விண்வெளிக்கு லிஃப்ட்; ஜப்பானை பார்த்து வாய் பிளக்கும் நாசா!

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து.

|

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது.

விண்வெளிக்கு லிஃப்ட்; ஜப்பானை பார்த்து வாய் பிளக்கும் நாசா!

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

விண்வெளி எலிவேட்டர்

விண்வெளி எலிவேட்டர்

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எலிவேட்டர் டெஸ்ட்

எலிவேட்டர் டெஸ்ட்

பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு பேட்டியில், "விண்வெளியில் நடத்தப்படும் இந்த எலிவேட்டர் டெஸ்ட் ஆண்டு உலகின் முதன்மையான பரிசோதனையாகும்" என்றார். கடந்த 1895 ஆம் ஆண்டில், ரஷ்ய அறிவியலாளர் ஆன கோன்ஸ்டாண்டின் சியோல்கோவஸ்கி எண்ணத்தில் உதித்த இந்த ஸ்பேஸ் லிஃப்ட் ஆனது சாத்தியப்படாமல் போக பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

ஸ்பேஸ் லிப்டின் முக்கிய யோசனையே, அது செல்ல வேண்டிய இடத்தை சென்று அடையும் வரை, பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள் ஆனது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலுவையில் இருக்கும் என்பது தான். மற்றொரு முக்கியமான விடயமாக, இந்த கேபிளுக்கு தேவையான பொருள்கள் வேறு எந்தப் பொருளையும் விட இலகுவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விண்வெளியில் கிடைக்கும் அழுத்தத்தை அதனால் தாக்கு பிடிக்க முடியும்.

ஒபாயாஷி

ஒபாயாஷி

ஷிசோக்கா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்த ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனமான ஒபாயாஷி, 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி எலிவேட்டரை கட்டும் இலக்கைக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியபோது, ​​"தற்போதைய தொழில்நுட்பங்களில் இந்த கருத்தை செயல்படுத்தும் அளவிற்கான போதுமானதாக திறன்கள் இல்லை, இருந்தாலும் எங்களின் திட்டம் யதார்த்தமானது என்று கூறப்பட்டு இருந்தது.

 96000 கிலோ மீட்டர்

96000 கிலோ மீட்டர்

இந்த திட்டத்திற்கு சுமார் 96000 கிலோ மீட்டர் அளவிலான கார்பன் நானோகுழாய் கேபிள்கள், பூமி மீது 400 மீட்டர் விட்டம் கொண்ட 'எர்த் போர்ட்' (அது 12500 டன் எதிர் எடையை தாங்கும் அளவு பலமானதாக இருக்க வேண்டும்) ஆகியவைகள் தேவைப்படுகிறது. கார்பன் நானோகுழாய்கள் எஃகை விட அதிக இழுவிசை வலிமை கொண்டதாக அறியப்படுகின்றன, அதனால் தான் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்திற்கு அவைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

 விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

மிகவும் சாத்தியமற்றகாக கருதப்படும் இந்த விண்வெளி உயர்த்தி (எலிவேட்டர்) ஆனது கட்டமைக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி சுமைகளை குறைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது ஒரு விண்வெளி ஏவுதலுக்கு ஒரு பவுண்டு எடைக்கு சுமார் 40,000 முதல் 50,000 டாலர்கள் வரை செலவு ஆகிறது. ஆனால் இந்த விண்வெளி எலிவேட்டர் சாத்தியம் ஆன (அனுமானங்களின் அடிப்படையிலான ஆரம்ப ஆய்வுகளின் கீழ்) பிறகு பவுண்டுக்கு 100 டாலர்கள் என்கிற நிலை உருவாகலாம். ஆகமொத்தம் எதிர்காலத்தில் நிகழப்போகும் விண்வெளி பயணம் ஆனது நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருக்கும்.

அரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா.? யார் சொன்னது.? ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.!

அரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா.? யார் சொன்னது.? ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.!

"உங்க புள்ளய கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தா என்ன.?" என்று சொல்ல கேட்டாலே, ஒரு ஏளன பார்வையும், கோபமும் மேலோங்கும். ஏனெனில் கவர்ன்மென்ட் ஸ்கூல்களில் படிக்கும் மாணவர்கள் சதா சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், ஸ்கூலை கட் அடித்து விட்டு வெளியே சுத்துவார்கள், இப்படி பல வகையான பிரமைகள் நம் மத்தியில் உள்ளது. அப்போ ப்ரைவேட் ஸ்கூல்ல படித்த நாமெல்லாம், வாழ்நாளில் கெட்ட வார்த்தைகளே பேசியது இல்லையா.? ப்ரீட்சையில் பெயில் ஆனதே இல்லையா.? ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமா, பீச் போனது இல்லையா.?

வாய் வார்த்தையாக சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள்.!

