சனி கிரகத்திற்கு அருகே ஜூம் செய்த போது.. விஞ்ஞானிகளுக்கு தெரிந்த வினோத தோற்றம்! அச்சு அசலா அப்படியே இருக்கு!

|

மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி டெலஸ்க்கோப் ஒன்றின் வழியாக சனி கிரகத்திற்கு (Saturn) அருகே 'ஜூம்' செய்து பார்த்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் சிக்கி உள்ளது.

அதென்ன விஷயம்? விஞ்ஞானிகளே அதிர்ச்சியடையும் வண்ணம், அங்கே அப்படி எதை பார்த்தார்கள்? இதோ விவரங்கள்:

மேலோட்டமாக பார்த்தால் ஒன்றுமே தெரியாது!

மேலோட்டமாக பார்த்தால் ஒன்றுமே தெரியாது!

மேலோட்டமாக பார்ப்பதற்கு மிகவும் அழகான, "வளையங்களை" (Rings) கொண்ட ஒரு தனித்துவமான கிரகமாக தெரியும் சனி கிரகம் (Saturn) ஆனது மிகவும் விசித்திரமான கிரகமும் கூட!

அது எவ்வளவு விசித்திரமானது என்றால், சனி கிரகத்திற்கு மட்டுமே மொத்தம் 83 நிலவுகள் உள்ளன. அதில் அறுபத்து மூன்று நிலவுகள் உறுதிப்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அந்த 60 நிலவுகளில் - ராட்சஸ நிலவு ஒன்றும் உள்ளது!

அந்த நிலவை ஜூம் செய்து பார்த்த போது?

அந்த நிலவை ஜூம் செய்து பார்த்த போது?

நாம் இங்கே பேசும் ராட்சஸ நிலவின் பெயர் - டைட்டன் (Titan). டைட்டன் என்பது சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றாகும். இது எவ்வளவு பெரியது என்றால் - நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் புதன் கிரகத்தை விட பெரியது; அதே சமயம் இது மிகவும் புதிரான நிலவும் கூட!

ஏனென்றால் - விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எப்போதெல்லாம் டைட்டன் நிலவை ஜூம் செய்து பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு ஒரு "வினோதமான தோற்றம்" தெரிந்துள்ளது!

அதென்ன தோற்றம்?

அதென்ன தோற்றம்?

டைட்டன் நிலவை ஆராயும் வானியலாளர்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், அது - பூமியின் இரட்டை பிறப்பு போல் இருப்பதாக கூறி உள்ளனர். அதாவது டைட்டன் நிலவானது பார்ப்பதற்கு அச்சு அசலாக பூமி போலவே தோற்றமளிக்கிறது என்று கூறி வந்தனர்.

விஞ்ஞானிகளின் இந்த கூற்றை, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி ஆன ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் வழியாக உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள டைட்டன் நிலவை 'ஜூம்' செய்த ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப் ஆனது, அதை புகைப்படமாக பதிவு செய்துள்ளது. அதை பார்க்கும் போது, டைட்டன் நிலவும் - பூமி கிரகமும் இரட்டையர்கள் (Twins) போல தெரிகிறது!

இதெப்படி சாத்தியம்?

இதெப்படி சாத்தியம்?

பூமிக்கும், சனி கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் சுமார் 1.2 பில்லியன் கிமீ ( 746 மில்லியன் மைல்கள்) ஆகும். இப்படியான ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு மத்தியில், சனி கிரகத்தின் நிலவும், பூமியும் எப்படி பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்க முடியும்? என்கிற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க - கடந்த காலங்களில் - பல வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் கூட பூமிக்கும் டைட்டனுக்கும் இடையே என்ன ஒற்றுமை உள்ளது? என்ன இணைப்பு உள்ளது? என்கிற கேள்விக்கான பதில் அப்போது கிடைக்கவில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதற்கு ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப்பும், அதன் புகைப்படங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

டைட்டன் நிலவில் மனிதர்களால் வாழ முடியுமா?

டைட்டன் நிலவில் மனிதர்களால் வாழ முடியுமா?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி டைட்டன் நிலவின் சமீபத்திய புகைப்படம் ஆனது, அங்கே மேகங்கள் நகர்கிறதா அல்லது வடிவத்தை மாற்றுகிறதா என்பதை கண்டுபிடிக்க உதவும். அதன் மூலம் டைட்டனின் பருவகால காற்று வடிவங்களை உறுதிப்படுத்த முடியும்.

அதுமட்டுமின்றி அங்கே ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலப்பரப்புகள் எவ்வாறு அழகான காட்சிகளாக உருவாகின்றன என்பதை பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ளலாம். ஒருவேளை அந்த புரிதல் - டைட்டனில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா இல்லையா என்பதைக் கண்டறியவும் கூட நமக்கு உதவலாம்!

இங்கிருந்து சனி கிரகத்திற்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்?

இங்கிருந்து சனி கிரகத்திற்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்?

தற்போது நம்மிடம் இருக்கும் மிகவும் வேகமான ஒரு விண்கலத்தின் ஏறி நாம் பயணிக்கும் பட்சத்தில், பூமியில் இருந்து சனி கிரகத்திற்கு செல்ல சுமார் மூன்று ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆகுமாம்!

அப்படி போனாலும் கூட சனி கிரகத்தில் தரை இறங்குவதும் சாத்தியம் இல்லாத காரியம் ஆகும். ஏனென்றால், இந்த கிரகம், பெரும்பாலும் வாயுக்கள் மற்றும் திரவங்களை கொண்டே சுழல்கிறது.

ஆகையால் ஒரு விண்கலத்தால் சனி கிரகத்தில் தரையிறங்க முடியாது. அதுமட்டுமின்றி அருகில் கூட செல்ல முடியாது. சனி கிரகத்தின் ஆழமான அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகள் ஆனது எந்தவொரு விண்கலத்தையும் நசுக்கி, உருக்கி, ஆவியாக்கிவிடும்!

Image Credit: NASA, ESA, CSA, A. Pagan [STScI], JWST Titan GTO Team, STScI, Keck Observatory, Judy Schmidt, Wikipedia

Best Mobiles in India

English summary
Latest James Webb Images Of Titan Proved That The Saturn Moon Looks Like Our Earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X