வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைப் படம் பிடித்து வெளியிட்ட "நாசா".!

கேரளா மற்றும் கர்நாடக வெள்ளத்தில் மூழ்கிய செய்திகள் தான் வலைத்தளம் முழுதும் பரவி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை கண்டிடாத அளவுக்கு கேரளாவில் கனமழை பெய்து பேரழிவு ஏற்பட்டுள்ளது.

By Sharath
|

கேரளா மற்றும் கர்நாடக வெள்ளத்தில் மூழ்கிய செய்திகள் தான் வலைத்தளம் முழுதும் பரவி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை கண்டிடாத அளவுக்கு கேரளாவில் கனமழை பெய்து பேரழிவு ஏற்பட்டுள்ளது.

மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரகுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய சுமார் 4,62,456 லட்சம் பேர் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமின்றி 1,435 அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்

இன்று அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கேரளா வெள்ளத்திற்கு முன்பு எப்படி இருந்தது வெள்ளத்திற்குப் பின் கேரளாவின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று தனது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 6 & ஆகஸ்ட் 22

பிப்ரவரி 6 & ஆகஸ்ட் 22

நாசா வெளியிட்டுள்ள முதல் புகைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி 2018 வெள்ளத்திற்கு முன் எடுக்கப்பட்டுள்ளது, இரண்டாவது புகைப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 2018 வெள்ளத்தினால் கேரளா பாதிக்கப் பட்ட பின் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000 கோடி இழப்பு

ரூ.20,000 கோடி இழப்பு

தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. கேரள மாநில அரசிற்குக் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கேரள மாநில முதல்வர் பி.எஸ். விஜயன் தெரிவித்திருக்கிறார்.

40 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது

40 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது

இந்தப் புகைப்படத்தில் கருவனுர் மற்றும் பெரியார் அணையைச் சுற்றியுள்ள 40 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. பிப்ரவரி 6 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் லேண்ட்சாட் 8 செயற்கைக்கோளின் இமேஜரால் எடுக்கப்பட்டது, அதே போல் ஆகஸ்ட் 22 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல்-2 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Kerala Floods: NASA shares before-after images to show the sheer extent of damage : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X