'ஆபத்தில்' அமெரிக்கா : நேரடி எச்சரிக்கை விடுத்த கிம் ஜோங்-உன்..!

|

வடகொரியாவானது வழக்கமாக சர்ச்சைக்குறிய ராக்கெட் லான்ச் அல்லது எதிர்ப்பை மீறிய கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பல்லிஸ்டிக் ஏவுகணை சோதனை போன்றவைகளை நிகழ்த்தி தன் மீது உலக நாடுகள் கொண்டிருக்கும் அச்சத்தை நீட்டித்து கொள்ளும். அதன் பெரும்பாலான சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் வடகொரியா மீதிருந்த பீதி மட்டும் தீராமல் இருந்தது..!

அப்படியாக மறைமுகமாக எச்சரிக்கையையும் அச்சுறுத்தல்களையும் நிகழ்த்தும் வடகொரியா தற்போது நேரடியாகவே அமெரிக்காவை எச்சரித்துள்ளது..!

#1

#1

வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளை மேற்பார்வை பிறகு கிம் ஜோங்-உன் "பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்க தளங்களை எங்களின் ராக்கெட்களால் தாக்க முடியும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#2

#2

தோல்விகளில் முடிந்த பல பரிசோதனைகளுக்கு பின்பு இம்மாதம் இரண்டு முசுடான் ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

#3

#3

அதில் ஒரு சோதனையில் வடகொரியாவின் முசுடான் ஏவுகணை சுமார் 2500 மைல்கள் ஜப்பான் கடலின் மேல் பறந்துள்ளதுதான் அமெரிகக்கா மீதான எச்சரிக்கைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது.

#4

#4

இந்த வெளியீட்டு சோதனையை தனிப்பட்ட முறையில் கண்காணித்த கிம், இதுவொரு பாராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய நிகழ்வு என்று விவரித்தது மட்டுமின்றி மூலம் பசிபிக்கில் ஆபரேஷனில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தளங்களை தாக்கும் திறனை கொண்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

#5

#5

கிம் ஜோங்-உன் வெளியிட்ட அதே அறிக்கையில் 'அமெரிக்க பாஸ்**ட்' என்று கொரிய மொழியில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடாத்தக்கது.

#6

#6

இந்த ஏவுகணை சோதனை மூலம் பியோங்யாங்கின் அணுஆயுத திட்டத்தை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர பேச்சுவார்த்தையை தூண்டிவிட்டுள்ளது.

#7

#7

இந்த சோதனையானது வடகொரியாவின் குறிப்பிடத்தக்க முன்கூட்டிய தாக்கும் அணு ஆயுத திறனின் வலிமையை நிரூபிக்கும் ஒரு சோதனை என்று வடகொரியாவின் கேசிஎன்ஏ (KCNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#8

#8

1500 முதல் 2500 மைல்களுக்குள் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கும் என்ற தத்துவார்த்த வரம்பில் உள்ள முசுடான் ஏவுகணையானது குவாம் அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்தே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

#9

#9

கேசிஎன்ஏ-வின் தகவலின் கீழ் முசுடான் ஏவுகணை அதன் முழு அளவிலான உருவகப்படுத்த உயர் கோணத்தில் சுமார் 1400-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் உயரம் அடையும் எனத்தெரிய வருகிறது.

#10

#10

வடகொரியாவின் இந்த செயலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்துள்ள மறுபக்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது ரகசிய சந்திப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

#11

#11

பிரான்சின் துணை தூதர் அலெக்சிஸ் லாமெக் "வடகொரியாவின் இந்த சோதனையானது ஒரு தெளிவான ஐநா சபை தீர்மான மீறல்" என்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.

#12

#12

ஐ.நா வின் நடவடிக்கைகளின்கீழ் பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

#13

#13

வடகொரியாவின் சோதனைக்கு அமெரிக்கா மட்டுமின்றி நேட்டோ, ஜப்பான் மற்றும் தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளன என்பதும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில் விரிவாக்கம் சார்ந்த விடயத்தை வலியுறுத்தி கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#14

#14

தென் கொரியாவில் மேம்பட்ட அமெரிக்க தாட் (THAAD) ஏவுகணை அமைப்பை பயன்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது சியோல் மற்றும் வாஷிங்டனில் கிளம்பியுள்ளன, இதற்கு சசீனாவின் பலத்த எதிர்ப்பு உள்ளது.

#15

#15

ஆகமொத்தம் முசுடான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது அமெரிக்க நிலப்பகுதியில் ஒரு அணு தாக்குதலை வழங்கும் திறன் கொண்ட ஒன்றாய் உருவாகி ஆர்பரித்துக் கொண்டிருக்கிறது என்பதால் வல்லுநர்கள் உஷாராக இருந்துக்கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#16

#16

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 'தடைநீக்கம்' செய்யப்பட்ட 'ரா' செயல்பாடுகள்..!


இரத்த வரலாறு : நாசம் செய்ய பார்த்த ஹிட்லரின் நாஸி வொண்டர் வெப்பன்ஸ்..!


நியூட்டனின் யாரும் அறிந்திராத ஒரு கண்டுபிடிப்பு, மூடி மறைக்கப்படுகிறதா..?

#17

#17

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : ராய்ட்டர்ஸ்

Best Mobiles in India

English summary
Kim Jong Un warns his rockets can hit America. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X