(பிளாக் ஹோல்) கருத்துளையை புகைப்படம் எடுத்து சாதனை படைத்த இளம்பெண்.!

ஆனால் முதல் முறையாக சில தினங்களுக்கு முன் விஞ்ஞானிகள் குழு அதை படம் பிடித்து முதல் முறையாக வெளியிட்டனர். இது விண்வெளியிலும் ஒரு மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த படத்தை எடுக்க பின்னணியில் ஒ

|

பிளாக் ஹோல் எனப்படும் கருத்துளையை விண்வெளியில் மர்மாக வே இருந்து வந்தது. இது கணிணியின் நாம் வரைபடத்தின் மூலம் நாம் கண்டு வந்தோம்.

(பிளாக் ஹோல்) கருத்துளையை புகைப்படம் எடுத்து சாதனை படைத்த இளம்பெண்.!

ஆனால் முதல் முறையாக சில தினங்களுக்கு முன் விஞ்ஞானிகள் குழு அதை படம் பிடித்து முதல் முறையாக வெளியிட்டனர். இது விண்வெளியிலும் ஒரு மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்த படத்தை எடுக்க பின்னணியில் ஒரு இளம் பெண் இருந்துள்ளார். மேலும்,இன்று உலக இந்த பெண்ணை உயர்வாக பார்த்து வருகின்றது. முழுவிபரம் கீழே.

கருத்துளையின் ரகசியம்:

கருத்துளையின் ரகசியம்:

மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியை கருப்பு நட்சத்திரம் என்றும், கருந்துளை என்றும் விஞ்ஞானிகள் அழைத்து வந்தனர்.
தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியை கூட வெளியேறவிடாமல் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல்களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும், அதை படம் பிடிக்க முடியவில்லை. வெறும் கணினி வரைபடமாக மட்டுமே காண முடிந்தது.

எம்.87 கருத்துளை:

எம்.87 கருத்துளை:

பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மேசியர் என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ள கருந்துளையைத்தான் விஞ்ஞானிகள் படம்பிடித்து உள்ளனர். எம்87 என பெயரிடப்பட்டு உள்ள இந்த கருந்துளை சூரியனை விட 6500 கோடி மடங்கு எடை உடையது ஆகும்.

சாதனை படைத்த விஞ்ஞானிகள்:

சாதனை படைத்த விஞ்ஞானிகள்:

ஒளி வெள்ள பின்புலத்தில் கருப்பு கோள வடிவமாக காணப்படும் இந்த கருந்துளையின் புகைப்படத்தை நேற்று முன்தினம் வெளியிட்ட விஞ்ஞானிகள், பார்க்க முடியாது என நினைத்த ஒன்றை பார்த்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகளும், ‘இது ஒரு அசாதாரண சாதனை' என பாராட்டி இருக்கின்றனர்.

ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப்:

ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப்:

ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, ஹவாய், அரிசோனா போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ரேடியோ தொலைநோக்கிகளின் உதவியால் இந்த கருந்துளை தற்போது படம்பிடிக்கப்பட்டு உள்ளது. ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் எனப்படும் இந்த சர்வதேச தொலைநோக்கி திட்டம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

 புகைப்படம் எடுத்த இளம் பெண்:

புகைப்படம் எடுத்த இளம் பெண்:

29 வயதான கேட்டி பௌமேன் என்ற இளம்பெண் கருத்துளையின் முதலாவது புகைப்படத்தை எடுக்க அல்கோரிதத்தை உருவாக்க உதவியுள்ளார். இதன் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்துள்ளது.

இளம்பெண் தலைமை:

இளம்பெண் தலைமை:

இந்த கருத்துளையின் புகைப்படம் எடுக்கும் கணிணி செயலியை உருவாக்க கேட்டி பௌமேன் தலைமையில் தான் இத்தனை ஆய்வு பணிகளும் நடந்துள்ளது என்பது குறிபிடதக்கது.

 500 மில்லியன் டிரில்லியன் தொலைவு:

500 மில்லியன் டிரில்லியன் தொலைவு:

கருத்துளை பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் தொலைவில் தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டுகின்ற வியக்கதக்க இந்த புகைப்படம் புதன் கிழமை வெளியிடப்பட்டது.

பட்டதாரி மாணவி:

பட்டதாரி மாணவி:

பௌமேன் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் பட்டதாரி மாணவராக இருந்த போது, அல்கோரிதத்தை உருவாக்க துவங்கினார். முன்பு இந்த முயற்சியை அடைய முடியாது என்று நம்பினேன் ஆனால் இன்று நிறைவேறியுள்ளது.

 இந்தியா பாராட்டு:

இந்தியா பாராட்டு:

இது குறித்து மும்பை டாடா ஆய்வு நிறுவன இணை பேராசிரியர் சுதிப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘கருந்துளை பற்றிய முதல் நேரடி ஆதாரம் இது. இது ஒரு மைல்கல் சாதனை. இதன்மூலம் கருந்துளை இருப்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று விட்டன. கருந்துளை இருப்பதற்கான 99 சதவீத ஆதாரங்கள் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறி இருக்கிறது' என்று தெரிவித்தார்.

பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் இதற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
katie bouman the scientist behind the first ever black hole image is now an internet star : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X