சீன ஸ்பேஸ் ஸ்டேஷனை தொடர்ந்து நாசாவின் கெப்ளர் செயலிழப்பு; இதுவும் பூமியோடு மோதுமா?

அது வருகிற ஏப்ரல் மாதம், அமெரிக்காவில் விழுந்து நொறுங்குமென கணிக்கப்பட்டுள்ளது.

|

சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டியான்யாங்க் -1 எனும் ஸ்பேஸ் ஸ்டேஷன், அதன் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், அதனை சீன விண்வெளி நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் அது விண்வெளியில் தான்தோன்றித்தனமாக சுற்றி அலைவதாகவும் கடந்த பல மாதங்களாக (இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக) பல தகவல்கள் வெளியாகின. அது உண்மையில்லை என்று கூறிவந்த சீனா, சமீபத்தில் அதனை ஒப்புக்கொண்டுள்ளது.

சீன ஸ்பேஸ் ஸ்டேஷனை தொடர்ந்து நாசாவின் கெப்ளர் செயலிழப்பு.!

அது வருகிற ஏப்ரல் மாதம், அமெரிக்காவில் விழுந்து நொறுங்குமென கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலைப்பாட்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானதும், மிக விரைவில் செயலிழக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்.!

கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்.!

நமது விண்மீன் மண்டலத்தில் 2,000 க்கும் அதிகமான வெளிப்புறக் கிரகங்களை கண்டுபிடித்துள்ள கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் ஆனது எதிர்பார்த்ததை விட, விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட நோக்கத்தை விட அதிக அளவிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

நாசாவின் கூற்றுப்படி.!

நாசாவின் கூற்றுப்படி.!

ஒரு அறிவியல் வரமாக கருதப்படும், மிக துணிச்சலான மற்றும் சிறிய விண்வெளி தொலைநோக்கியான கெப்ளர் அதன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆம் நாசாவின் கூற்றுப்படி, அடுத்த சில மாதங்களில் கெப்ளரின் எரிபொருள் தீரவுள்ளது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
பூமியோடு மோதல் நிகழ்த்தாது, ஏன்.?

பூமியோடு மோதல் நிகழ்த்தாது, ஏன்.?

சமாதானப்படுத்தக்கூடிய விடயம் என்னவெனில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக (10 ஆண்டுகள்) விண்வெளியில் உள்ள இதர கிரகங்களை கண்டுபிடிக்க உதவிய கெப்ளர் ஆனது, சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனை போல பூமியோடு மோதல் நிகழ்த்தாது. ஏனெனில் அது பூமியில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல்களுக்கு அப்பால் சுழன்று கொண்டிருக்கின்றது.

எதிர்காலத்தில் பல சாத்தியமான தோல்வி.!

எதிர்காலத்தில் பல சாத்தியமான தோல்வி.!

கெப்ளர் மிஷனிற்காக செய்யப்பட்ட செலவு மற்றும் மதிப்பிடப்பட்ட தூரதத்தை விட இது மிகவும் அதிகமாகும். ஆக இந்த பணியிழப்பென்பது மதிப்புக்குரிய ஒன்றேயாகும். ஒருவேளை கெப்ளர் இன்னும் அதிக எரிபொருளைக் கொண்டு முன்னோக்கி சென்றுகொண்டே இருந்திருந்தால், எதிர்காலத்தில் பல சாத்தியமான தோல்விகளை சந்திக்க நேரிடும்.

வேற்றுகிரகங்கள் சார்ந்த தேடல்கள் முடங்குமா.?

வேற்றுகிரகங்கள் சார்ந்த தேடல்கள் முடங்குமா.?

போதுமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள கெப்ளரின் செயல் இழப்பிற்கு பின்னர், வேற்றுகிரகங்கள் சார்ந்த தேடல்கள் முடங்குமா என்ற கேள்விக்கு - "இல்லை" என்கிற பதிலை நாசா அளித்துள்ளது. அடுத்த மாத வாக்கில் டிரான்சிங் எக்ஸோபிளான்ட் சர்வே சாட்டிலைட் (TESS - Transiting Exoplanet Survey Satellite) ஆனது விண்வெளிக்கு செலுத்தப்படவுள்ளது.

கெப்ளர் முடிக்கும் புள்ளியில் இருந்து மீண்டும்.!

கெப்ளர் முடிக்கும் புள்ளியில் இருந்து மீண்டும்.!

இந்த செயற்கைகோள், கெப்ளர் ஸ்பேஸ் டெலெஸ்சிகோப் அதன் ஆய்வை எங்கு முடிக்கிறதோ அந்த புள்ளியில் இருந்து ஆய்வு செய்ய தொடங்கும். அதாவது விண்மீன்களைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்வதற்காக வானில் பிரகாசமான நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யும்.

ஆழமான மற்றும் மேம்பட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.!

ஆழமான மற்றும் மேம்பட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.!

தவிர வரவிருக்கும் ஆண்டுகளில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது (James Webb Space Telescope) அதன் மேம்பட்ட இமேஜிங் கருவிகளை கொண்டு முன்னர் இருந்ததை விடவும் ஆழமான மற்றும் மேம்பட்ட தகவல்களை சேகரிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற விண்வெளி செய்திகள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் அறிவியல் தமிழ் பிரிவுடன்இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Kepler Spacecraft Will Run Out of Fuel In the Coming Months. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X