விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA), அதன் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (James Webb Space Telescope) வழியாக, விண்வெளியில் திட்டுத்திட்டான மேகங்கள் தெரிவதை பார்த்துள்ளது.

அதை கூர்ந்து ஆராய்ந்த பிறகே தெரிய வந்தது - இதற்கு முன்னால் இப்படி ஒரு விஷயத்தை யாருமே பார்த்தது இல்லை என்று!

அதென்ன விஷயம்? விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்களுக்கு பின்னால் என்ன இருந்தது? இந்த கண்டுபிடிப்பு ஏன் மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

 700 ஒளி ஆண்டுகள் தொலைவில்!

700 ஒளி ஆண்டுகள் தொலைவில்!

உங்களில் பலருக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பற்றிய பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது.

அறியாதோர்களுக்கு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (Canadian Space Agency) ஆகியவைகளால் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும்!

சமீபத்தில் இது சூரியனில் இருந்து சுமார் 700 ஒளி ஆண்டுகள் (700 light-years) தொலைவில் திட்டுத்திட்டான மேகங்களை "பார்த்துள்ளது".

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

அதற்கு பின்னால் என்ன இருந்தது?

அதற்கு பின்னால் என்ன இருந்தது?

விண்வெளியில், திட்டுத்திட்டாக தெரிந்த மேகங்களுக்கு பின்னால் 'ஏலியன் பிளானட்' (அதாவது வேற்று கிரகம்) ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!

அறியாதோர்களுக்கு நம் சூரிய குடும்பத்திற்கு (Solar Sytem) வெளியே உள்ள எந்தவொரு கிரகமுமே - ஏலியன் பிளானட் தான். விண்வெளி ஆராச்சியாளர்கள் மற்றும் வானியலாளர்கள் இதை எக்ஸோப்ளானெட் (Exoplanet) அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் (Extrasolar planet) என்றும் அழைக்கிறார்கள்!

இதற்கு முன்னால்.. இப்படி ஒன்றை பார்த்ததே இல்லை!

இதற்கு முன்னால்.. இப்படி ஒன்றை பார்த்ததே இல்லை!

நாசாவின் கூற்றுப்படி, வாஸ்ப்-39 பி ( WASP-39 b) என்று அழைக்கப்படும் இந்த 'ஏலியன் பிளான்ட்' ஆனது இதுவரை பார்த்திராத ஒரு வளிமண்டலத்தை வெளிப்படுத்துகிறது

அதாவது இந்த கிரகம் - அணுக்கள் (Atoms), மூலக்கூறுகள் (molecules) மற்றும் "செயலில்" உள்ள வேதியியல் (Active Chemistry) மற்றும் மேகங்களை (Clouds) கொண்டுள்ளது!

மேலும் நாசாவின் கூற்றுப்படி, இந்த ஏலியன் கிரகத்தை சுற்றியுள்ள மேகங்கள் ஆனது, ஒரு போர்வையை போர்த்தியது போல முழுமையாக இல்லாமல்.. திட்டுத்திட்டாக உள்ளது!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

சனி கிரகத்தை போல பெரியது.. புதனை விட

சனி கிரகத்தை போல பெரியது.. புதனை விட "இறுக்கமானது"!

இந்த விசித்திரமான எக்ஸோப்ளானெட் ஆனது விர்கோ விண்மீன் மண்டலத்தில் (Virgo Constellation) உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

இது வியாழனின் நிறையில் - மூன்றில் ஒரு பங்கு உள்ளது மற்றும் சனி கிரகத்தை போலவே மிகவும் பெரியதாக உள்ளது. ஆனால் புதன் கிரகத்தை விட சற்றே இறுக்கமான சுற்றுப்பாதையை கொண்டுள்ளது!

களமிறக்கி விடப்பட்டுள்ள 300 வானியலாளர்கள்!

களமிறக்கி விடப்பட்டுள்ள 300 வானியலாளர்கள்!

இந்த கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், இங்கே வேறு என்னென்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 300 க்கும் மேற்பட்ட வானியலாளர்களை கொண்ட குழு வாட்ஸப்-39 பி தொடர்பான ஆய்வில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு தவிர, தண்ணீர், கார்பன் மோனாக்சைடு, சோடியம், பொட்டாசியம் மற்றும் பல கண்டுபிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?

ஒளி ஆண்டு என்றால் என்ன.. 1 ஒளியாண்டு எத்தனை கிமீ?

ஒளி ஆண்டு என்றால் என்ன.. 1 ஒளியாண்டு எத்தனை கிமீ?

ஒளி ஆண்டு (Light-year) என்பது வானியல் தூரத்தை (Astronomical distances) வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் நீளம் தொடர்பான ஒரு அலகு (unit of length) ஆகும்.

1 ஒளியாண்டு என்றால் சுமார் 9.46 டிரில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 5.88 டிரில்லியன் மைல்களுக்கு சமம் ஆகும். நாம் இங்கே பார்த்த வாட்ஸப்-39 பி என்கிற ஏலியன் கிரகம் ஆனது சூரியனில் இருந்து 700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆக 700 x 9.46 டிரில்லியன் கிலோமீட்டர்கள் என்றால் எவ்வளவு என்று முடிந்தால் கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் - சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தையும் சேர்த்து கொள்ளுங்கள் - அது 147.7 மில்லியன் கிமீ ஆகும்!

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
James Webb Space Telescope Reveals mysteries Atmosphere Of An Exoplanet named WASP-39 b

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X