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடப்பது வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp இல் யாருடன் அதிகம் பேசுகிறீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஈசி டிப்ஸ்!

தீங்கு விளைவிக்கும் பிற இரசாயனங்கள் இருக்கலாம்

தீங்கு விளைவிக்கும் பிற இரசாயனங்கள் இருக்கலாம்

தொல்பொருள் ஆய்வாளர் மேலும் கூறுகையில், "ஒன்பது பீரங்கிகளின் பிரதான பேட்டரியுடன் இருக்கும் இந்த போர்க்கப்பல் கிறிஸ்டியன்சாண்டிற்கு எதிரான தாக்குதல் குழுவில் மிகப்பெரியது மற்றும் மிகவும் பயமுறுத்தும் கப்பலாக இருந்தது. தற்பொழுது நோர்வே கடலோர நிர்வாகம் இப்போது கப்பலைக் கண்காணிக்கிறது வருகிறது, ஏனெனில் அதில் இன்னும் ஒரு மில்லியன் லிட்டர் எரிபொருள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பிற இரசாயனங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lost German World War II Warship Discovered On Seabed 80 Years After Sinking : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X