இந்தியர்களை பெருமிதம் செய்த இந்திய மாணவர்களின் இஸ்ரோ சேட்டிலைட்கள் இதுதான்.!

|

சந்திரயான்-1 இன் வெற்றிக்குப் பிறகு, பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இஸ்ரோவால் பெரிதும் ஈர்க்கபட்டது. இஸ்ரோ, பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இனைந்து, மாணவர்களின் உதவியுடன் செயற்கைக்கோள்களை உருவாக்கத் துவங்கியது. முக்கியமாகத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ரிமோட் சென்சிங் மற்றும் வானியல் செயற்கைக்கோள்களை உருவாக்கத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் கீழ் உருவாக்கப்பட்ட சேட்டிலைட்கள்

இஸ்ரோவின் கீழ் உருவாக்கப்பட்ட சேட்டிலைட்கள்

இஸ்ரோவின் மேற்பார்வையின் கீழ் இந்த செயற்கைக்கோள்களை மாணவர்கள் வடிவமைத்து, பரிசோதித்து உருவாக்கி விண்ணில் செலுத்தியுள்ளனர். இஸ்ரோ உடன் இருந்து, மாணவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட 10 செயற்கைக்கோள்களின் பட்டியல் மற்றும் செயற்கைக்கோள்களின் முழு விபரங்களைப் இங்கு தொகுத்துள்ளோம்.

1. ANUSAT

1. ANUSAT

ANUSAT (அண்ணா பல்கலைக்கழக சேட்டிலைட்), இஸ்ரடோவின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 20 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு, செய்தி அங்காடி மற்றும் முன்னோக்கி செயற்பாடுகளுக்கான தொழில்நுட்பத்துடன் PSLV-C12 / RISAT-2 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது.

உயரம்: 550 கிமீ

வளைவு: 41 டிகிரி

சுற்றுப்பாதை காலம்: 90 நிமிடங்கள்

மாஸ்: 40 கிலோ

2. STUDSAT

2. STUDSAT

ஸ்டுடென்ட் சேட்டிலைட் (STUDSAT), கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் பிக்கோ-செயற்கைக்கோள் இதுவாகும். இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில், இந்த செயற்கைக்கோள் மட்டுமே 1 கிலோவிற்கும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியின் உருவத்தை 90 மீட்டர் ரெசொலூஷனில் படம்பிடித்து, சேகரிக்கப்பட்ட டெலிமெட்ரி தரவுகளைப் பூமியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜூலை 12, 2010 அன்று PSLV-C15/CARTOSAT-2B ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மிஷன்: சிறிய சேட்டிலைட்

எடை: குறைவாக 1 கிலோ

உயரம்: 630 கிமீ

ஆர்பிட்: போலார் சன் சின்க்ரோனஸ்

3. SRMSat

3. SRMSat

இந்த SRMSat செயற்கைக்கோள், SRM பல்கலைக்கழக மாணவர்களால் இஸ்ரோவின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது. மாசுபாடு நிலைகள் மற்றும் வளிமண்டலத்தில் புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சனைகளை, கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் நீர் நீராவி (H2O) மூலம் கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் கிரேடிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், 900nm முதல் 1700nm வரை உள்ள அகச்சிவப்பு கதிர்வீச்சுகளைக் கண்காணிக்க முடியும். PSLV-C18/Megha-Tropiques ராக்கெட்டில் அக்டோபர் 12, 2011 ஆண்டு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

மாஸ் எடை: 10.9 கிலோ

சுற்றுப்பாதை வகை: SSPO

4. Jugnu

4. Jugnu

இந்த Jugnu செயற்கைக்கோள் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - கான்பூர், பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நானோசேட்டிலைட் இதுவாகும். அருகில் உள்ள அகச்சிவப்பு மண்டலத்தில் படத்தொகுப்பு செயலாக்க நெறிமுறைகளைச் சோதனை செய்வதற்கும், உள்ளது கேமரா மூலம் பூமியைப் படம் பிடித்தற்கும், ஜி.பி.எஸ் நேவிகேஷன் மற்றும் MEMS அடிப்படையிலான இன்வெர்ட்டியல் அளவீட்டு யூனிட் கண்காணிப்பிற்காக இந்த நானோ செயற்கைக்கோள் PSLV-C18/Megha-Tropiques ராக்கெட்டில் Oct 12, 2011 அன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

