இஸ்ரோவிற்கு நாசா செய்த கௌரவம்! புல்லரிப்பில் இந்தியர்கள்!

nasa, isro, scitech, Chandrayaan-1, tech news, smartphone, technology, news , india, நாசா, ஸ்மார்ட்போன் , தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

|

ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள், சந்திர மேற்பரப்பில் "தண்ணீர் விண்கற்களின்" பொழிவு நிகழ்ந்துள்ளதை உறுதி செய்து உள்ளனர். சுவாரஸ்யம் என்னெவென்றால், இது சார்ந்த அறிவிப்பில் நாசா, இஸ்ரோவின் சந்திரயான் 1 விண்கலத்தை குறிப்பிட்டு உள்ளது.

ஃப்ரம் மூன்

ஃப்ரம் மூன்

ஆம், வாட்டர் ரீலிஸ்டு ஃப்ரம் மூன் என்கிற தலைப்பில் நாசா வெளியிட்டுள்ள நான்கு நிமிட டைரக்டரின் கட் வீடியோவில், எடுத்தவுடனேயே காட்சிப்படுகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றான சந்திராயன் 1 விண்கலம். பின்னரே தொடரும் வீடியோவில் சந்திரனில் மழை பொழிந்ததற்கான ஆதாரங்கள் சார்ந்த அனிமேஷன் விளக்கங்கள் இடம் பெறுகிறது. அதாவது இந்த வீடியோ, விண்வெளி மண்டலத்தில் உறைந்திருக்கும் நீர் சேமிப்புகளை உறுதிப்படுத்துகிறது.

சந்திரனில் மழையா? அதெப்படி சாத்தியம்?

சந்திரனில் மழையா? அதெப்படி சாத்தியம்?

ஆம், சந்திரனில் மழை தான்! இந்த நிகழ்வு ஆனது விண்கல் பொழிவின் போது நடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விண்கல் பொழிவா என்றால் என்ன? - விண்கல் மழை அல்லது விண்கல் பொழிவு என்பது ஒரு வானியல் நிகழ்வாகும், அந்நிகழ்வின் போது இரவு வானின் ஒற்றை புள்ளியில் இருந்து பல விண்கற்கள் பிரகாசமான கதிர் ஒளிகளை வெளிக்கிடும் அல்லது தோன்றும்.


அம்மாதிரியான ஒரு விண்கல் மழை காலத்தில் தான் சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் வெளியிடப்படுவதாக (சிந்தி உள்ளதாக) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். "இது சார்ந்த மேலும் பல விவரங்களைப் பெறுங்கள்" என்று கூறி அந்த வீடியோவவை நாசா ட்வீட் செய்தும் உள்ளது.

சரி இந்த வீடியோவில் (கண்டுபிடிப்பில்) சந்திரயான் 1-க்கு என்ன வேலை?

என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை முதன் முதலாக கண்டிபிடித்ததே இஸ்ரோவின் சந்திரயான் 1 தானே! சந்திரனின் மேற்பரப்பு முழுவதும் பரவி கிடந்த ஹைட்ராக்ஸைல் மூலக்கூறுகளை கண்டுபிடித்ததே சந்திராயன் 1 தான். இந்த ஆய்வும் அதன் முடிவும் தான் நிலவில் நீர் ஆதாரத்தை கண்டுபிடித்த உறுதியான சாட்சி ஆகும். இந்த குறிப்பை வெளியான நாசாவும் வீடியோவும் முன்மொழிகிறது. "விண்கல் பொழிவு நிகழும் போது, சந்திரனின் மெல்லிய வளிமண்டலத்திற்குள் குறுகிய காலம் மட்டுமே பிழைத்து இருக்கும் நீரின் நீராவி உட்செலுத்தப் படுகிறது" என்கிறார்கள் லாரல், லாரெல்லில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைட் பிசிக்ஸ் ஆய்வகம் மற்றும் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை கவனிக்காமலேயே இருந்தனர்!

விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை கவனிக்காமலேயே இருந்தனர்!

இதற்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகள் ஆனது, விண்கல் பொழிவானது நிலவில் நீராவி போன்ற நீரை வெளியேற்ற முடியும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த குறிப்பிட்ட நிகழ்வை கவனிக்காமலேயே இருந்தனர். தற்போது அது இறுதியாக நாசாவின் ரோபோடிக் மிஷன் லூனார் அட்மாஸ்பியர் அன்ட் டஸ்ட் என்விராய்ன்மென்ட் எக்ஸ்புளோரர் (LADEE) மூலமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது சந்திரன் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் கட்டமைப்பு மற்றும் கலவை பற்றிய விரிவான தகவலைச் சேகரிக்கும் நோக்கத்தின் கீழ் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு விண்கலம் ஆகும்.

வரலாறு மிக முக்கியம்.! செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!வரலாறு மிக முக்கியம்.! செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!

அடையாளம் காணப்பட்டு உள்ளன!

அடையாளம் காணப்பட்டு உள்ளன!

லாடீ (LADEE) விண்கலத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆனது சந்திரனின் நீர் வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவுவதோடு சேர்த்து, நிலவின் மீது நடக்கும் நீண்ட கால நடவடிக்கைகளையும், அதை ஆழமாக ஆராய வேண்டும் என்கிற மனித ஆர்வத்தை தூண்டுவதற்காக ஒரு சாத்தியமான ஆதாரம்" என்று நாசா தெரிவித்துள்ளது. சந்திர மழை நிகழ்வுகள் சார்ந்த டஜன் கணக்கான ஆதாரங்கள் லாடீ (LADEE) சேகரித்த தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும், குறிப்பாக ஜனவரி 9, ஏப்ரல் 2, ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 9, 2014 போன்ற நாட்களில் நிகழ்ந்த விண்கல் மழையானது அடையாளம் காணப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருக்கா? இல்லையா? என்று கேட்டால், இருக்கு ஆனால் இல்லை என்பதே பதில்!

இருக்கா? இல்லையா? என்று கேட்டால், இருக்கு ஆனால் இல்லை என்பதே பதில்!

"சந்திரனில் எச்2ஓ (நீர்) மற்றும் எச்2ஓ-வின் மிகவும் நெருங்கிய எதிர்வினை உறவினர் ஆன ஹைட்ராக்ஸைல் (ஓஎச்) இருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆனால் அது பரவலாக விநியோகிக்கப்படுகிறதா மற்றும் எந்த அளவில் இருக்கும் என்பது சார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன" என்று நாசா கூறுகிறது. சந்திரனின் மேற்பரப்பு மிகவும் வறண்டு இருப்பதே அம்மாதிரியான விவாதத்திற்கு காரணம் என்பதையும் நாசா ஏற்றுக்கொள்கிறது.

அமெரிக்க போர் கப்பல் உடன் மோத சென்ற ரஷ்ய கப்பல்: திக் திக் நிமிடங்கள்!அமெரிக்க போர் கப்பல் உடன் மோத சென்ற ரஷ்ய கப்பல்: திக் திக் நிமிடங்கள்!

பத்து மீட்டர் ஆழத்தில் நீர்!

பத்து மீட்டர் ஆழத்தில் நீர்!

சந்திரயான் 1 ஐ பொறுத்தமட்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் சந்திர கிரக திட்டமாகும். நிலவில் நீரின் இருப்பை கண்டுபிடித்த முதல் விண்கலம் ஆகும். பெறப்பட்ட தரவின் படி, நிலவின் புறக்காற்று மண்டலத்தில், நிலவின் மேற்பரப்பில், மற்றும் துணை மேற்பரப்பில் (பத்து மீட்டர் ஆழத்தில்) நீர் ஆதாரம் உள்ளது.

நிலவில் அரக்கர்களை கண்ட அப்போலோ 11 விண்வெளி வீரர்கள்!நிலவில் அரக்கர்களை கண்ட அப்போலோ 11 விண்வெளி வீரர்கள்!

செயல் இழந்தாலும் ராஜா ராஜாதான்!

செயல் இழந்தாலும் ராஜா ராஜாதான்!

