ஆமாம், நிலவிற்கு ஏன் திரும்ப போகவே இல்லை.? யாராச்சும் யோச்சீங்களா.?

|

பூமியின் இயற்கையான செயற்கைகோள் அழைக்கப்படும் நிலவு - பூமி கிரகத்தின் மிக அருகமையில் (384,400 கிமீ) இருப்பினும் கூட மறுபடியும் நாம் ஏன் மனிதர்களை அங்கு அனுப்பவில்லை.? ஏற்கனவே நிலவு என்பது முழுக்க முழுக்க திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு விண்வெளி பொருள் என்ற கோட்பாடுகள் உள்ள நிலைப்பாட்டில், நிலவிற்கு ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் போகவில்லை.?

சுமார் 225 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டிபோடும் உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவை கருத்தில் கூட கொள்ளவில்லை.? இறுதியாக நிலவிற்கு சென்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிலவு சார்ந்த இருண்ட ரகசியம் எதையாவது மறைகிறதா.? - என்றெல்லாம் நீங்கள் எப்போதாவது யோசித்து உண்டா..?

இப்படியெல்லாம் யோசித்ததில் இருந்து கிளம்பியது தான் நிலவு சார்ந்த ஒரு சதியாலோசனை கோட்பாடு ஆன - டார்க் சீக்ரெட் ஆப் மூன்.!

காணமுடியாத நிலவு பகுதி

காணமுடியாத நிலவு பகுதி

நிலவின் முதுகு அதாவது, பூமியின் எந்தவொரு பகுதியில் இருந்து பார்த்தலும் காணமுடியாத நிலவு பகுதி தான் ஏகப்பட்ட சதியாலோசனைகளும், புரளிகளும் கிளம்ப காரணமாகும். நிலவின் முதுகில் அதாவது பின்பக்கத்தில் எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்று உலக ஜீவாராசிகளின் ரகசிய தளங்கள் (Alien secret Moon base) இருப்பதாக சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் சந்தேகிக்கின்றன.

முழுமையாக ஆராய்ந்துவிட்டோமா என்ன.?

முழுமையாக ஆராய்ந்துவிட்டோமா என்ன.?

மேற்குறிப்பிட்டபடி, தொலைதூர கிரகமான செவ்வாய் வரை ஆராயும் நாம்.? ஏன் மறுபடியும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை.? ஒருவேளை நிலவு கிரகத்தை முழுமையாக ஆராய்ந்துவிட்டோமா என்ன.? அப்படியானால் நிலவு சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வுகள் தான் என்ன.? போன்ற பல கேள்விக்கான பதிலையும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் எதிர் நோக்குகின்றன.

ஏன் நிலவில் குடியிருப்பு திட்டமிடவில்லை.?

ஏன் நிலவில் குடியிருப்பு திட்டமிடவில்லை.?

செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடும் உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவில் குடியிருப்புகளோ, தளங்களோ அமைக்க திட்டமிடவில்லை.? இதில் இருந்தே நிலவில் பல மர்மங்கள் உள்ளன அவைகள் மறைக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கேள்வி எழுப்புகின்றன.

மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல்

மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல்

நிலவானது - எந்தவொரு மூலப்பொருட்கள் அல்லது பொருட்களின் அணுகலுமின்றி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட, ஒரு மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல் தான் தோன்றுவதாகவும் கோட்பாடுகள் சந்தேகிகிறது.

நம்பகத்தன்மையை குறைக்கிறது

நம்பகத்தன்மையை குறைக்கிறது

நிலவில் எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் தளம் உள்ளது. அங்கு தரை இறங்குவதும், தங்குவதும் விபரீதமானது என்ற கருத்தை நிலவிற்கு சென்ற நாசாவின் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் ஒற்றுப்போகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இங்கு நிலவின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.

லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது

லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது

நிலவு சார்ந்த மர்மமான சதியாலோசனை கோட்பாடுகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கடற்படை புலனாய்வு அலுவலகத்தை (Naval Intelligence Office) சேர்ந்த மில்டன் கூப்பர் நம்ப முடியாத கருத்தொன்றை பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துப்படி "நிலவில் ஏலியன் தளங்கள் இருப்பது உண்மைதான், அமெரிக்க கடற்படை புலனாய்வு சமூகத்தினரின்படி அந்த தளமானது 'லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

சிறிய வகை பறக்கும் தட்டு

சிறிய வகை பறக்கும் தட்டு

அதுமட்டுமின்றி அந்த லூனா பகுதியில் ஒரு பெரிய சுரங்க செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது என்ற ஆதராமில்லா தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார். அந்த சுரங்க செயல்பாடுகளில் தான், வேற்றுகிரக வாசிகளின் தாய் கப்பல்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றன. அதில் இருந்து வரும் சிறிய வகை பறக்கும் தட்டு அல்லது விண்கலங்களை தான் நாம் பூமியில் அவ்வபோது பார்க்க நேரிடுகிறது என்ற நம்பமுடியாத தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!

நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!

பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன..!

நிலவு ஒரு கண்காணிக்கும் தளம் :

நிலவு ஒரு கண்காணிக்கும் தளம் :

ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர். "நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட். நிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..!

ஆதாரம் #1

ஆதாரம் #1

1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது. அந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது.

திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.!

திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.!

மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது. மோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.!

ஆதாரம் #2 :

ஆதாரம் #2 :

சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும். முதலில் சோவியத் அறிவியல் அகாடமி,நிலவின் மேல் பகுதி மிகவும் தடினமாக இருப்பது எதனால்?, உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன? போன்ற பல கேள்விகளை கிளப்பியது. சில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

அணுசக்தி :

அணுசக்தி :

யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..? அணு உலை தயாரிப்பு மற்றும் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது..? இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #3

ஆதாரம் #3

பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது. நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறர்கள். நிலவின் பெருந்திரள் செறிவானது மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.

ஆதாரம் #4

ஆதாரம் #4

சந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது. விஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..!

ஆதாரம் #5

ஆதாரம் #5

நிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான். அதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #6

ஆதாரம் #6

சில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் "டைட்டானியம் மிகுதி" பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விண்கலம் தயாரிக்க : பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் டைட்டானியம் உருவானது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.

ஆதாரம் #7

ஆதாரம் #7

நிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது. நிலவை துல்லியமாக செயல்பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான். இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Looking at a Future on Mars But why not on nearby Moon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more