நுண்ணுணர்வு கொண்ட ரோபோட்டிக் கைகளை அறிமுகப்படுத்திய ஜெப் பீசோஸ்!
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியான் ஜெப் பீசோஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் இறுதியாக ரோபாட்டிக் பயன்பாடுகளில் ஒரு பிடிமானத்தை பெற்று வருகின்றன என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

சுறுசுறுப்பான ரோபோடிக் ஜோடி கைகளை இயக்கி காண்பித்தார்
மெசின் லேர்னிங், ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி துறையின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்த ஜெப் பீசோஸ் ஸ்பான்சர் செய்து லாஸ் வேகாஸ்ஸில் நடைபெற்ற ரீ:மார்ஸ் மாநாட்டில் இடம்பெற்ற செயல்விளக்க நிகழ்வில், சுறுசுறுப்பான ரோபோடிக் ஜோடி கைகளை இயக்கி காண்பித்தார் அமேசான் சி.ஈ.ஓ ஜெப் பீசோஸ்.
ரோபோடிக் கைகளின் மூலம் செய்ய முடிந்தது
ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பீசோஸ் ஒரு ஜோடி ரோபோடிக் கைகளை உயர் தொழில்நுட்ப கையுறைகள் பயன்படுத்தி கையாளுவதை காணலாம். அவரது இயக்கங்களை திரும்பசெய்வதன் மூலம், பீசோஸ் சிறந்த மோட்டார் திறன்கள் பயன்படுத்தி அதிநவீன செயல்பாடுகளை ரோபோடிக் கைகளின் மூலம் செய்ய முடிந்தது.

சரியாக வீசி காண்பித்தார்
ஒரு செயல்விளக்கத்தில், பீசோஸ் முன்னும் பின்னும் பந்தை கைகளுக்கு இடையில் மாற்றிக்காண்பித்தார் மற்றும் மற்றொரு செயல் விளக்கத்தில் ரோபோடிக் கைகளை கொண்டு பிளாஸ்டிக் ரிங்குகளை வளையத்தில் சரியாக வீசி காண்பித்தார்.

ஹாப்ட்எக்ஸ் மற்றும் ஷேடோ ரோபோட்
சியாட்டல்-ஐ சேர்ந்த ஹாப்ட்எக்ஸ் மற்றும் ஷேடோ ரோபோட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த கருவியானது அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹிப்டிக் பீட்பேக் எனும் தொழில்நுட்பங்களை கொண்டு இயங்குகிறது.

உடல் ரீதியான தாக்கத்தை வழங்கும்
இந்த இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் கையுறையை அணிந்துள்ளவர்கள், பொருட்களை நகர்த்துவது மட்டுமில்லாமல், அவர்கள் கைகளில் இருப்பவற்றை உணரவும் முடியும் என்பதால், அவர்களால் சூழலை எளிதில் கையாள முடியும்.
ஹாப்ட்எக்ஸ் தங்களது தொழில்நுட்பத்தை மெய்நிகர் துறையை நோக்கி வழங்கி, அதன் சிஸ்டம்களை பயன்படுத்தி மருத்துவம், விண்வெளி மற்றும் பிற துறைகளில் மெய்நிகர் பயிற்சி மென்பொருளை கொண்டு வரவுள்ளனர்.
ஆனால் அந்நிறுவனம் கூடுதலாக தொழில்நுட்பத்தின் மூலம் உடல் ரீதியான தாக்கத்தை வழங்கும், பீசோஸ் மூலம் செயல்விளக்கம் வழங்கப்பட்ட சாதனம் போன்ற பல்வேறு வழிகளையும் கண்டுபிடித்துள்ளது.

பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
உலகெங்கிலும் உள்ள கிடங்குகளில் தானியக்கத்தை உருவாக்கும் ஒரு மேம்பாட்டை உருவாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்களை போல திறமைகளுடன் பணியாற்றும் வணிக ரோபோக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்நிகழ்வில் கூடியிருந்த மக்களிடம் பீசோஸ் தெரிவித்தார்.
வீட்டிலுள்ள முதியோர்களை கவனிக்கவும், நிறுவனத்தின் பூர்த்தி மையங்களில் உள்ள பொருட்களை எடுப்பது, சேமிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எவ்வாறு தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றனர் என்பதை குறிப்பிட்டு பேசினார் ஜெப்.

அமேசான் நிறுவனம்
"'இன்னும் 10 ஆண்டுகளில் இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்,' என்று பீஸோஸ் கூறினார்.பாஸ்டன்-பகுதியில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான சாப்ட் ரோபாட்டிக்ஸ்-ல் பரிசோதிக்கப்பட்ட அமேசான் நிறுவனத்தின் நிறுவப்படும் தொழில்நுட்பத்தைப் பற்றி பீசோஸ் எதுவும் விவாதிக்கவில்லை.
அமேசான் நிறுவனம் அதன் கிடங்கில் பல்வேறு பணிகளுக்கான ரோபோக்களை உருவாக்கி அதை செயல்படுத்தி வருகிறது. அதன் கிடங்குகளை முழுவதுமாக ஆட்டோமேசன் செய்யும் வகையில் அந்நிறுவனத்தின் ஒரு கிடங்கில் மட்டும் வரலாறு காணாத வகையில் 800 ரோபோக்களை பயன்படுத்துகிறது. இன்னும் 10 வருடங்களில் அமேசான் நிறுவனம் அதன் முழுவதும் தனித்து இயங்கும் பூர்த்திசெய்யும் மையத்தை (fully autonomous fulfillment center) கொண்டிருக்கும் என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