சந்திரயான் -1 விண்கலம் பல தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 28, 2009 இல் இருந்து ரேடியோ சிக்னல்களை அனுப்பத் தவறிவிட்டது. அதன் பின்னர் சந்திராயன் 1-ன் பணியானது முடித்துக்கொள்ளப்படுவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகளாக செயல்பட திட்டமிடப்பட்ட இந்த ஆய்வானது, அதன் விண்வெளி பயணத்தின் ஒரு வருடத்திற்குள் திட்டமிட்ட குறிக்கோள்களில் 95 சதவிகிதத்தை அடைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இரண்டாவது சந்திர கிரக திட்டமான சந்திரயான் 2 ஆனது இந்த ஆண்டு ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏவப்பட உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி மையம் சுற்றுலாதலமாகிறது: ஒரு இரவு கட்டணம் இவ்வளவு?சர்வதேச விண்வெளி மையம் சுற்றுலாதலமாகிறது: ஒரு இரவு கட்டணம் இவ்வளவு?

இஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா! பின்னணி என்ன?

இஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா! பின்னணி என்ன?

சிலர் இருக்கிறார்கள்! சொந்த நாட்டை குறை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது; வேறொரு நாட்டுடன் சொந்த நாட்டை ஒப்பீடு செய்து மட்டம் தட்டவில்லை என்றால் அவர்களுக்கு சோறு தொண்டைக்குள் இறங்காது.

அம்மாதிரியான ஆட்களுக்கு சொந்த நாட்டின் மக்கள் தொகை பற்றியோ, நாட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி, அவ்வளவு ஏன் நிதி என்றால் என்னவென்று கூட தெரியாது.

ஆன்டி-இந்தியன்ஸ்களுக்கு!

அது அமெரிக்காவோ, அல்லது ஜப்பானோ அல்லது சீனாவோ, யார் என்ன செய்தாலும் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும், செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் - இந்தியா இஸ் வேஸ்ட்! அப்படியான ஆன்டி-இந்தியன்ஸ்களுக்கு இஸ்ரோஸின் வாயிலாக ஒரு தகவலை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

பேலோட் விவரம் வெளியாகியுள்ளது!

பேலோட் விவரம் வெளியாகியுள்ளது!

விண்வெளிக்குள் செல்ல காத்திருக்கும் இஸ்ரோவின் சந்திரயான் -2 பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது, அதாவது அதன் பேலோட் (சுமந்து செல்லும் பொருட்கள்) விவரம் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தொகுதிக்கும் இடம் பெற்றுள்ளது.

வரிசையில் நாசாவும் நின்றுள்ளது!

வரிசையில் நாசாவும் நின்றுள்ளது!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனை நோக்கி செல்ல இந்தியா தயாராக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கருத்துப்படி, சந்திராயன் 2-வில் 13 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேலோட்களும், ஒரு ரோவரும், ஒரு லேண்டரும் மற்றும் ஒரு ஆர்பிட்டரும் மட்டுமில்லாமல் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு செயலூக்க சோதனை தொகுதி ஒன்றையும் சுமந்து செல்ல உள்ளது.

"ஆமாம்" சொல்லாமல் இழுத்தடித்து இஸ்ரோ

நாசாவின் இந்த தொகுதி (மாட்யூல் ) பூமி மற்றும் அதன் ஒரே இயற்கை செயற்கைக்கோள் (நிலவு) ஆகியவற்றுக்கு இடையேயான தூரத்தை அளவிடும் இலக்கை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே இஸ்ரோ உடனான ஒத்துழைப்பை பற்றி நாசா உறுதிப்படுத்தியிருந்த போதிலும் கூட, அதுசார்ந்த எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் இஸ்ரோ செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் தற்போது அதை நிகழ்த்தி உள்ளது

பல்பு வாங்கிய நாசா!

பல்பு வாங்கிய நாசா!

இதற்கு முன்னதாக நாசா இதேபோன்றதொரு நடவடிக்கையை இஸ்ரேலின் விண்கலம் ஒன்றில் நிகழ்த்தியதும், அந்த விண்கலம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு பதிலாக, மோதி உடைந்தும் இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் கொடுத்த அந்த "அடி"க்கு இஸ்ரோ மருந்து போட்டும் என்பதில் எந்த சந்தேகமும் நாசாவிற்கு இல்லை என்பது வெளிப்படை.

வெளிநாட்டு பேலோட்களை கொண்டு செல்வது இஸ்ரோவிற்கு புதிதா?

வெளிநாட்டு பேலோட்களை கொண்டு செல்வது இஸ்ரோவிற்கு புதிதா?

இல்லவே இல்லை! மிகவும் பழக்கப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் சந்திரனின் மேற்பரப்பில் நீரின் இருப்பை கண்டுபிடித்து பெரும் வெற்றியாக அறிவிக்கப்பட்ட சந்திரயான் -1 திட்டமானது கூட மொத்தம் ஐந்து வெளிநாட்டு பேலோட்களைக் கொண்டு சென்றது. அதில் மூன்று ஐரோப்பாவிலிருந்தும் மற்றும் இரண்டு பேலோட்கள் அமெரிக்காவில் இருந்தும் வந்தன.

சொல்லியடிக்கும் கில்லி!

சொல்லியடிக்கும் கில்லி!

சந்திராயன் 2-ன் தொழில்நுட்ப மேம்பாடு ஆனது ஜூலை 9 முதல் 16 என்கிற தற்காலிக கால இடைவெளியில் நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் விண்ணிற்குள் செலுத்தப்பட்டு, சுமார் 3.8 டன் எடையை சுமந்தபடி, சரியாக செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரை இரக்கத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்: நாசாவின் அபூர்வ ஆராய்ச்சிவிண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்: நாசாவின் அபூர்வ ஆராய்ச்சி

விக்ரம் மற்றும் ப்ரயான்?

விக்ரம் மற்றும் ப்ரயான்?

சந்திராயன் சுமந்து செல்லும் லேண்டர் விக்ரம் ஆனது பத்திரமாக நிலவில் தரை இறங்கிய பின், ரோவர் ப்ரயான் ஆனது நிலவின் மேற்பரப்பில் சுமார் 300-400 மீட்டர் தொலைவிலான சுழற்சியை மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்து உள்ளார்.

ஆழமான ஆய்வுகள்!

ஆழமான ஆய்வுகள்!

மேலும் ரோவர் ப்ரயான் ஆனது நிலவில் மொத்தம் 14 புவி நாட்களை கழிக்கவும், பல்வேறு விஞ்ஞான சோதனைகள் நடத்தவும் உள்ளது. குறிப்பாக அது சந்திர மேற்பரப்பின் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்து, தரவரிசை செய்யும். எல்லாவற்றை விடவும் சிறப்பாக தரை இறங்கிய 15 நிமிடங்களுக்குள் நிலவை படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகில் ஏறி!

முதுகில் ஏறி!

ரோவர், லேண்டர் மற்றும் நாசாவின் மாட்யூல் உடன் சேர்ந்து, பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் தரவு சேகரிப்பு நோக்கத்திற்காக நாட்டிலுள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பேலோட்களும் சந்திராயன் 2-வின் முதுகில் ஏறி விண்வெளிக்குள் செல்கின்றன.

பேலோட்களின் விவரங்கள்:

பேலோட்களின் விவரங்கள்:

இஸ்ரோ சாட்டிலைட் சென்டரின் லார்ஜ் ஏரியா சாப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (லாஸ்) மற்றும் அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட பிஸிக்கல் ரிசர்ச்லேப்பின் சோலார் எக்ஸ்ரே மானிட்டர், அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரின் இமேஜிங் ஐஆர் ஸ்பெக்ட்ரோமீட்டர், எஸ்ஏசி-ஐ சேர்ந்த சின்தடிக் அப்பெஷர் ரேடார் மற்றும் டெர்ரெயின் மேப்பிங் கேமரா 2, திருவனந்தபுரம் சென்டரை சேர்ந்த நியூட்ரல் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர், விக்ரம் லேண்டர், ராம்பா எனப்படும் ரேடியோ அனடாமி ஆப் மூன் பவுண்ட் ஹைப்பர்சென்சிடிவ் அண்ட் அட்மாஸ்பியர், சந்திராவின் சர்பேஸ் தெர்மோ பிஸிக்கல் சோதனையின் (ChaSTE), சந்திரனின் நிலக்கரிச் செயற்பாட்டுக்கான கருவி (ILSA), லேசர் ரெஃப்லக்ட்டிவ் அர்ரே (LRA), ரோவர் சென்சார் காம்ப்ளிமென்ட் (APXS, LIBS) மற்றும் லேசர் இன்டியூசிட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS).

<strong>செவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்!</strong>செவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்!

Best Mobiles in India

English summary
Its-raining-on-the-Moon-NASA-refers-to-ISRO-Chandrayaan-1-crucial-discovery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X