மாஸ் எடை: 3 கிலோ

சுற்றுப்பாதை வகை: SSPO

5. SWAYAM

5. SWAYAM

இந்த SWAYAM செயற்கைக்கோள் புனே பொறியியல் கல்லூரி மாணவர்களால், இஸ்ரோவின் மேற்பார்வையின் கீழ் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஸ்டுடென்ட் சேட்டிலைட் ஆகும். HAM சமூகத்திற்கு பாயிண்ட்-டு-பாயிண்ட் செய்திகளை அனுப்புவதற்காக இந்த செயற்கைக்கோள் PSLV-C34 / CARTOSAT-2 ராக்கெட்டில் Jun 22, 2016 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

மாஸ் எடை: 1 கிலோ

சுற்றுப்பாதை வகை: SSPO

6. SATHYABAMASAT

6. SATHYABAMASAT

இந்த SATHYABAMASAT செயற்கைக்கோள் சென்னை சத்யபாமா கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சேட்டிலைட் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களான நீராவி, கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடு போன்ற வாயுக்களின் தரவுகளைச் சேகரிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் PSLV-C34 / CARTOSAT-2 Series Satellite ராக்கெட்டில் Jun 22, 2016 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

மாஸ் எடை: 1.5 கிலோ

சுற்றுப்பாதை வகை: SSPO

விண்கல கல்லறை : ஆழ்கடலில் மறைந்துள்ள விண்கலம்!

7. PRATHAM

7. PRATHAM

இந்த PRATHAM செயற்கைக்கோள், மும்பை ஐஐடி கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, இஸ்ரோவின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாரிஸ் (பிரான்ஸ்)க்கும் மேல் இருக்கும் எலக்ட்ரான் எண்ணிக்கையை 1km x 1km ரெசொலூஷன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய, PSLV-C35 / SCATSAT-1 ராக்கெட்டில் Sep 26, 2016 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மாஸ் எடை: 10 கிலோ

சுற்றுப்பாதை வகை: 670 km SSPO

8. PISAT

8. PISAT

இந்த PISAT செயற்கைக்கோள், PES கல்லூரி பெங்களூரு மற்றும் அதன் கூட்டமைப்பு மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நானோ சேட்டிலைட் இந்த PISAT செயற்கைக்கோள். PSLV-C35 / SCATSAT-1 ராக்கெட்டில் Sep 26, 2016 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மாஸ் எடை: 5.25 கிலோ

சுற்றுப்பாதை வகை: 670 km SSPO

இலங்கை குண்டுவெடிப்பில் சமூக வலைதளத்தில் தொடர்பு: கோவையில்என்ஐஏஓ சோதனை.!

9. NIUSAT

9. NIUSAT

இந்த NIUSAT செயற்கைக்கோள், தமிழ்நாட்டில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் செயற்கைக்கோள் ஆகும். விவசாய பயிர் கண்காணிப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை ஆதரவு பயன்பாடுகளுக்கான பல்நோக்கு படங்களைப் பதிவிட PSLV-C38 / Cartosat-2 Series Satellite ராக்கெட்டில் Jun 23, 2017 ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் இது.

மாஸ் எடை: 15 கிலோ

சுற்றுப்பாதை வகை: 505 km SSPO

10. Kalamsat-V2

10. Kalamsat-V2

இந்த Kalamsat-V2 செயற்கைக்கோள், ஸ்பேஸ் கிட்ஸ் மற்றும் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட முதல் நான்காம் நிலை (PS4), PSLV சுற்றுப்பாதை தளம் கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் லேசான மற்றும் 3Dல் அச்சிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பதும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரைத் தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. PSLV-C44 ராக்கெட்டில் Jan 24, 2019 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

மாஸ் எடை: 1.5 கிலோ

நானோ சேட்டிலைட்

ஆன்லைனில் பிச்சை எடுத்த பெண் கைது: நடந்தது இதுதான்.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
List Of University Academics Institute Satellites Launched Into Space ISRO : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more