இந்தியா முழுக்க ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள்; நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பீதி.!

இந்தியாவின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தும் அந்த புகைப்படத்தில் ஆங்காங்கே காணப்படும் சிவப்பு நிற புள்ளிகளை பார்த்த உடனேயே ஒரு குழப்பம் ஏற்படுகிறது.

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமானது, குழப்பத்தையும் பீதியையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தும் அந்த புகைப்படத்தில் ஆங்காங்கே காணப்படும் சிவப்பு நிற புள்ளிகளை பார்த்த உடனேயே ஒரு குழப்பம் ஏற்படுகிறது.

அந்த சிவப்பு நிற புள்ளிகளுக்கான காரணங்களை அறிந்த பின்னர், ஏற்பட்ட குழப்பமானது ஒரு வகையான பீதியாக மாறுகிறது. அப்படி அந்த புகைப்படம் வெளிப்படுத்தும் உண்மை தான் என்ன.? காட்சிப்படும் அந்த சிவப்பு நிற புள்ளிகளின் அர்த்தம் தான் என்ன.?

News Source : timesofindia.indiatimes.com

அந்த சிவப்பு புள்ளிகள் என்னவென்று தெரியுமா.?

அந்த சிவப்பு புள்ளிகள் என்னவென்று தெரியுமா.?

ஏப்ரல் மாதத்தின் இறுதியில், அதாவது கடைசி 10 நாட்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த விவரங்களின் வெளிப்பாடு தான் இந்த நாசாவின் வரைப்படம். வெளியான வரைபடத்தில், இந்தியாவின் உத்திரபிரதேசம் (UP), மத்தியப் பிரதேசம் (MP), மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் சில தெற்கு மாநிலங்கங்களில் காட்சிப்படும் அந்த சிவப்பு புள்ளிகள் என்னவென்று தெரியுமா.? வேறொன்றுமில்லை, இந்தியாவில் பற்றி எரிந்த நெருப்புகளே ஆகும்.

பிளாக் கார்பனின் தீங்கிழைக்கும் விளைவு.!

பிளாக் கார்பனின் தீங்கிழைக்கும் விளைவு.!

ஆம். அந்த புள்ளிகள் அனைத்தும் உக்கிரமான உஷ்ணத்தின் வெளிப்பாடு ஆகும். உடன் அது பிளாக் கார்பனை கக்குகிறது என்பதும், இந்த பிளாக் கார்பன் ஆனது, புவி வெப்பமயமாதலை மிகவும் அதிகப்படுத்தும் ஒரு கூறு ஆகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காட்டுத்தீகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது, ஆனால்.?

காட்டுத்தீகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது, ஆனால்.?

வெளியான வரைப்படத்தில் காணப்படும் புள்ளிகள் ஆனது, பெரும்பாலும் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீகளாக இருக்கலாம், அது கோடை காலத்தின் வெப்பத்தை தாங்காமல் பற்றி எரிந்த இடங்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலைப்பாட்டில் தான், நாசாவின் ஆராய்ச்சி விஞ்ஞானியான ஹெய்ன்ன் ஜெத்வா (கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் மையத்தில் உள்ள பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கம்) அவர் கருத்தை முன்வைக்கிறார்.

அவரின் கருத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.!

அவரின் கருத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.!

ஹெய்ன்ன் ஜெத்வாவின் படி "இவைகள் பெரும்பாலும் கிராப் பையர்களாக (crop fires) இருக்கலாம், அதாவது, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் ஏற்பட்ட தீயாக இருக்கலாம் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பொதுவாக, பயிர் தீ ஆனது கட்டுப்பாடற்ற அதிகமான புகையை ஏற்படுத்தும். அதாவது மாசுபாட்டை உடனடியாக இரட்டிப்பாக்கும் என்று அர்த்தம். பயிர் தீ ஏற்படவும் வெயில் தானே காரணம் என்று கேட்டால், இல்லை, அதற்கு காரணம் விவசாயிகள்.!

விவசாயிகள் அப்படி என்ன செய்தனர்.?

விவசாயிகள் அப்படி என்ன செய்தனர்.?

ஆம், விவசாய விஞ்ஞானிகளின் படி, சமீபத்திய ஆண்டுகளாக பயிர் தீக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, விவசாயிகள் பெரிதளவில் பயன்படுத்தும் கம்பைன் ஹெர்வேஸ்ட்டர்ஸ் (combine harvesters) எனப்படும் அறுவடை இயந்திரம் தான் காரணமாம். இவ்வகை இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது மீதமான துருவல்கள் வெளிக்கிடப்படும். அதை தீ வைத்து எரிக்கும் பழக்கமானது ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற வடக்கு மாநிலங்களுக்கு மட்டும் இல்லாததால் இவ்வளவு பெரிய பிரச்னை கிளம்பியுள்ளது.

இன்னும் பெரிய வேதனை என்னவென்றால்.?

இன்னும் பெரிய வேதனை என்னவென்றால்.?

மீதமான நெல் துருவல்கள் எரிக்கப்படுவது என்பது, பழங்காலத்தில் இருந்தே விவசாயிகளிடையே இருக்கும் ஒரு பொதுவான நடைமுறையாகும். ஏனெனில் அவைகளை தீவனமாக்க முடியாது. ஆனால், கோதுமைத் துருவல்களை எரிக்கும் பழக்கம் மிக மிக சமீபத்தில் கிளம்பிய ஒரு பழக்கமாகும். அதிலும் நாசா வரைபடத்தில் காணப்படும் பயிர் தீ நிகழ்வுகளை சந்தித்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துவது, அரிசி-கோதுமை பயிர் முறைமையை பின்பற்றும் மாநிலங்கள் தான் என்பது இன்னும் வேதனை.

விவசாயிகளை குற்றம் சொல்வதில் புண்ணியமில்லை.!

விவசாயிகளை குற்றம் சொல்வதில் புண்ணியமில்லை.!

அறுவடை செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது. ஒன்று கைமுறையாக செய்வது. மற்றோன்று மனித உழைப்பு பற்றாக்குறை காரணமான அறுவடை இயந்திரங்கள் கொண்டு செய்வது. இரண்டாம் வழிமுறையானது மலிவான மற்றும் விரைவான ஒரு வழிமுறையாகும். உடன் அடுத்த விளைச்சலுக்கு மண்ணை தயார் செய்வதற்கும் வழிவகுக்கிறது. ஆக, பெரும்பாலான விவசாயிகள் இரண்டாம் வழிமுறையையே கையாளுகின்றனர்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
விவசாயிகளின் கண்மூடித்தனம்.!

விவசாயிகளின் கண்மூடித்தனம்.!

இதனால் ஏற்பட்டுள்ள விளைவு என்னவென்று தெரியுமா.? நாட்டின் பிளாக் கார்பன் உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 14 சதவிகித இடத்தை பயிர் தீ நிகழ்வுகள் ஆட்கொண்டுள்ளது. இதில் இருந்து விவசாயிகள் மண்ணையும், விவசாயத்தையும் காப்பாற்றும் முனைப்பின் கீழ், புவி வெப்பமயமாதல் எனும் மாபெரும் பிரச்சனையை மறந்து விட்டனர் என்பதை வெளிப்படையாக காண முடிகிறது.

Best Mobiles in India

English summary
Large parts of India dotted with fires: Nasa images. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X