Home
Scitech

முன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்!ஜப்பான் சாதனை- வீடியோ.!

இது ஏதோ ஒரு படத்தை பார்த்தது போல இருக்கிறது என்றால், அது நிச்சயமாக உண்மையே தான்.

ஜப்பானிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான வாக்(Vaak), 'வாக்ஐ'(VaakEye) என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளான உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்த மென்பொருள் கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நடத்தைகளை கண்டறிந்து, உண்மையில் திருட்டு நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கக்கூடியது.

முன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்! ஜப்பான் சாதனை.

இது ஏதோ ஒரு படத்தை பார்த்தது போல இருக்கிறது என்றால், அது நிச்சயமாக உண்மையே தான். மைனாரிடி ரிப்போர்ட் என்ற பிரபல படமான இது டாம் குரூஸ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் குற்றம் புரிபவர் ஏதேனும் ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அவர் தொலைதூர குற்றவாளியாக இருந்தாலும், அந்த எதிர்கால குற்றத்தை தடுக்கும் யோசனையை இந்த படம் ஆராய்ந்தது. இப்படம் வெளியிடப்பட்டபோது ​​வியக்கத்தக்க அறிவியல் புனைகதை என்ற கருத்தை மட்டுமே கொண்டிருந்தது.

முந்தைய வெர்சன்

முந்தைய வெர்சன்

எனினும் தொழில்நுட்பம் ஆச்சர்யமளிக்கும் வேகத்தில் முன்னேறியதற்கு நாம் நன்றி கூறுவது அவசியம். அப்படத்தில் காண்பித்த தொழில்நுட்பத்தின் முந்தைய வெர்சன் நம்மிடம் ஏற்கனவே உள்ளது.

 முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும்

முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும்

வாக்ஐ உண்மையில் முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும் திறன் கொண்டது. இது கடைக்காரர்கள் கண்டறிய முடியாத வகையில் இருக்கும் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமராக்களின் காணொளியை ஆராய்வதன் மூலம் கண்டறிகிறது. இந்த அல்காரிதம் ஒரு நபர் பின்னர் கடையில் திருடுவதற்கான போதுமான வாய்ப்பு இருக்கிறதா என்பதை கணித்து ஸ்மார்ட்போன் செயலின் மூலம் எச்சரிக்கையை வழங்குகிறது. இதன் மூலம் அந்த குற்றம் நடைபெறுவது தடுக்கப்படலாம்.

வாக்ஐ

வாக்ஐ

யோகோகாமாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் முன்னதாக கண்டுபிடிக்கப்படாத திருட்டு சம்பவத்தை சரியாக கண்டறிந்தபோது டிசம்பர் 2018ல் செய்திகளில் வலம்வந்தது வாக்ஐ. சந்தேகத்திற்கிடமான அந்த 80 வயதான மனிதர் தொப்பியை திருடி சிலநாட்களுக்கு பின்னர் பிடிபட்டார். இப்போது டோக்கியோ பகுதியில் அமைந்திருக்கும் சில கடைகளில் வாக்ஐ மென்பொருளை பரிசோதனை செய்துவருகிறது வாக். இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் முழுவதும் உள்ள சுமார் 100,000 கடைகளில் வாக்ஐ மென்பொருளை நிறுவ திட்டமிட்டு வருகிறது.

ரயோ டனாகா

ரயோ டனாகா

வாக் நிறுவன நிறுவனர் ரயோ டனாகா முதல் முறையாக வாக்ஐ மென்பொருள் சரியான திருடர்களை கண்டறிந்த சம்பவத்தை பின்வருமாறு நினைவு கூர்ந்தார், 'செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றங்களை தடுக்க வகையில் சமுதாயத்திற்கு நெருக்கமான ஒரு முக்கிய நடவடிக்கையை நாம் கடைசியில் எடுத்துவிட்டோம் என நினைத்தேன்' என்றார்.மிகவும் சிக்கலான அல்காரிதம்-ஐ அடிப்படையாக கொண்ட வாக்ஐ, ஒரு ஆழமான கற்றலை கையாள்வதற்காக 100,000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. மனிதர்களின் முகம், உடைகள், இயக்கம், ஒட்டுமொத்த நடத்தை ஆகிய காரணிகளுடன், காலநிலை, கடை அமைந்துள்ள பகுதி ஆகியவையும் இதில் அடங்கும்.

அற்புதமான செயற்கை நுண்ணறிவு

30 வயதான டனாகா, வாக்ஐ-ன் செயல்பாடுகளை மேம்படுத்த திட்டங்களை வைத்துள்ளார். அவர் கூறுகையில் 'நாங்கள் இன்னும் இதற்கான சந்தை திறனை கண்டுபிடித்துக்கொண்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து நிறுவனத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம்' என்கிறார்.இந்த அற்புதமான செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே கமெண்ட்கள் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Best Mobiles in India

English summary
Japanese Startup Designs AI That Can Detect Theft Before It Takes Place: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X