ரயூகு கோளில் வெடிவைக்கும் ஜப்பானின் ஹயாபூசா2 விண்கலம்!
வெடிகுண்டை வீசி வெடிக்கச்செய்வதன் மூலம் உருவாகும் பள்ளத்தின் உதவியுடன், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் பாறை மாதிரிகளை சேகரிக்கலாம் என ஐப்பான் விண்வெளி மையம் நம்புகிறது.
ஜப்பான் விண்வெளி மையம் (JAXA) அதன் ஹயாபூசு 2 விண்கலத்தை தொலைதூர உடுக்கோளான ரயூகுவில் பேஸ்பால் அளவுள்ள குண்டை வீசுவதற்காக பயன்படுத்தியுள்ளது.

வெடிகுண்டை வீசி வெடிக்கச்செய்வதன் மூலம் உருவாகும் பள்ளத்தின் உதவியுடன், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் பாறை மாதிரிகளை சேகரிக்கலாம் என ஐப்பான் விண்வெளி மையம் நம்புகிறது. சூரிய மண்டலத்தின் தோற்றத்தை விளக்குவதற்கு உதவுவதற்காக இந்த உடுகோளின் மாதிரிகளை ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹயாபுசா 2 விண்கலம்
ஹயாபுசா 2 விண்கலம் வெடிப்பொருட்களை சரியான இடத்தில் இடத்தில் வீசிய பின்னர், குண்டுவெடிப்பிற்கு பின்னர் தரையிலிருந்து கிளம்பும் குப்பைகளை தவிர்ப்பதற்காக விரைவான பயணத்தை மேற்கொண்டது.

தரவுகள் உறுதிப்படுத்துகின்றன
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA கூறுகையில், ஹயாபூசா 2 விண்கலம் வெள்ளிக்கிழமை காலை இந்த உடுக்கோள் மீது தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு 'சிறு கேரி ஆன் இம்பேக்டர்'-ஐ செலுத்தியது மற்றும் அந்த விண்கலம் பாதுகாப்பாக வெளியேறி அதே நிலையில் நிலையில் இருந்ததாக தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஐப்பான் விண்வெளி நிறுவனம்
ஐப்பான் விண்வெளி நிறுவனம் அந்த தரவுகளை வைத்து இந்த இம்ப்பேக்டர் பள்ளத்தை உருவாக்தியதா அல்லது எப்படி உருவாக்கியது என ஆராய்ந்து வருகிறது. பேஸ்பால் அளவுள்ள இந்த காப்பர் வெடிபொருள் 4.4 பவுண்டுகள் (2kg) எடையுள்ளது. இது ஒரு கூம்பு வடிவ உபகரணத்திலிருந்து வெளியே வருமாறு வடிவமைக்கப்பட்டது. அதன் கீழே இருந்த செப்பு தட்டு, காப்பர் பந்தை ஒரு நொடிக்கு 1.2 மைல் (2 கிமீ) வேகத்தில் உடுகோளின் மீது வீசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தூசு மற்றும் குப்பைகள்
சூரியன் அல்லது விண்வெளிக் கதிர்களால் பாதிக்கப்படாத வகையில் நிலத்தடியில் உள்ள மாதிரிகளை சேகரிக்கவும், மேற்கூறிய வெடிப்பின் போது ஏற்பட்ட விளைவின் விபரங்களை சேகரிக்கவும், தூசு மற்றும் குப்பைகள் அடங்கிய பின்னர், மீண்டும் அந்ததளத்திற்கு ஹயாபுசா 2 விண்கலத்தை அனுப்ப ஜப்பான் விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது.

வால்மீன் 'டீப் இம்பேக்ட்'
தற்போது சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள், அந்த உடுகோள் மற்றும் நம் கிரகத்தின் வரலாற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், ஒரு விண்கலம் இத்தகைய பொருட்களை சேகரிப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற வால்மீன் 'டீப் இம்பேக்ட்' மிஷனின் போது, நாசா மேற்பரப்பு வெடிப்பிற்கு சிதறல்களை ஆராய்ந்து. ஆனால் அப்போது அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications