டெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ?

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒவ்வொருக்கும் எக்ஸோபிளான்ட் மீது கொள்ளை காதல்.

|

முதலில் எக்ஸோபிளான்ட் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எக்ஸோபிளான்ட் ஆனது எக்ஸ்டராசோலார் பிளான்ட் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் கிரகம் என்று அர்த்தம். முதல் முதலாக 1917 ஆம் ஆண்டில், வெளிப்பகுதியில் உள்ள முதல் எக்ஸோபிளான்ட் ஆதாரம் கிடைத்தது என்பதும், அந்த காலத்தில் அது - தற்காலம் போன்று - அங்கீகாரம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ?

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒவ்வொருக்கும் எக்ஸோபிளான்ட் மீது கொள்ளை காதல். ஏனெனில் உலகம் மனிதர்களின் கைகளுக்குள் அடங்க மறுக்கும் போது வெளி கிரங்கங்கள் தான் நம்மை காப்பாற்றும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

நாசா

நாசா

இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது என்று கேட்பவர்களுக்கான ஆயிரக்கணக்கான பதில்களில் ஒன்றுதான் -டெஸ் (TESS). அடுத்த தலைமுறை எக்ஸோபிளான்ட்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தின் கீழ், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட விண்கலம் ஆகும்.

டெஸ்

டெஸ்

டெஸ் என்பதின் விரிவாக்கம் டிரான்சிங் எக்ஸோபிளான்ட் சர்வே சேட்டிலைட் ஆகும். செலுத்தப்பட்ட முதல் நான்கு மாதங்களுக்குள் மொத்தம் எட்டு உறுதிப்படுத்தப்பட்ட வெளி கிரகங்களை இது கண்டுபிடித்தது என்பதும், அந்த கிரங்களில் சில, முன் எப்போதுமே வானியலாளர்களின் கண்களில் சிக்காத கிரகங்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 7

ஜனவரி 7

"அது அனுப்பும் தரவுகள் ஏற்கனவே வழிந்து ஓடுகிறது" என்று எம்ஐடியின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆ ஜார்ஜ் ரிக்கர், ஜனவரி 7 அன்று நடந்த அமெரிக்க வானியல் சங்கத்தின் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் டெஸ் (TESS) விண்ணில் செலுத்தப்பட்டது மற்றும் ஜூலை மாதத்தில் அது அறிவியல் ஆய்வுகளைத் நிகழ்த்த தொடங்கியது.

நட்சத்திர ஒளிகளுக்கு இடையே

நட்சத்திர ஒளிகளுக்கு இடையே

இது நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியின் ஒரு பின்தொடர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்கலம் ஆகும். கெப்ளர் ஆனது கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் எக்ஸோபிளான்ட்களை ஆராய்ந்து வந்ததும், பின் செயல் இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுவாரசியம் என்னவெனில், டெஸ் ஆனது முன்னோடியான கெப்ளர் போன்றே, நட்சத்திர ஒளிகளுக்கு இடையே கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் சிமிட்டல்களை கொண்டு வேற்று கிரங்கங்களை கண்டுபிடித்து வருகிறது.

360 டிகிரி

360 டிகிரி

கெப்ளரின் வழிமுறையை பின்பற்றும் டெஸ், அதன் வழியை பின்பற்றவில்லை. அதாவது கெப்ளர் போன்று வான்வெளியில் ஒரே வழியை நோக்கி செல்லாமல், டெஸ் ஆனது ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய வான்வெளி பகுதியை ஸ்கேன் செய்யும் (ஆராயும்) திறனை கொண்டுள்ளது. இந்த திறனின் கீழ், சரியாக இரண்டு ஆண்டுகளில், பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கக்கூடிய 360 டிகிரி வானத்தையும் டெஸ் ஆராய்ந்து முடித்து இருக்கும்.

செல்சியா ஹுவாங்

செல்சியா ஹுவாங்

முதல் கட்டமாக (நான்கு பிரிவுகளில்) டெஸ் ஆனது, ஏற்கனவே எட்டு உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்கள் மற்றும் 320 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்படாத கிரகங்களை கண்டறிந்துள்ளது. இந்த தகவலை எம் ஐ டி-யின் சூu செல்சியா ஹுவாங் கூறினார்.

எதிர்கால தொலைநோக்கி

எதிர்கால தொலைநோக்கி

கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான கிரகங்கள் ஆனது வெளிப்படையாகவே மிகவும் விசித்திரமானவைகளாக உள்ளன. குறிப்பாக மூன்றாவதாக கண்டுபிடிக்கப்பட்ட எச்டி 21749பி கிரகத்தை எடுத்துக்கொள்ளலாம். பூமியில் இருந்து சுமார் 52 ஒளி ஆண்டுகள் என்கிற அருகாமை தொலைவை உள்ள இந்த கிரகம் ஆனது பிரகாசமானதாக உள்ளது அதே சமயம் நமது விண்மீனை சுற்றியுள்ள ஒரு கிரகத்தை விடவும் மிகவும் குறைவான வெப்பநிலையை கொண்டு உள்ளது.


டெஸ் மூலம் கண்டறியப்படும் கிரகங்கள் ஆனது, வருகிற 2021 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி போன்ற எதிர்கால தொலைநோக்கி மூலம் நன்கு ஆராயப்படு உள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முழு வேலையும், உயிர் வாழத்தகுதியான கிரகங்களை கண்டறிவதே ஆகும்.

பூமியோடு`ஒப்பிடும் போது

பூமியோடு`ஒப்பிடும் போது

டெஸ் கண்டுபிடித்த ஒரு கிரகம் ஆனது ஓரளவு சூடாகவும், உயிருக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணமும் உள்ளது. ஆனால் அதன் சுற்றுபாதையை ஒருமுறை சுற்றி முடிக்க 36 புவி நாட்கள் ஆகிறது. சூரியனை சுற்றி உள்ள 100 ஒளியாண்டுகளுக்குள் இருக்கும் பிரகாசமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுடன் ஒப்பிடும் போது அறியப்பட்ட மிக சுற்றுப்பாதை காலம் கொண்ட கிரகம் இதுவாகும்.

பூமியோடு`ஒப்பிடும் போது 2.84 மடங்கு அளவிலும் மற்றும் 23.2 மடங்கு பரப்பளவில் பெரிதாக உள்ளது. ஆக அது அடர்த்தியான, ஒரு தடிமனான வளிமண்டலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கிரகமான பை மென்சி கே ஆனது (செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது), அதன் நட்சத்திரத்தை ஒவ்வொரு 6.27 நாட்களுக்கும் ஒருமுறை சுற்றி வருகின்றது. பூமியோடு ஒப்பிடும் போது 2.14 மடங்கு மற்றும் 4.8 மடங்கு பெரிதாக உள்ளது சுவாரஸ்யம் என்னவெனில் இதில் சுத்தமான தண்ணீர் இருப்பது போன்ற அடர்த்தியை கொண்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

மக்களே இதற்கே வாய்பிளக்க வேண்டாம். இதெல்லாம் வெறும் ஆரம்பம் மட்டுமே. டெஸ் விண்வெளிக்குள் சென்று ஒரு ஆண்டு தான் ஆகிறது. இதனை பின் தொடர்ந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் செல்கிறது. ஆக மொத்தத்தில், வேற்று கிரகத்திற்கு செல்ல நாமும் இப்போதே மனதளவில் தயார் ஆகிக்கொள்ள வேண்டும், அப்படித்தானே நாசா?

Best Mobiles in India

English summary
Less than a year after launch, TESS is already finding bizarre worlds: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X