மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்

|

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் செயற்கையாக நட்சத்திரங்களைப் உருவாக்கி இரவு வானத்தை ஒளிரச் செய்யும் இலக்கைக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அண்டத்தின் வெகு அருகே அனைவரையும் அழைத்து செல்லும் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் நவம்பர் 25 ஆம் தேதி ALE-2 என்ற சிறியவகை செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது.

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ்

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ்

இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனம் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டில் முதல் செயற்கை விண்கல் பொழிவு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதாவது அனைத்தும் இந்நிறுவனத்தின் திட்டத்தின் படி நடந்தால், இரவு வானம் விண்வெளி நட்சத்திரங்களால் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெதுவாக நகரும் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும்

மெதுவாக நகரும் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும்

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒரு சென்டிமீட்டரில் துகள்களின் அளவை அளக்க தொடங்கும். இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது எரியும். தரையில் இருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, இது மெதுவாக நகரும் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும். இந்த துகள்கள் முழுமையாக எரிவதற்கு மூன்று முதல் பத்து வினாடிகள் வரை எடுத்து கொள்ளும்.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

 2020 வரை பொறுத்திருங்கள்

2020 வரை பொறுத்திருங்கள்

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீனா ஒகாஜிமா என்பவர் இதுகுறித்து கூறியபோது, இந்த முயற்சி வெற்றி பெற்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் நட்சத்திர கூட்டங்களை பார்க்க முடியும். உலகின் முதல் செயற்கை நட்சத்திர கூட்டங்களை பார்க்க 2020 வரை பொறுத்திருங்கள்' என்று கூறியுள்ளார்

 எல்.எல்.சி அசோசியேட்ஸ்

எல்.எல்.சி அசோசியேட்ஸ்

இவ்வகையான அற்புதமான பொறியியல் அம்சங்களின் திட்டத்தில் அமேசான் சர்வீசஸ் எல்.எல்.சி அசோசியேட்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த புதிய முயற்சி மூலம் அமேசான் நிறுவனத்திற்கும், அந்நிறுவனத்தின் இணையதளத்திற்கும் ஒரு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Japanse Startup Is All Set To Provide A Fake Meteor Shower From Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X