இனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.!
இந்த சோதனைக்கு பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "நிகழ்த்தப்பட்ட ஒருங்கிணைந்த இந்த ஏவுகணை சோதனை ஆனது ஒடிஷா வரம்பின் கீழ் உள்ள சோத்பூரில் நடந்து உள்ளது.
எச்ஏஎல் (HAL) எனப்படும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது வெற்றிகரமாக இலகு ரக ஹெலிகாப்டர் என்கிற லைட் காம்பட் ஹெலிகாபட்டரில் ஏர்-டூ-ஏர் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. இந்த சோதனை ஆனது ஒரு நகரும் வான்வழி இலக்கு மீது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்கு பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "நிகழ்த்தப்பட்ட ஒருங்கிணைந்த இந்த ஏவுகணை சோதனை ஆனது ஒடிஷா வரம்பின் கீழ் உள்ள சோத்பூரில் நடந்து உள்ளது.

கமாண்டர் சுபாஷ் பி ஜான்
இதில் விங் கமாண்டர் சுபாஷ் பி ஜான், விஎம் (ஓய்வு), சோதனை விமானி, கர்னல் ரஞ்சித் சிட்டல் (ஓய்வு), எச் ஏ எல் விமான சோதனைப் பொறியாளர் மற்றும் குழு கேப்டன் ராஜீவ் துபே மற்றும் இந்திய விமான படை நிறுவனத்திலிருந்து சோதனை பைலட் ஆகியோர் பங்குகொண்டனர். இறுதியில் ஒரு குறைபாடற்ற சோதனை பணி மேற்கொள்ளப்பட்டது என்றும், குறிப்பிட்ட வான்வழி இலக்கு ஆனது துல்லியமாக தாக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக முடிந்தது, இலக்கு முற்றிலும் அழிக்கப்பட்டது." என்று கூறுகிறது.

லைட் காம்பாட் ஹெலிகாப்டர்
கூறப்படும் இந்த லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (LCH) தன்னுள் கொண்டுள்ள மற்ற ஆயுதங்களை பொறுத்தமட்டில், இது ஒரு 20 மிமீ எம்எம் டெர்ரட் துப்பாக்கி மற்றும் 70 மிமீ ராக்கெட்டுகள் ஆகியவைகளை கொண்டு உள்ளது. இந்த ஆயுதங்களின் சுடுதிறன் சோதனைகள் ஆனது ஏற்கனவே, அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே நிகழ்த்தப்பட்டு விட்டது. ஏ என் ஐ செய்தி நிறுவனத்தின் படி, உலகிலேயே சியாச்சின் பனிப்பாறை போன்ற உயர்ந்த மட்டங்களில் இயக்க திறன் கொண்ட ஒரே தாக்குதல் ஹெலிகாபட் இதுதான்.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
இந்த லைட் காம்பாட் ஹெலிகாப்டர் ஆனது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்பதும், ரோட்டரி விங் ஆராய்ச்சி மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் மூலம் உருவாக்கம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப் படையின் (IAF) செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்து செலுத்தி வருகிறது. மற்ற அட்டாக் ஹெலிகாப்டர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதை தாக்குதல் நடத்தும் போது தெரியும் என்கிறது ஏ என் ஐ செய்தி நிறுவனத்தின் மற்றொரு அறிக்கை.

நிதி நெருக்கடியின் மத்தியில் நிற்கும் எச்ஏஎல் நிறுவனம்
நிதி நெருக்கடியின் மத்தியில் நிற்கும் எச்ஏஎல் நிறுவனம் ஆனது சமீபத்தில், "அட்வான்ஸ் 83 லைட் காம்பாட் விமான மற்றும் 15 லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களுக்கான உத்தரவுகளை பெற்றுள்ள காரணத்தால், எங்களது நிதி நிலமையை மேம்படுத்திக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறி இருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ஏரோஸ்பேஸ்
இந்திய அரசு நடத்தும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஆன எச் ஏ எல்-க்கு தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுமார் 962 கோடி ரூபாய்க்கு நிதி தேவைப்படுகிறது. எச் ஏ எல் அதன் மைக்ரோ வலைத்தளமான ட்விட்டர் மூலம் இந்த நிதி நிலைமை உண்மைதான் என்பதை சமீபத்தில் ஏற்றுக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அகச்சிவப்பு பார்வை
இந்த ஹெலிகாப்டரின் ஹெல்மெட்டில் விஷன் மற்றும் முன்னோக்கி பார்க்கும் அகச்சிவப்பு பார்வை அமைப்பு ஆகியவைகள் உள்ளது. இந்த திறன் ஆனது தரையில் அல்லது ஆகாயத்தில் உள்ள எந்த ஒரு இலக்கத்தையும் கண்டுபிடித்து அழிக்க விமானிகளுக்கு உதவும். "இந்த விஷன்களை பயன்படுத்தி, ஹெலிகாப்டரை திருப்பாமலேயே எந்த ஒரு இலக்கையும் விமானிகள் தாக்கலாம் என்கிறது" இது சார்ந்த அறிக்கை ஒன்று.

பையர் அன்ட் பர்கெட்
"பையர் அன்ட் பர்கெட் (அதாவது ஏவுதலை நிகழ்த்து அதை மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்) ஏவுகணை ஆனது அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் செயல்படும் என்பதிலும், குறிப்பாக இது யூ ஏ வி-க்கள் எனப்படும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் மற்றும் நுண் விமானம் ஆகியவற்றின் தாக்குதல்களை கூட சமாளிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications