விரைவில் உங்கள் கண்களில் இருந்து லேசர் கற்றையை வெளியிடலாம்!
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களின் மூலம் முதன் முதலாக, வளைந்து கொடுக்கக்கூடிய மற்றும் மிகவும் மெல்லிய 'மெம்ரேயின் லேசர்' உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கான்டெக்ட் லென்ஸ்களில் இருந்து ஒரு படி மேலே போய், அவற்றை பயன்படுத்தி உங்கள் கண்களில் இருந்து லேசர் கதிர்களை வெளியிடுவது விரைவில் சாத்தியமாக உள்ளது.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களின் மூலம் முதன் முதலாக, வளைந்து கொடுக்கக்கூடிய மற்றும் மிகவும் மெல்லிய 'மெம்ரேயின் லேசர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதை வளைந்த அல்லது மென்மையான எந்தொரு பொருளின் மீது ஒட்ட முடியும். இதற்கு நீலநிற ஒளி அளிக்கப்படும் போது, இந்த மெம்ரேயினில் இருந்து லேசர் கதிர் வெளியாகும். இந்த மெம்ரேயினை கான்டெக்ட் லென்ஸ்களில் ஒட்டி பரிசோதித்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள், அதன்பிறகு பசுவின் கண்மணியில் ஒட்டி சோதித்துள்ளதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

காமிக்ஸ் கதை
சில காமிக்ஸ் கதைகளில் வருவது போல, இந்த மெம்ரேயினை தங்கள் கண்களில் அணிந்து கொண்டு வந்து, அவர்கள் கண்களில் இருந்து லெசர் கதிர்களை செலுத்தி எந்தொரு கட்டிடத்தின் தூணையும் சேதப்படுத்தமாட்டார்கள். ஏனெனில் காமிக்ஸ் புத்தகங்களில் உள்ள கதாநாயகர்கள், லெசர் பார்வையை பயன்படுத்தி, கட்டிடங்களில் ஓட்டையிடுவது அல்லது வில்லன்களின் ஆயுதங்களை செயலழிக்க செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக படித்து இருக்கிறோம். ஆனால் இந்த லெசர் அட்டைகள் பொருத்தப்பட்ட கான்டெக்ட் லென்ஸ்கள், அடையாளம் காண அல்லது பாதுகாப்பு தொடர்பான சோதனைக்காக பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, இதை எண்ணி யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

ஒளிக் கதிர்
மற்ற ஒளிக் கதிர் வகைகளைப் போல, இயற்கையான முறையில் லேசர் கதிர்கள் உண்டாவது இல்லை. இது ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டுமே இயங்குவதோடு, சீரான திசையை கொண்டது. நீண்ட தொலைவுகளுக்கு இலக்கு நிர்ணயித்து நிலைநிற்கும் தன்மை கொண்டது என்று லாரன்ஸ் லிவர்மோர் நேஷ்னல் ஆராய்ச்சியகம் தெரிவிக்கிறது. சில நுட்பமான கருவிகள் மற்றும் சில நுட்பமான அறுவை சிகிச்சைகளின் வகைகளுக்கு, இந்த லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் சார்ந்த இயந்திரங்கள், செயற்கை கோளில் இருந்து இந்த லேசர் கதிர்கள் மூலம் அளவீடுகளை அறிந்து கொள்ளவும் 3டி லேண்டுஸ்கேப் வரைபடங்கள் மற்றும் பூமியின் சுழற்சியின் தன்மைகளை ஆராய்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

லேசர்
அதே நேரத்தில், பெரும்பாலான லேசர் தாங்கிகளுக்கு ஒரு உறுதியான ஆதரவு கட்டமைப்பு தேவைப்படுவதால், இந்த தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து உள்ளது. இது போன்ற ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டை கடக்கும் வகையில், ஒரு கண்ணாடி அடுக்கின் மீது ஒரு மெல்லிய தாளை உருவாக்கும் முறையை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்பிறகு கண்ணாடியை நீக்கிவிட்டால், எந்த மாதிரியான மேற்பரப்பின் மீது வேண்டுமானாலும் அந்த மெல்லிய தாளை பரப்ப முடியும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்பியல்
இது குறித்து இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வானியல் பள்ளியின் பேராசிரியரும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான மால்டி காதர், லைவ் சைன்ஸுக்கு அனுப்பிய ஒரு இமெயிலில் கூறியிருப்பதாவது, "மிகவும் மெல்லிய மற்றும் எடைக் குறைந்த ஒரு புது வகையான லேசரை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த முழு லேசர் சேர்த்து பார்த்தால் கூட, ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒன்று என்ற அளவை விட குறைவான அடர்த்தியை மட்டுமே பெற்றிருக்கும்" என்றார்.

இயந்திர முறையில்
அவர் மேலும் கூறுகையில், "இதன் விளைவாக, இந்த லேசர்களை இயந்திர முறையில் பொருத்துவதற்கு ஏற்றதாகவும் பெரும்பாலான எந்தொரு பொருளின் மீது வேண்டுமானாலும் அதை ஒரு ஸ்டிக்கரை போல ஒட்டவும் முடிகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications