ஸ்டெர்லைட் பலி- உயிர் சேதம் ஆகாத துப்பாகி வடிவமைத்து அசத்திய இளைஞர்.!
இனி போலீசார் கலவரத்தின் போது, சூப்பாக்கி சூடு நடத்தினாலும் உயிர் பலி ஏற்படாத நவீன துப்பாக்கியை கும்ப கோணத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தின் போது, போலீசார் துப்பாகி சூடு நடத்தியதில், 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த கலவரத்தில் போது தமிழக காவல்துறை ஒன்றும் செய்யாத அப்பாவி பொது மக்களை சுட்டு தள்ளியது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு இடங்களில் போலீசாருக்கு எதிராக கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. இனி போலீசார் கலவரத்தின் போது, சூப்பாக்கி சூடு நடத்தினாலும் உயிர் பலி ஏற்படாத நவீன துப்பாக்கியை கும்ப கோணத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துப்பாக்கி சம்பவம் தூத்துக்குடியில், பொது மக்கள் சார்பில் 100 நாள் தொடர் போராட்டம் நடந்தது. 100 நாள் வரை அமைதியான முறையில் பொது மக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் ஒரு சில பேர் அமைதியான முறையில் நடக்க கூடாது என்று கலவரமாக மாற்றினர்.

7 பேர் பலி:
பெரு மக்கள் கூட்டம் இருந்ததால், கலவரமும் பெரிதாக வெடித்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் கலவரத்தை கட்டிக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில், அப்பாவி பொது மக்கள் 7 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பொது மக்கள் , அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த துப்பாக்கி சூடு தமிழகத்தை உலுக்கியது.

புதிய துப்பாகி வடிவமைத்த இளைஞர்:
இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் ஏவியானிக்ஸ் என்ஜினியரிங் படிப்பு பயின்றுள்ளார். படித்தபின் வெளிநாட்டு பணிகளுக்குச் செல்லாமல், புதிய புதிய அறிவியல்பூர்வமான, பயனுள்ள கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்றாக இவர் கண்டுபிடித்துள்ளது கலவரத்தை உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தும் துப்பாக்கி.

உருளைக் கிழங்கு:
உருளைக் கிழங்கு, களிமண் உருண்டை ஆகியவற்றை இட்டு சுட்டால் கலவரக்காரர்களுக்கு காயம் ஏற்படாமல் பெரும் வலியை மட்டும் ஏற்படுத்தும் என்கிறார் சரவணன்.

சிறுவயது முதல் ஆராய்ச்சி:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தாக்கத்தில் இந்த துப்பாக்கியை வடிவமைத்ததாகக் கூறும் சரவணன், மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். சிறு வயது முதலே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்ததால், மிகுந்த பொருட்செலவில் அவரை ரஷ்யாவில் படிக்க வைத்ததாக கூறுகிறார் சரவணனின் தந்தை.

தெர்மாகோலுக்கு மாற்று திட்டம்:
வைணை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க புதிய திட்டம் தன்னிடம் இருப்பதாக இளைஞர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தெர்மாகோல் திட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து கேலியும் கிண்டலும் மீடியாக்களில் நடந்தது தான் உண்மை.

வேதனை தெரிவித்தார்:
25 கண்டுபிடிப்புகளுக்கு தன்னிடம் பார்முலா உள்ளதாகவும், நிதிவசதி இல்லாததால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்.

அரசுக்கு சமர்ப்பணம்:
தான் வடிவமைத்த துப்பாக்கி, ஆயுத வகையில் வருவதால், காவல்துறை மூலமாக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக சரவணன் கூறினார். வெளிநாட்டு வேலைகளைத் தேர்வு செய்யும் இளைஞர்களுக்கு சரவணன் ஒரு பாடமாகத் திகழ்கிறார்.

இதுபோன்ற இளைஞர்கள் தேவை:
இது போன்ற ஆக்கவும், ஊக்கவும் நிறைந்த இளைஞர்கள் இந்தியாவுக்கு தேவையாகவும் இருக்கின்றனர். இவர்களை அரசு உரிய முயற்சி எடுத்து பாராட்டு விழா நடத்திய அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உதவ வேண்டும் என்று பலரின் விருப்பமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications