ஒரே அசிங்கமா போச்சு! விண்வெளியில் அதிக குப்பைகளை போடும் நாடு இதுதான்!

|

மனிதர்கள் எங்கு சென்றாலும், தங்கள் "அடையாளத்தை" விட்டு செல்வது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால்.. எல்லா "அடையாளங்களுமே" நேர்மறையானதாக இருப்பதில்லை!

அப்படியாக விண்வெளி ஆராய்ச்சி என்கிற பெயரின் கீழ், சில உலக நாடுகள் செய்துள்ள "குப்பை காரியம்".. விஞ்ஞானிகள் தொடங்கி சாமானியர்கள் வரை பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது!

அதென்ன காரியம்?

அதென்ன காரியம்?

சங்கடப்படுத்தும் அளவிற்கு அப்படி என்ன நடந்துள்ளது என்று தெரிந்து கொள்ளும் முன்னர், ஸ்பேஸ் ஜங்க் (Space Junk) அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்றால் என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

ஏனென்றால்.. விண்வெளியில் சில உலக நாடுகள் செய்துள்ள "குப்பை காரியம்" என்று நாங்கள் குறிப்பிடுவதே இந்த ஸ்பேஸ் ஜங்க்குகளை தான்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

ஸ்பேஸ் ஜங்க் அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் என்றால் என்ன?

ஸ்பேஸ் ஜங்க் அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் என்றால் என்ன?

மிகவும் எளிமையாக கூற வேண்டும் என்றால் - ஸ்பேஸ் ஜங்க் அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் என்றால் விண்வெளி குப்பைகள் ஆகும்.

விண்வெளியில் மனிதர்களால் "கைவிடப்பட்ட" பொருட்கள், இயந்திரங்கள் என எல்லாமே விண்வெளி குப்பைகள் தான்!

"சிதறிப்போன" பெயிண்ட் துண்டு முதல்.. "செத்துப்போன" சாட்டிலைட் வரை!

விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் இருந்து விழுந்த பெயிண்ட் துண்டு முதல் தொழில்நுட்ப கோளாறு போன்ற சிக்கல்களால் செயல் இழந்து போன செயற்கைக்கோள்கள் வரையிலாக.. விண்வெளியில் தேவை இல்லாமல் "மிதக்கும்" எல்லாமே விண்வெளி குப்பைகள் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது!

இந்த அடிப்படையில், எந்த நாடு விண்வெளியில் அதிக குப்பைகளை போட்டுள்ளது என்கிற பட்டியல் வெளியாகி.. "விண்வெளி ஆராய்ச்சியில் நாங்கதான் கெத்து!" என்று கூறும் பல நாடுகளின் மானத்தை வாங்கி உள்ளது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

அந்த பட்டியலில் இந்தியாவும் உண்டு!

அந்த பட்டியலில் இந்தியாவும் உண்டு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் வழியாக கிடைத்த தரவுகளை பயன்படுத்தி, ஜெர்மன் டேட்டாபேஸ் நிறுவனமான ஸ்டேடிஸ்டா (Statista), அதிகபட்ச விண்வெளி குப்பைகளை "உற்பத்தி செய்வதற்கு" பொறுப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கெட்ட செய்தி என்னவென்றால்.. அந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. நல்ல செய்தி என்னவென்றால். நாம் முதல் இடத்தில் இல்லை!

அப்போது முதல் இடம் யாருக்கு?

அப்போது முதல் இடம் யாருக்கு?

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றான - ரஷ்யா தான், இந்த பட்டியலின் முதலிடத்தில் உள்ளது.

இது 7,000 க்கும் மேற்பட்ட ராக்கெட் பாடிகள் மற்றும் பிற குப்பைகளுடன் "விண்வெளியில் அதிக குப்பைகளை கொண்ட நாடுகளின் பட்டியலின்" முதல் இடத்தில் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

இரண்டாவது இடம் யாருக்கு?

இரண்டாவது இடம் யாருக்கு?

ரஷ்யாவை தொடர்ந்து, அதன் மிகப்பெரிய போட்டியாளரான அமெரிக்கா - 5,216 விண்வெளி குப்பைகளுடன், இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் வேகமாக வளர்ந்து வரும் சீனா 3,845 விண்வெளி குப்பைகளுடன் இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆனது முறையே 520 மற்றும் 117 விண்வெளி குப்பைகளுடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

ஆறாவது இடத்தில் இந்தியா!

ஆறாவது இடத்தில் இந்தியா!

விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ச்சியான வெற்றிகள் மற்றும் வளர்ச்சிகளை பதிவு செய்து வரும் இந்தியா, 114 விண்வெளி குப்பைகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவை தொடர்ந்து, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆனது 60 விண்வெளி குப்பைகளுடன் ஏழாவது இடத்திலும், யுனைடெட் கிங்டம் ஆனது ஒரே ஒரு விண்வெளி குப்பையுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

விண்வெளி குப்பைகளுக்கு பின்னால் இருக்கும் பேராபத்து!

விண்வெளி குப்பைகளுக்கு பின்னால் இருக்கும் பேராபத்து!

விண்வெளி குப்பைகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அளவில் சிறிய ஒரு விண்வெளி குப்பையால்.. விண்கலங்கள், விண்வெளி நிலையங்கள், செயற்கைக்கோள்கள் என எதை வேண்டுமானாலும் சேதப்படுத்த முடியும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமே என்றால், விண்வெளியில் எவ்வளவுக்கு எவ்வளவு குப்பைகள் இருக்கிறதோ.. அதே அளவு விண்வெளி திட்டங்களும் பாதிக்கப்படும்!

Photo Courtesy: NASA, Wikipedia, ESA

Best Mobiles in India

English summary
List of Countries Producing Highest Amount Of Space Debris including India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X