வாய் வார்த்தையாக சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள்.!

ஒரு மாணவனின் வாழ்க்கை தரமானது, அவன்/ அவள் படிக்கும் ப்ரைவேட் அல்லது கவர்ன்மென்ட் ஸ்கூலில் இல்லை அவரவர் கைகளில் தான் உள்ளது. இதை எல்லாம் வெறும் வாய் வார்த்தையாக சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள் என்பது, கரூரை சேர்ந்த அரசாங்க பள்ளி மாணவரான ஹரிஹரனுக்கு நன்றாக புரிந்து விட்டது போலும். அதனால் அவன் சாதித்து காட்டி விட்டான்; அப்படி என்ன சாதித்தான்.?

ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.!

ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.!

16 வது நிரம்பிய "கவன்மெண்ட் ஸ்கூல்" மாணவரான எம்.ஹரிஹரன், அவரின் அறிவியல் மற்றும் விஞ்ஞான அறிவு மற்றும் பேரார்வத்தின் விளைவாக ஜப்பானில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை சந்திக்க உள்ளார். ஒட்டுமொத்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாணவர்களில் ஹரிஹரனும் ஒருவர் ஆவார். இவர்கள் அனைவரும் ஜப்பானில் நடக்கவுள்ள ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஜப்பானிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.!

ஜப்பானிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.!

ஜப்பானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளில் ஆசிய இளைஞர்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கான ஒரு திட்டம் தான் இந்த - ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் ப்ரோகிராம். வருகிற மே 12 தொடங்கி மே 19 வரை நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் தான், கரூரில் உள்ள வெள்ளியணை அரசாங்க பள்ளி மாணவரான ஹரிஹரன் கலந்துகொள்ள உள்ளார். நிகழ்த்தியின் ஒரு பகுதியாக ஹரிஹரன் உட்பட மொத்தம் ஆறு மாணவர்கள், ஜப்பானிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்ககளுக்கு அழைத்து செல்லப்படுவர்

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இதெல்லாம் தொடங்கிவிட்டது.!

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இதெல்லாம் தொடங்கிவிட்டது.!

ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஹரிஹரன், பிளஸ் 2 பரீட்சையை எழுதிவிட்டு, முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ஆராய்ச்சியாளராக உருவாக விரும்பும் ஹரிஹரன், டாக்டர் ஆக வேண்டும் என்கிற கனவுகளையும் வளர்க்கிறார், மேலும் நீட் பரீட்சைக்கும் தயார் செய்கிறார். ஆனால், இதெல்லாம் சமீபத்தில் கிளம்பிய ஆர்வங்கள் இல்லை, ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இதெல்லாம் தொடங்கிவிட்டது என்கிறார் ஹரிஹரன்.

முதலில் மறுக்கப்பட்டது.!

முதலில் மறுக்கப்பட்டது.!

"எனக்கு ஒரு 11 வயது இருக்கும் போது, அந்த காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருள் மற்றும் அதன் மறுசுழற்சிக்கான சரியான தீர்வை உண்டாக்க விரும்பினேன். இருப்பினும், எனது தீர்வானது, அது நடைமுறைக்கு அப்பாற்பட்டது என்று மறுக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழல் சீரழிவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான சாத்தியமான தீர்வுகளை வழங்கினேன். அதாவது தோல் பதனிடும் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் க்ரோமியம் கழிவுகளை எப்படி கையாளுவது என்பது சார்ந்த சரியான திட்டமொன்றை வகுத்தேன்" என்று ஆர்வம் ததும்ப கூறும் ஹரிஹரனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரங்கள் பல.!

யூனியன் கவர்ன்மென்டின் இளம் விஞ்ஞானி விருது.!

யூனியன் கவர்ன்மென்டின் இளம் விஞ்ஞானி விருது.!

இதுவரையிலாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் "இன்ஸ்பையர்" விருதை, (Innovation in Science Pursuit for Inspired Research) மொத்தம் இரண்டு முறை ஹரிஹரன் பெற்றுள்ளார். மேலும் ஹரிஹரனின், எகோலாஜிக்கல் சானிடேஷன் கம்போஸ்ட் டாய்லெட் (ecological sanitation compost toilet) திட்டத்திற்கு, யூனியன் கவர்ன்மென்டின் "இளம் விஞ்ஞானி விருது" கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சேர்ந்து தான், ஹரிஹரனை ஜப்பான் கொண்டு செல்கிறது. இந்த இடத்தில் ஹரிஹரனுக்கு பக்கபலமாக, ஒரு வழிகாட்டியாக திகழும் ஆசிரியர் பி.தனபால் அவர்களையும் நாம் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.!

Best Mobiles in India

English summary
Japanese Researchers Will Soon Carry Out First Test Of Space Elevators: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X