Just In
- 3 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 4 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 4 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 5 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
ஹைதராபாத்தில் பரவும் ‛க்யூ’ காய்ச்சல்.. கறிக்கடைக்கு போறீங்களா உஷார் மக்களே!என்ன செய்யும்? விபரம்
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அடேங்கப்பா வியாழன் கோள் இவ்வளவு அழகா? பிரம்மிப்பை ஏற்படுத்திய James Webb தொலைநோக்கி.!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பும் படங்கள் தொடர்ந்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வியாழன் கோளை படம்பிடித்து அனுப்பி உள்ளது இந்த அட்டகாசமான தொலைநோக்கி.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
அதாவது கடந்த ஜூன் மாதம் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி SMACS 0723 விண்மீன் திரள், தெற்கு வளைய நெபுலா, ஸ்டிபன்ஸ் குவின்டெட்,
கரினா நெபுலா ஆகியவற்றை தெளிவாக படம் எடுத்து அனுப்பியது.
இந்நிலையில், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை கடந்த ஜூலையில் படம் பிடித்திருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

நாசா நிறுவனம்
அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி நாசா நிறுவனம் கயானாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் அதிநவீன ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.

100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது
குறிப்பாக 1990-ல் நாசா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

எவ்வளவு பட்ஜெட் தெரியுமா?
இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்க அதிகம் செலவு செய்துள்ளது நாசா நிறுவனம். அதாவது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உழைத்து சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

எதற்காக இது உருவாக்கப்பட்டது?
பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்துதான் பிரபஞ்சம் உருவானதாக ஆராய்சியாளர்களால் நம்பப்படுகிறது. ஆனாலும் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பல கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இந்த பல வருட மர்மத்தை வெளிக்கொண்டுவரவே இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியது நாசா.
|
வியாழன் கோள்
குறிப்பாக 6.2 டன் கொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இயங்கக்கூடியது. இந்நிலையில் சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனை கடந்த கடந்த ஜூலையில் படம் பிடித்திருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
அதாவது அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் வண்ணங்களை இட்டு பல பகுதிகளை வேறுபடுத்தி காட்டியுள்ளனர்ஆய்வாளர்கள். அதிலும் இந்த வியாழனின் வட மற்றும் தென் துருவத்தில் ஏற்படும் ஒளிகள், வியாழனின் துணைக்கோள் ஆகியவை பிரகாசமாகதெரிகின்றன என்றுதான் கூறவேண்டும்.

இம்கே டி பேட்டர்
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் இம்கே டி பேட்டர் இது குறித்து கூறுகையில், வியாழனை இப்படி நாம் பார்த்ததில்லை. வியாழன் பற்றிய விவரங்கள் அதன் வளையங்கள் போன்ற அனைத்தையும் நாம் தெளிவாக இந்த படத்தில் காணலாம் என்று கூறினார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470